ஆல் தட் பிரீத்ஸ்

ஆவணப் படம்

ஆல் தட் பிரீத்ஸ் (All That Breathes) என்பது சௌனக் சென் இயக்கி 2022 ஆண்டு வெளியான ஒரு ஆவணப்படமாகும். இது ரைஸ் பிலிம்ஸ் பதாகையின் கீழ் சௌனக் சென், அமன் மான், டெடி லீஃபர் ஆகியோரால் தயாரிக்கப்பட்டது. இந்தியாவின் புதுதில்லியில் காயமுற்ற பறவைகளை மீட்டு சிகிச்சை அளிக்கும் உடன்பிறப்புகளான முகமது சவுத், நதீம் ஷேஜாத் ஆகியோரை இந்த ஆவணப்படம் பின்தொடர்கிறது.[2]

ஆல் தட் பிரீத்ஸ்
வெளியீட்டு சுவரிதழ்
இயக்கம்ஷௌனக் சென்
தயாரிப்பு
  • ஷானக் சென்
  • அமன் மான்
  • டெடி லீஃபர்
இசைரோஜர் கௌலா
ஒளிப்பதிவு
  • பென் பெர்னார்ட்
  • ரிஜு தாஸ்
  • சௌம்யானந்தா சாஹி
படத்தொகுப்புசார்லோட் மன்ச் பெங்சென்
விநியோகம்
  • சைட்ஷோ
  • சப்மரைன் டீலக்ஸ்
வெளியீடுசனவரி 22, 2022 (2022-01-22)(சன்டான்ஸ்)
அக்டோபர் 21, 2022 (திரையரங்கு)
ஓட்டம்91 நிமிடங்கள்
நாடு
  • இந்தியா
  • ஐக்கிய இராச்சியம்
  • அமெரிக்கா
மொழிஇந்தி
மொத்த வருவாய்மதிப்பீடு. ஐஅ$100,637[1]

இத்திரைப்படம் 2022 சனவரி 22, 2022 அன்று சன்டான்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அங்கு உலக திரைப்பட ஆவணப் படப் போட்டியில் கிராண்ட் ஜூரி பரிசை வென்றது. இது சிறப்புத் திரையிடல் பிரிவில் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அங்கு இது கோல்டன் ஐ விருதை வென்றது.[3] இது பின்னர் சிறந்த ஆவணப்படத்திற்கான அகாடமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது.[4][5]

சுருக்கம்

தொகு

சௌத், நதீம் ஆகிய இரு முசுலீம் சகோதரர்கள் புது தில்லியில் வாழ்பவர்கள். அவர்கள் ஒரு கரும்பருந்தை நேசிக்கின்றனர். கரும்பருந்தின் நேசம் மற்ற பறவைகளின் மீதான ஒன்றாகவும் மாறுகிறது. தில்லியில் காற்று மாசால் பகலிலேயே வானம் இருளடைந்து அதனால் பறவைகள் கீழே விழுவது தொடர் கதையாக உள்ளது. காயமடைந்த அந்த பறவைகளை மீட்டெடுத்து அவற்றை பராமரிப்பதை இந்த இருவரும் தங்கள் வாழ்க்கையின் கடமையாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டு வருகின்றனர்.[6]

தயாரிப்பு

தொகு

தில்லியின் வஜிராபாத்தில் பறவைகளுக்கான தற்காலிக மருத்துவமனை நடத்திவருகின்றனர் நதீம் ஷெஹ்சாத், முகமது சவுத் என்ற இரு சகோதரர்கள். இவர்கள் கடந்த 20 ஆண்டுகளில் 20,000 பறவைகளை மீட்டு குணப்படுத்தியுள்ளனர். இவர்களின் கதைதான் இந்த ஆவணப்படம். இவர்களின் நோக்கம், அர்ப்பணிப்பு ஆகியவற்றால் ஈர்க்கப்பட்ட ஷௌனக் சென் இவர்களின் கதையை படமாக்க முடிவு செய்தார்.[7]

வெளியீடு

தொகு

இந்தத் திரைப்படம் 22, சனவரி, 2022 அன்று 2022 சன்டான்ஸ் திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்பட்டது.[6][8] இது 2022 கேன்ஸ் திரைப்பட விழாவில் 'சிறப்புத் திரையிடல்கள்' பிரிவில் திரையிடலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு மே 23 அன்று திரையிடப்பட்டது.[9][10][11]

