அட்ட பைரவர்கள்

காலபைரவர், சிவபெருமானின் ருத்திர ரூபம் . முதலில் தோன்றிய பைரவர் சொர்ண பைரவரே ஆவார். ஒரு வடிவம்

அட்ட பைரவர்கள் என்பவர்கள் எண் திசைகளுக்கு ஒன்றென விளங்கும் எட்டு பைரவர்கள் ஆவார். சில கோயில்களில் பைரவிகளுடன் இணைந்து தம்பதி சகிதமாகவும் இந்த பைரவர்கள் காட்சிதருகிறார்கள்.

வகைகள்

  1. அசிதாங்க பைரவர்
  2. ருரு பைரவர்
  3. சண்ட பைரவர்
  4. குரோதன பைரவர்
  5. உன்மத்த பைரவர்
  6. கபால பைரவர்
  7. பீட்சன பைரவர்
  8. சம்ஹார பைரவர்


வரிசை பைரவர் பெயர் வாகனம் சக்தி வடிவம் கிரக அதிபதி கோயில்
1 அசிதாங்க பைரவர் அன்னம் பிராம்ஹி குரு விருத்தகாலர் கோயில்
2 ருரு பைரவர் காளை மகேஷ்வரி சுக்ரன் காமட்சி கோயில்
3 சண்ட பைரவர் மயில் கௌமாரி செவ்வாய் துர்க்கை கோயில்
4 குரோதன பைரவர் கழுகு வைஷ்ணவி சனி காமாட்சி கோயில்
5 உன்மத்த பைரவர் குதிரை வராகி புதன் பீம சண்டி கோயில்
6 கபால பைரவர் யானை இந்திராணி சந்திரன் லாட்பசார் கோயில்
7 பீட்சன பைரவர் சிங்கம் நரசிம்மி கேது பூத பைரவ கோயில்
8 சம்ஹார பைரவர் நாய் சாமுண்டி ராகு திரிலோசன கோயில்

அசிதாங்க பைரவர்

அசிதாங்க பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் முதன்மையானவர் ஆவார். அன்னத்தினை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் குருவின் கிரக தோசத்திற்காக அசிதாங்க பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான பிராம்ஹி விளங்குகிறாள்.

ருரு பைரவர்

ருரு பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் இரண்டாவது தோற்றமாவார். காளையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சுக்கிரனின் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான மகேஷ்வரி விளங்குகிறாள்.

சண்ட பைரவர்

சண்ட பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் மூன்றாவது தோற்றமாவார். மயிலை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் செவ்வாய் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான கௌமாரி விளங்குகிறாள்.

குரோதன பைரவர்

குரோதன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் நான்காவது தோற்றமாவார். கழுகை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சனி கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வைஷ்ணவி விளங்குகிறாள்.

உன்மத்த பைரவர்

உன்மத்த பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஐந்தாவது தோற்றமாவார். குதிரையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் புதன் கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான வராகி விளங்குகிறாள்.

கபால பைரவர்

கபால பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஆறாவது தோற்றமாவார். யானையை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் சந்திர கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான இந்திராணி விளங்குகிறாள்.

பீட்சன பைரவர்

பீட்சன பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் ஏழாவது தோற்றமாவார். சிங்கத்தை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் கேது கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான நரசிம்மி விளங்குகிறாள்.

சம்ஹார பைரவர்

சம்ஹார பைரவர் அஷ்ட பைரவ மூர்த்தி வடிவங்களில் எட்டாவது தோற்றமாவார். நாயை வாகனமாக கொண்டவர். நவகிரகங்களில் ராகு கிரக தோசத்திற்காக இந்த பைரவரை சைவர்கள் வணங்குகிறார்கள். இவருடைய சக்தி வடிவமாக சப்த கன்னிகளில் ஒருத்தியான சாமுண்டி விளங்குகிறாள்.[1]

ஆலயங்கள்

காசி மாநகரில் திசைக்கொன்றென எட்டு திசைகளிலும் பைரவர் கோவில் அமைந்துள்ளது. அவை அமைந்துள்ள இடங்கள்

  • அசிதாங்க பைரவர் - விருத்தகாலர் கோயில்
  • குரோதன பைரவர் - காமாட்சி ஆலயம், மயிலாடுதுறை அருள்மிகு பசுபதீஷ்வரர் கோயில்
  • உன்மத்த பைரவர் - பீம சண்டி கோயில்
  • ருரு பைரவர் - அனுமன் காட்டு
  • கபால பைரவர் - லாட் பஜார்
  • சண்ட பைரவர் - துர்க்கை கோயில்
  • பீட்சன பைரவர் - பூத பைரவர்
  • சம்ஹார பைரவர் - த்ரிலோசன சங்கம்

நாகப்பட்டனம் மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோயிலில் அஷ்டபைரவர்களுக்கு என தனி சன்னதி உள்ளது.[2]

இவற்றையும் காண்க

மேற்கோள்களும் குறிப்புகளும்

  1. http://www.sivabhogam.com/astabairavar.html பரணிடப்பட்டது 2016-05-27 at the வந்தவழி இயந்திரம் அஷ்ட பைரவ
  2. http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=180450&cat=504 பரணிடப்பட்டது 2013-04-05 at the வந்தவழி இயந்திரம் சீர்காழி அஷ்ட பைரவர் கோயிலில் புதாஷ்டமி வழிபாடு பார்த்த நாள் ஜூலை 15 2015

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=அட்ட_பைரவர்கள்&oldid=4069479" இலிருந்து மீள்விக்கப்பட்டது