ஆலி பள்ளிவாசல்

இந்தியப் பள்ளிவாசல்

ஆலி பள்ளிவாசல் (Aali Masjid) இந்தியாவின் சம்மு-காசுமீர் மாநிலம் சிறிநகரில் அமைந்துள்ளது. அலி பள்ளிவாசல் என்ற பெயராலும் இது அழைக்கப்படுகிறது. கி.பி 1471 ஆம் ஆண்டில் சாமிரி மன்னர் சுல்தான் அசன் சாவின் காலத்தில் இப்பள்ளிவாசல் கட்டப்பட்டது. இதன் கட்டிட அமைப்பு சிறிநகர் ஈத்கா வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ஒரு மிகப்பெரிய வரலாற்று சிறப்பு கொண்ட பள்ளிவாசலாகும். சிறிநகரில் அமைந்துள்ள சாமியா பள்ளிவாசலுக்குப் பிறகு இதுவே காசுமீர் பள்ளத்தாக்கின் இரண்டாவது பெரிய பள்ளிவாசலாகும். [1] இந்த கட்டிடம் மத்திய ஆசியா மற்றும் உள்ளூர் மரவேலை கட்டுமான மரபுகளுக்கு இடையே ஒரு தனித்துவமான தொகுப்பை இதன் கட்டுமானம் காட்டுகிறது. பள்ளிவாசல் 4 மீ × 4 மீ கட்டத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. 0.95 மீ சுற்றளவு கொண்ட 5 மீ உயரமுள்ள 151 மர நெடுவரிசைகள் கட்டடத்தைத் தாங்குகின்றன. 61.2 மீ × 20.5 மீ அளவுகள் கொண்ட தரை தளத்துடன் பிரதான மண்டபம் காணப்படுகிறது. மொத்தமாக இதுபோன்ற 75 தொகுதிகள் இங்குள்ளன. அனைத்து 151 தேவதாரு மர நெடுவரிசைகளும் செதுக்கப்பட்ட கல் பீடங்களில் மாறுபட்ட வடிவமைப்புகளுடன் வைக்கப்பட்டுள்ளன. பள்ளிவாசலின் ஒட்டுமொத்த பரப்பளவு 1844 சதுர மீட்டர்களாகும்.

ஆலி பள்ளிவாசல்
Aali Masjid
அடிப்படைத் தகவல்கள்
புவியியல் ஆள்கூறுகள்34°06′18″N 74°47′39″E / 34.1049°N 74.7942°E / 34.1049; 74.7942
சமயம்இசுலாம்
மண்டலம்காஷ்மீர் பள்ளத்தாக்கு
மாநிலம்சம்மு மற்றும் காசுமீர்
மாவட்டம்சிறிநகர்
மாநகராட்சிசிறிநகர் நகராட்சி மன்றம்
செயற்பாட்டு நிலைஇயங்குகிறது

மேற்கோள்கள்

தொகு
  1. "Aali Masjid". Archived from the original on 2014-08-09.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலி_பள்ளிவாசல்&oldid=3194959" இலிருந்து மீள்விக்கப்பட்டது