ஆல்ஃபா-புரொப்பியோலாக்டோன்
α-புரொப்பியோலாக்டோன் (α-Propiolactone) என்பது (C3H4O2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் 2-மெத்தில்- α-லாக்டோன் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இலாக்டோன் குடும்பத்தில் இச்சேர்மம் ஒரு மூன்று வளைய உறுப்பினராகும். 2-புரோமோ புரொப்பியோனேட்டு எதிர்மின் அயனியிலிருந்து α- புரொப்பியோலாக்டோனைப் பெற முடியும் [1]. வாயு நிலையில் 2-குளோரோபுரொப்பியோனிக் அமிலம் சிதைவடையும் போது இடைநிலை விளைபொருளாக இது கிடைக்கிறது [2]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3-மெத்திலாக்சிரான்-2-ஒன்
| |
வேறு பெயர்கள்
α-புரொப்பியோலாக்டோன்
2-மெத்தில்-α-லாக்டோன் | |
இனங்காட்டிகள் | |
ChEMBL | ChEMBL1200627 |
பப்கெம் | 15857753 |
பண்புகள் | |
C3H4O2 | |
வாய்ப்பாட்டு எடை | 72.06 g மோல்−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ The Chemical Thesaurus, (2R)-2-Methyl alpha-lactone data page. Accessed on 2009-10-07.
- ↑ Vicent S. Safont, Vicente Moliner, Juan Andrés, Luís R. Domingo (1997), Theoretical Study of the Elimination Kinetics of Carboxylic Acid Derivatives in the Gas Phase. Decomposition of 2-Chloropropionic Acid. J. Physical Chemistry series A, volume 101, issue 10, pp. 1859–1865. எஆசு:10.1021/jp962533t
.