இப்படம் 46வது ஹாங்காங் சர்வதேச திரைப்பட விழாவில் ஆவணப் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டது, அங்கு 24 ஆகத்து 2022 அன்று திரையிடப்பட்டு ஃபயர்பேர்ட் விருதை வென்றது.[12] 2022 செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 2 வரை நடைபெற்ற 18வது சூரிச் திரைப்பட விழாவிற்கு கலந்துகொண்டு, அங்கு அது ஆவணப் போட்டிப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டது.[13] அதே மாதத்தில், செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 16, 2022 வரை நடைபெற்ற 2022 நியூயார்க் திரைப்பட விழாவின் முக்கிய ஸ்லேட்டிலும் இது தேர்ந்தெடுக்கப்பட்டது.[14] இது 27வது பூசன் சர்வதேச திரைப்பட விழாவின் 'வைட் ஆங்கிள் - டாக்குமெண்டரி ஷோகேஸ்' பிரிவில் இடம் பெற்று 9 அக்டோபர் 2022 அன்று திரையிடப்பட்டது.[15] அடுத்து 2022 அக்டோபர் 5 முதல் 16 அக்டோபர் வரை நடைபெற்ற பிஎப்ஐ லண்டன் திரைப்பட விழாவில் இது கலந்துகொண்டது. அங்கு ஆவணப் போட்டியில் தி கிரியர்சன் விருதை வென்றது.[16]

வீட்டு ஊடகம்

தொகு

இத்திரைப்படத்திற்கான உலகளாவிய தொலைக்காட்சி உரிமையை எச்பிஓ டாக்குமெண்டரி பிலிம்ஸ் கையப்படுத்தியது. பின்னர் அமெரிக்காவில் திரையரங்குகளில் திரையிடப்பட்டதைத் தொடர்ந்து 7, பிப்ரவரி, 2023 அன்று எச்.பி.ஓ மற்றும் தேலதிக ஊடக சேவையான எச்பிஓ மேக்ஸில் ஒளிபரப்பு துவங்கியது.[17]

பாராட்டுக்கள்

தொகு
விருது விழா நாள் வகை பெறுநர்(கள்) முடிவு குறி.
சன்டான்ஸ் திரைப்பட விழா சனவரி 30, 2022 கிராண்ட் ஜூரி பரிசு - ஆவணப்படம் ஆல் தட் பிரீத்ஸ் வெற்றி [18]
கான் திரைப்பட விழா மே 28, 2022 கோல்டன் ஐ ஷௌனக் சென் வெற்றி [19]
ஆங்காங் பன்னாட்டு திரைப்பட விழா ஆகத்து 31, 2022 ஃபயர்பேர்ட் விருது ஆல் தட் பிரீத்ஸ் வெற்றி [20][21]
சூரிச் திரைப்பட விழா அக்டோபர் 2, 2022 சிறந்த சர்வதேச ஆவணப்படம் பரிந்துரை [13]
லண்டன் திரைப்பட விழா அக்டோபர் 16, 2022 கிரியர்சன் விருது வெற்றி [22]
மாண்ட்க்ளேர் திரைப்பட விழா அக்டோபர் 30, 2022 ஆவணப்படத்திற்கான புரூஸ் சினோஸ்கி விருது பரிந்துரை [23]
ஆசிய பசிபிக் திரை விருதுகள் நவம்பர் 11, 2022 இளம் சினிமா விருது வெற்றி [24]
விமர்சகர்களின் தேர்வு ஆவணப்பட விருதுகள் நவம்பர் 13, 2022 சிறந்த அறிவியல்/இயற்கை ஆவணப்படம் பரிந்துரை [25]
சிறந்த ஒளிப்பதிவு பெஞ்சமின் பெர்னார்ட் மற்றும் ரிஜு தாஸ் பரிந்துரை
கோதம் இன்டிபென்டன்ட் திரைப்பட விருதுகள் நவம்பர் 28, 2022 சிறந்த ஆவணப்படம் ஆல் தட் பிரீத்ஸ் வெற்றி [26]
நேசனல் போர்ட் ஆப் ரிவிவிவ் திசம்பர் 8, 2022 முதல் ஐந்து ஆவணப்படங்கள் வெற்றி [27]
ஐடிஏ ஆவணப்பட விருதுகள் திசம்பர் 10, 2022 சிறந்த படம் வெற்றி [28]
சிறந்த இயக்குநர் ஷௌனக் சென் வெற்றி
சிறந்த ஒளிப்பதிவு பென் பெர்ன்ஹார்ட், ரிஜு தாஸ், சௌம்யானந்தா சாஹி பரிந்துரை
சிறந்த படத்தொகுப்பு சார்லோட் மன்ச் பெங்ட்சன், வேதாந்த் ஜோஷி வெற்றி
வாஷிங்டன் டிசி ஏரியா பிலிம் கிரடிக்ஸ் அசோசியேசன் திசம்பர் 12, 2022 சிறந்த ஆவணப்படம் ஆல் தட் பிரீத்ஸ் பரிந்துரை [29]
டல்லாஸ்-ஃபோர்ட் வொர்த் பிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேசன் திசம்பர் 19, 2022 சிறந்த ஆவணப்படம் 2nd place [30]
பெண் திரைப்பட பத்திரிகையாளர்களின் கூட்டணி சனவரி 5, 2023 சிறந்த ஆவணப்படம் பரிந்துரை [31]
நேசனல் சொசைட்டி ஆப் பிலிம் கிரிடிக்சிஸ் சனவரி 7, 2023 சிறந்த புனைகதை அல்லாத திரைப்படம் 3rd place [32]
சான் பிரான்சிஸ்கோ பே ஏரியா பிலிம் கிரிடிக்ஸ் சர்கிள் சனவரி 9, 2023 சிறந்த ஆவணப்படம் வெற்றி [33]
சினிமா ஐ ஆனர் சனவரி 12, 2023 சிறந்த புனைகதை அல்லாத அம்சம் ஷௌனக் சென், அமன் மான் மற்றும் டெடி லீஃபர் வெற்றி [34]

