அசிட்டோலாக்டோன்

கீட்டோனின் எப்பாக்சைடு

அசிட்டோலாக்டோன் (Acetolactone) என்பது (C2H2O2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் α- அசிட்டோலாக்டோன் என்றும் அழைக்கப்படுகிறது. இலாக்டோன் குடும்பத்தில் உள்ள மிக எளிய உறுப்பினரான இச்சேர்மம் கீட்டோனின் எப்பாக்சைடு என்று விவரிக்கப்படுகிறது. 1997 ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட இச்சேர்மம், பொருண்மை நிரல் ஆய்வு பரிசோதனைகளில் மாறுமியல்புடைய இனமாகக் கருதப்படுகிறது [1]. அசிட்டோலாக்டோனை மொத்தமாக தனிமைப்படுத்த இயல்வில்லை என்றாலும், அதனோடு தொடர்புடைய இனமான பிசு(முப்புளோரோமெத்தில்)அசிட்டோலாக்டோன் ((CF3)2C2O2) என்ற சேர்மம் அறியப்படுகிறது. இச்சேர்மத்திலுள்ள இரண்டு முப்புளோரோமெத்தில் தொகுதிகளிலிருந்து இது மின்னணு உறுதியாக்கம் அடைகிறது. 25 பாகை செல்சியசு வெப்பநிலையில் இதன் அரைவாழ்வுக் காலம் 8 மணிகளாகும். பிசு(முப்புளோரோமெத்தில்)மலோனைல் பெராக்சைடை ஒளிச்சிதைவு செய்வதன் மூலம் அசிட்டோலாக்டோன் தயாரிக்கப்படுகிறது [2]

அசிட்டோலாக்டோன்
Structural formula
Structural formula
Ball-and-stick model
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஆக்சிரான்-2-ஒன்
இனங்காட்டிகள்
42879-41-4 N
ChemSpider 393042 Y
InChI
  • InChI=1S/C2H2O2/c3-2-1-4-2/h1H2 Y
    Key: HZSIFDFXFAXICF-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C2H2O2/c3-2-1-4-2/h1H2
    Key: HZSIFDFXFAXICF-UHFFFAOYAQ
யேமல் -3D படிமங்கள் Image
Image
  • O=C1CO1
  • O=C1OC1
பண்புகள்
C2H2O2
வாய்ப்பாட்டு எடை 58.04 g மோல்−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. Detlef Schröder, Norman Goldberg, Waltraud Zummack, Helmut Schwarz, John C. Poutsma and Robert R. Squires (1997), Generation of α-acetolactone and the acetoxyl diradical •CH2COO• in the gas phase. International Journal of Mass Spectrometry and Ion Processes, Volumes 165-166, November issue, Pages 71-82. எஆசு:10.1016/S0168-1176(97)00150-X
  2. Waldemar Adam, Ju-Chao Liu, Oswaldo Rodriguez (1973), Bis(trifluoromethyl)acetolactone, a Stable α-Lactone. J. Org. Chem., Volume 38, pages 2269–2270. எஆசு:10.1021/jo00952a047

இவற்றையும் காண்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=அசிட்டோலாக்டோன்&oldid=2111399" இலிருந்து மீள்விக்கப்பட்டது