அல்ஜீனிக் அமிலம் (Alginic acid), அல்லது ஆல்ஜின் (algin) பழுப்புக் கடற்பாசிகளில் உள்ள உண்ணக்கூடிய இயற்கை பல்சர்க்கரைப் பொருளாகும். இது நீர்வேட்புப் பொருளாகும்; நீரில் கரைத்து, பிசுபிசுப்பான இயற்கைக் கோந்தைப் பெறலாம். சோடியம், கால்சியம் பொன்மங்கள் சேர்த்துச் அல்ஜினேட்டுகள் எனும் உப்புகளைப் பெறலாம். இதன் நிறம் வெள்ளை முதல் மஞ்சட் பழுப்பு வரை மாறும். இது படலமாகவோ குறுமணிகளாகவோ தூளாகவோ விற்கப்படுகிறது.

ஆல்ஜின்
பெயர்கள்
வேறு பெயர்கள்
அல்ஜீனிக் அமிலம்; E400; [D-ManA(β1→4)L-GulA(α1→4)]n
இனங்காட்டிகள்
9005-32-7 Y
ChemSpider None N
EC number 232-680-1
UNII 8C3Z4148WZ N
பண்புகள்
(C6H8O6)n
வாய்ப்பாட்டு எடை 10,000 – 600,000
தோற்றம் வெள்ளி முதல் மஞ்சள் வரை, நாரிழைத்தூள்
அடர்த்தி 1.601 g/cm3
காடித்தன்மை எண் (pKa) 1.5–3.5
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references
மேக்ரோசிசுட்டிசு பெரிபெரா (Macrocystis pyrifera), பெருங்கடற்பாசியின் அளவில் பெரிய இனம்

ஆல்ஜின் கடற்பாசிகளிலிருந்து சிறப்பாக பழுப்பு நிறப்பாசிகளிருந்து பிரித்து எடுக்கப்படும் ஓர் இயற்கைக் கோந்தாகும். ஆல்ஜினில் சோடியம், பொட்டாசியம், அம்மோனியம், கால்சியம் ஆல்ஜினிக் உப்புகள், புரோப்பைன் கிளைக்கால் ஆல்ஜினேட்டு ஆகியவை அடங்கியுள்ளன. மாக்ரோசிஸ்டிஸ் பைரிபெரா, அஸ்கோஸ்பில்லம் நோடோசம் போன்ற பாசிகளிலிருந்து ஆல்ஜின் பெருமளவில் பிரிக்கப்படுகிறது. கைல், மெக்சிக்கோ, ஆத்திரேலியா ஆகிய இடங்களில் கடற்கரையை ஒட்டி பெருவாரியாகக் கிடைக்கிறது.

இது சூடோமோனாசு ஏருஜினோசா எனும் குச்சுயிரி உருவாக்கும் உயிரிப் படலங்களில் கணிசமான உட்கூறாக அமைகிறது. இந்தக் குச்சுயிரி நாரிழக்கல அழர்சி நோயுள்ள நுரையீரல்களில் காணப்படுகிறது.[1] இந்த உயிரிப் படலமும் பி. ஏருஜினோசா குச்சுயிரியும் உயிர்முறி மருந்துகளுக்கு உயர் எத்திர்ப்பைக் காட்டுகின்றன;[2]ஆனால், பேருண்ணித் தடுப்புக்கு ஆட்படுகின்றன.[3]

கட்டமைப்பு தொகு

அல்ஜீனிக் அமிலம் நேரியல் இணைபலபடியாகும்; இதில் முறையே (1→4)- பிணைந்த β-D-மான்னுரோனேட்டு (M), α-L- பிணைந்த குளூரோனேட்டு (G) எச்சங்களும் உள்ள கூட்டிணைதிறப் பிணைப்பு கொண்ட ஒத்தபலபடி துண்டங்கள் பல்வேறு வரிசைமுறைகளிலும் துண்டங்களிலும் அமைகின்றன.தொடர்வரிசை G-எச்சங்கள் (G-துண்டங்கள்), தொடர்வரிசை M-எச்சங்கள் (M-துண்டங்கள் அல்லது ஒன்றுவிட்டொன்றாக அமையும் M, G-எச்சங்கள் (MG-துண்டங்கள்) ஆகிய ஒத்தபலபடி துண்டங்களில் ஒற்றைப்படி மூலக்கூறுகள் தோன்றலாம். α-L-குளூரோனேட்டு என்பது β-D-மான்னுரோனேட்டின் C-5 எப்பிமர் ஆகும்.

வடிவங்கள் தொகு

சோடியம் அல்ஜினேட்டு (NaC6H7O6) என்பது அல்ஜீனிக் அமிலச் சோடிய உப்பாகும்மிது ஒரு கோந்தாகப் பயன்படுகிறது.

பொட்டாசியம் அல்ஜினேட்டு (KC6H7O6) என்பது அல்ஜீனிக் அமிலப் பொட்டாசியம் உப்பாகும்.

கால்சியம் அல்ஜினேட்டு (CaC12H14O12), என்பது சோடியம் அலிஜினேட்டில் உள்ள பொட்டாசியம் மின்னணுவை கால்சியம் மின்னணுவால் பதிலிட்டுப் பெறப்படுகிறது.

பயன்கள் தொகு

ஆல்ஜின் உணவுப்பொருட்களும், மருந்துகளும், தொழில்சார் வேதிப்பொருட்களும் உருவாக்க பயன்படுகிறது.[4]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Davies, JC (2002). "Pseudomonas aeruginosa in cystic fibrosis: pathogenesis and persistence.". Paediatric Respiratory Reviews 3 (2): 128–34. doi:10.1016/S1526-0550(02)00003-3. பன்னாட்டுத் தர தொடர் எண்:1526-0542. பப்மெட்:12297059. 
  2. Boyd, A; Chakrabarty, AM (1995). "Pseudomonas aeruginosa biofilms: role of the alginate exopolysaccharide.". Journal of Industrial Microbiology 15 (3): 162–8. doi:10.1007/BF01569821. பன்னாட்டுத் தர தொடர் எண்:0169-4146. பப்மெட்:8519473. 
  3. Leid, JG; Willson, CJ; Shirtliff, ME; Hassett, DJ; Parsek, MR; Jeffers, AK (1 November 2005). "The exopolysaccharide alginate protects Pseudomonas aeruginosa biofilm bacteria from IFN-gamma-mediated macrophage killing.". Journal of Immunology 175 (11): 7512–8. doi:10.4049/jimmunol.175.11.7512. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-1767. பப்மெட்:16301659. http://www.jimmunol.org/content/175/11/7512.full.pdf. 
  4. அறிவியல் களஞ்சியம், தொகுதி - 3, தமிழ்ப் பல்கலைக் கழகம் தஞ்சாவூர்

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்ஜின்&oldid=3720251" இலிருந்து மீள்விக்கப்பட்டது