மதுரை வீரன்

தமிழ்நாட்டவர் காவல் தெய்வங்களில் ஒருவராவார்
(மதுரைவீரன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மதுரை வீரன் தமிழ்நாட்டவர் காவல் தெய்வங்களில் ஒருவராவார். இவர் வெள்ளையம்மாள், பொம்மி என்று இருபெண் தெய்வங்களுடன் தம்பதி சமேதராக காட்சியளிக்கின்றார். பெரும்பாலான இந்துக் கோயில்களில் இவர்களுக்கென தனிச்சந்நிதி காணப்படுகிறது. மதுரைவீரன் மட்டும் தனித்து வணங்கப்படுவதில்லை, அவருடைய இரு மனைவியருடன் சேர்ந்தே காட்சியளிக்கிறார்.

மதுரை வீரன்
மதுரை வீரன் சிலை, முனீசுவரர் கோவில், கோலாலம்பூர்
இடம்மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் கிழக்கு கோபுர வாயில்
கிரகம்கி.பி.1608 - 1641
மந்திரம்நிறைந்த பக்தியுடன் அவர் பெயரை உச்சரித்தாலே போதும்.
ஆயுதம்வாள் / அரிவாள் மற்றும் வேல் கம்பு
துணைபொம்மி, வெள்ளையம்மாள்
பெற்றோர்கள்திரு.சின்னான்- திருமதி.செல்லி
சமயம்இந்து மதுரை, தமிழ்நாடு, கேரளம், மலேசியா, சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா,இலங்கை
விழாக்கள்ஆவணி - 17

உருவ அமைப்பு

மதுரை வீரன் சிலை வெள்ளையம்மாள், பொம்மி என இருவரும் இருபுறமிருக்க மதுரைவீரன் சிலை நடுவே நிற்பது போல் வடிவமைக்கப்படுகிறது. ஓங்கிய அரிவாளுடனும் முறுக்கிய மீசையுடனும் கம்பீரமாக காட்சியளிக்கின்றார்.

வழிபாடு

மதுரைவீரன் ஒரு முக்கிய தமிழ் தெய்வம். ஆண்டு தோறும் ஆவணி - 17 ம் நாள் மதுரைவீரன் வழிபாடு தமிழர் மத்தியில் பல கிராமங்களில் இருந்து வருகிறது. மதுரைவீரனை தமிழர் பலர் குலதெய்வமாக கொண்டுள்ளனர். மதுரை வீரன் வழிபாடு மலேசியா, ரியூனியன் மற்றும் கரிபியன் தீவுகளில் வாழும் தமிழர் மத்தியிலும் பரவலாக இருக்கின்றது.[சான்று தேவை] மதுரை வீரன் வழிபாட்டை சிறுதெய்வ வழிபாடு என்று சமய ஆய்வாளர் குறிப்பிடுவதுண்டு.

