ஆலத்தூர் மயிலாயியம்மன் கோயில்

ஆலத்தூர் மயிலாயியம்மன் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆலத்தூர் எனுமிடத்தில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும். [1] [2]இக்கோயில் வடக்கு நோக்கிவாறு அமைந்துள்ளது. இக்கோயிலில் வைஷ்ணவி தேவிக்கு பதிலாக மயிலாயி அம்மன் உள்ளார். மயிலாயி அம்மனை திருமகள் என்கின்றனர். மயிலாயியை வழிபட்டால் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கையாகும்.

மூலவர்

தொகு

இக்கோயிலில் கன்னிமார்கள் ஒரே திசையில் அமைந்துள்ளார்கள். இவர்களின் நடுவே மயிலாயி அம்மன் உள்ளார்.

பிராம்மி, மகேஸ்வரி, வராகி, வைஷ்ணவி, கவுமாரி, இந்திராணி, சாமுண்டி ஆகியோரை சப்த கன்னிகள் என்கின்றனர். இவர்களில் நடுவில் உள்ள வைஷ்ணவி தேவிக்குப் பதிலாக இங்கு மயிலாயி அம்மன் உள்ளார். தமிழகத்தின் வேறு எந்தக் கோயில்களிலும் இவ்வாறு மயிலாயி அம்மன் இல்லை.

சன்னதிகள்

தொகு

இக்கோயிலில் மகா கணபதி, சாம்பவன், முப்புலி கருப்பண்ணசாமி, மதுரைவீரன், பட்டவன் ஆகியோரின் சன்னதிகள் அமைந்துள்ளன.

திருவிழாக்கள்

தொகு

மயிலாயி அம்மன் கோயிலில் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் திருவிழா நடக்கிறது.

இவற்றையும் காண்க

தொகு

ஆதாரங்கள்

தொகு
  1. http://www.dailythanthi.com/2014/07/29110556/Like-Mind-Of-lifeMahalakshmi.vpf மனம் போல் வாழ்வு தரும் மகாலட்சுமி தினத்தந்தி ஜூலை 29,2014
  2. தீபம் ஏப்ரல் 20 2016 இதழ் பக்கம் 33