தொட்டியச் சக்கிலியர் இனத்தை சேர்ந்த மாதியச் சின்னான், செல்லி தம்பதிகளின் மகனாக கி.பி.1608 - ல் பிறந்தார்.[1] திருச்சி பகுதியை ஆட்சி செய்து கொண்டிருந்த ராஜகம்பளம் இனத்தை சேர்ந்த பொம்மையா நாயக்கர் என்பவரின் மகள் பொம்மி வயதுக்கு வருகிறாள் . ராஜகம்பளம் சமுதாயத்தின் வழக்கப்படி வயதுக்கு வந்த அந்த பெண்ணை காட்டில் குடில் அமைத்து ஒரு மாதம் காவல் செய்ய வேண்டும்.காவல் பொறுப்பை தந்தையின் உடல்நல குறைவால் மதுரைவீரன் ஏற்றார். பொம்மி இவரின் வீரம் மற்றும் அழகில் மயங்க இருவரும் காதல் கொண்டு ஊரை விட்டு வெளியேறுகின்றனர். இது பொம்மையா நாயக்கருக்கு தெரிந்தவுடன் மிகுந்த கோபத்தில் இருந்தார். அவருடைய மகன் பெரும்படையுடன் மதுரைவீரனை எதிர்க்கின்றார். அவர் அருந்ததியர்கள் படையுடன் கடுமையாக போரிட்டு வெற்றிகொள்கின்றார். மதுரையில் திருமலைநாயக்கர் மன்னரிடம் விஷயத்தை தெரிவிக்கின்றார். அன்றைக்கு கள்வர்களால் மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார ராஜ்ஜியங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின. அவர்களை அடக்கமுடியாமல் ராஜ்ஜியங்கள் மிரண்டுஇருந்தன. அந்த நேரத்தில் மதுரைவீரனின் வீரத்தை அறிந்து திருமலை நாயக்கர் கள்வர்களின் அட்டூழியங்களை அடக்க மதுரைவீரனை பயன்படுத்திக்கொண்டார், மதுரைவீரனின் அருந்ததியர் படை மதுரை சுற்றுவட்டார பகுதியில் இருந்த கள்வர்கள் கொட்டத்தை ஒடுக்கி மதுரை மக்களை காத்தது. இந்நிலையில் திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில் கள்வர்களால் மக்கள் பாதிக்கப்பட்டிருந்தனர். இவரின் வீரத்தை அறிந்த புதுக்கோட்டை மன்னர் தொண்டைமான் கேட்டு கொண்டதற்கிணங்க திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் அருந்ததியர்கள் படையுடன் சென்று போரிட்டு மக்களுக்கு பெரும்துன்பத்தை கொடுத்துக்கொண்டிருந்த கள்வர்கள் கூட்டத்தை ஒடுக்கி மக்களை பாதுகாத்தார். அதனாலேயே தென்மாவட்டங்களில் மதுரைவீரனை அனைத்து இனத்தவரும் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இவரின் வீரத்தைக் கண்ட கள்ளர் இன பெண் வெள்ளையம்மாள் மதுரை வீரனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இந்நிலையில் சூதுசெய்து மதுரைமீனாட்சி அம்மன் ஆலயத்திற்குள் மதுரை வீரனை பிடித்து மாறுகால், மாறுகை என்னும் முறையில் கொலை செய்து விடுகின்றனர். நடந்த அநியாயத்தை பார்த்து மீனாட்சியம்மன் நேரடியாக தரிசனம் வழங்கி மதுரையை அழிக்க முற்பட்டாள். மதுரைவீரன் கேட்டுக்கொண்டதற்கு மனமிறங்கி அவரை ஆட்கொண்டு கிழக்கு கோபுரவாசலில் கம்பத்தடி வீரனாக வைத்துக்கொண்டார். முதல் பூஜை அவருக்கு நடந்தபின்புதான் மீனாட்சிக்கே பூஜை நடக்கும். மதுரைவீரன் மாறுகால் மாறுகை வாங்கப்பட்டதை அறிந்த அருந்ததியர் படை மதுரையை துவம்சம் செய்தது. அவர்களிடமும் மதுரைவீரன் கேட்டுக்கொண்டதற்கு இணங்கி அருந்ததியர்கள் போரை கைவிட்டனர் என்பது வரலாறு. கள்வர்களிடம் இருந்து மக்களை பாதுகாத்ததினால் தென்மாவட்டங்களில் மதுரைவீரனை அனைத்து இனத்தவரும் குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

மேலும் மதுரை வீரனை மாறுகால் மாறுகை முறையில் கொன்றவர்களுக்கு மன்னன் பரிசாக வழங்கிய ரத்த பட்டயம் மூலம் நிலங்களை வழங்கியதாகவும் அந்நிலங்களை இன்று வரை அவர்களது வாரிசுகள் வழிவழியாக அனுபவித்து வருவதாக ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்.[சான்று தேவை]

 
ஆவணி விழா, வரலாறு கூறல்

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் உம்பளச்சேரி அடுத்த மகாராஜபுரம் மேல் பாதி செட்டிப்புலம் எல்லையில் உள்ள ஆற்றின் கரைக்கு ஒட்டியபகுதியில் மர்தூரான்கொன்றறை என்ற இடம் உள்ளது. இந்த இடத்தில் மதுரை வீரன் குதிரையில் வந்த போது கிழக்கு நோக்கி பாயும் தொம்பை ஆற்றினை வடக்கு புறக் கரையிலிருந்து தெற்குப் புறக் கரைக்கு ஆற்றின் குறுக்காக கடக்க குதிரை ஆற்றில் இறங்கிபோது குதிரை சேற்றில் சிக்கியதாகவும் விரட்டி வந்த எதிரிப் படைகள் மதுரை வீரனை சுற்றி வளைத்து வெட்டி கொன்றதாகவும் செய்தி அறிந்து சாம்பவ படையினர் அங்கு சென்ற போது வெட்டி கிடந்த வீரனை கண்டு கரையை கடந்து தெற்கு கரையில் வெட்டப்பட்டதால் அவர் தெற்கே செல்ல வந்துள்ளார் எனவே ஊரின் தெற்கு எல்லையில் தூக்கி சென்று அடக்கம் செய்யலாம் என முடிவு செய்து செட்டிபுலம் தெற்கு காடு என்ற இடத்தில் அடக்கம் செய்யப்பட்டதாகவும் அவ்விடத்தில் தெற்குவீரன் என்ற கோவில் வழிபாடு ஏற்பட்டதாகவும் ஆவணி பவுர்ணமியில் விழா எடுத்து வருவதுமாக மரபுவழிசெய்திகள்உள்ளன.[சான்று தேவை] மதுரை வீரன் கொன்ற கரை இன்றும் மர்தூரான்கொன்றறை என வழக்கத்தில் இருந்துவருகிறது. ஆவணி மாதம் பவுர்ணமி அன்று அந்த ஆற்றின் கரையில் படையல் இட்டு ஒரு பிரிவினர் வழிபாடு செய்கின்றனர்.

கோயில்கள்

  • மதுரை வீரன் சிலை, முனீசுவரர் கோவில், கோலாலம்பூர்
  • மதுரைவீரன் கோயில் 87ஊர் ஆப்பாடியான் பங்காளி மலசை கிழவன் வாரிசு 4கிழவன் சாம்பவர்(பறையர்) குடிபாட்டு கோயில் பிச்சனாபட்டி

நூல்களில்

  • வாய்மைநாதன் எழுதிய மதுரை வீரன் நூல்[2]

திரைப்படங்களில்

  1. எம். ஜி. ஆர். நடித்த மதுரை வீரன்
  2. மதுரை வீரன் (1939 திரைப்படம்)

மேற்கோள்கள்

  1. அ. விநாயக மூர்த்தி, ed. (1978). மதுரை வீரன் அம்மானை. கூடல் பதிப்பகம், மதுரை. p. 32. நா . வானமாமலை கூறும் கருத்து இங்கே ஒப்பு நோக்கத்தகும். கிருஷ்ணதேவராயர் ஆணையின்படி தமிழ் நாட்டிற்கு விசுவநாத நாயக்கர் தமிழ் நாட்டிற்கு விசுவநாத நாயக்கர் வந்தபோது அவர்தம் படையுடன் பெரும் அளவில் வந்தவர்கள் தொட்டியர் (சக்கிலியர்) குடியினர்.அவர்கள் நாயக்கர் வழியினருடைய சேனைகளுக்குச் செருப்புத் தைத்துக் கொடுத்து வந்தனர் . அவர்கள் காவல் தொழிலும் புரிந்தனர். மதுரை வீரனை வளர்த்தவன் அத்தொட்டியர் குடியைச் சேர்ந்த மாதியச் சின்னான் . அவனும் மதுரை வீரனும் செருப்புத் தைக்கும் தொழில் செய்தனர் ; காவல் தொழிலும் செய்தனர்.
  2. "Madurai Veeran - மதுரை வீரன் » Buy tamil book Madurai Veeran online". www.noolulagam.com.

வெளி இணைப்புகள்

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
மதுரை வீரன்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரை_வீரன்&oldid=3810399" இலிருந்து மீள்விக்கப்பட்டது