[35]
சிறப்பான இயக்கம் ஷௌனக் சென் பரிந்துரை
சிறப்பான தயாரிப்பு அமன் மான், ஷௌனக் சென் மற்றும் டெடி லீஃபர் பரிந்துரை
சிறப்பான ஒளிப்பதிவு பென் பெர்னார்ட் வெற்றி
சிறந்த ஒலி வடிவமைப்பு நிலாத்ரி சேகர் ராய் மற்றும் சுஸ்மித் "பாப்" நாத் பரிந்துரை
ஆடியன்ஸ் சாய்ஸ் பிரைஸ் ஆல் தட் பிரீத்ஸ் பரிந்துரை
த அன்பர்கெட்டபிள்ஸ் முகமது சவுத் மற்றும் நதீம் ஷெஹ்சாத் வெற்றி
ஜார்ஜியா திரைப்பட விமர்சகர்கள் சங்கம் சனவரி 13, 2023 சிறந்த ஆவணப்படம் ஆல் தட் பிரீத்ஸ் பரிந்துரை [36]
ஆன்லைன் திரைப்பட விமர்சகர்கள் சங்கம் சனவரி 23, 2023 சிறந்த ஆவணப்படம் பரிந்துரை [37]
லண்டன் திரைப்பட விமர்சகர்கள் வட்டம் பெப்ரவரி 5, 2023 ஆண்டின் ஆவணப்படம் பரிந்துரை [38]
சேட்டலைட் அவார்ட்ஸ் பெப்ரவரி 11, 2023 சிறந்த இயங்கு படம் – சிறந்த ஆவணப்படம் பரிந்துரை [39]
டைரக்டர்ஸ் கில்ட் ஆஃப் அமெரிக்கா அவார்ட்ஸ் பெப்ரவரி 18, 2023 ஆவணப்படங்களில் சிறந்த இயக்குநர் சாதனை ஷௌனக் சென் பரிந்துரை [40]
புரோடியூசர் கில்ட் ஆஃப் அமெரிக்கா அவார்ட்ஸ் பெப்ரவரி 25, 2023 திரையரங்க ஆவணப்பட இயங்குபட சிறந்த தயாரிப்பாளர் அமன் மான், ஷௌனக் சென் மற்றும் டெடி லீஃபர் பரிந்துரை [41][42]
பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள் பெப்ரவரி 19, 2023 சிறந்த ஆவணப்படம் ஷௌனக் சென், டெடி லீஃபர், அமன் மான் பரிந்துரை [43]
இண்டிபெண்டட் ஸ்பிரிட் அவார்ட்ஸ் மார்ச் 4, 2023 சிறந்த ஆவணப்படம் ஷௌனக் சென், டெடி லீஃபர், அமன் மான் பரிந்துரை [44]
அமெரிக்க ஒளிப்பதிவாளர் சங்கம் மார்ச் 5, 2023 ஆவணப்படத்தில் ஒளிப்பதிவில் சிறந்த சாதனை பென் பெர்ன்ஹார்ட் மற்றும் ரிஜு தாஸ் வெற்றி [45]
அகாதமி விருது மார்ச் 12, 2023 சிறந்த ஆவணப்படத்திற்கான அகாதமி விருது ஷௌனக் சென், அமன் மான் மற்றும் டெடி லீஃபர் பரிந்துரை [46]

குறிப்புகள்

தொகு
  1. "All That Breathes (2022)". பாக்சு ஆபிசு மோசோ. ஐ. எம். டி. பி இணையத்தளம். பார்க்கப்பட்ட நாள் March 6, 2023.
  2. Nandini Ramnath (January 25, 2022). "In 'All That Breathes', brothers who rescue birds and a struggle for human survival" (in en). Scroll.in. https://scroll.in/reel/1015815/in-all-that-breathes-brothers-who-rescue-birds-and-a-struggle-for-human-survival. 
  3. Ramachandran, Naman (May 28, 2022). "'All That Breathes,' 'Mariupolis 2' Win Cannes Documentary Awards". Variety. Archived from the original on 28 May 2022. பார்க்கப்பட்ட நாள் May 28, 2022.
  4. Giardina, Carolyn (December 21, 2022). "2023 Oscars: Shortlists for 95th Academy Awards Unveiled". The Hollywood Reporter. Archived from the original on 24 January 2023. பார்க்கப்பட்ட நாள் January 5, 2023.
  5. "2023 Oscars Nominations: See the Full List" (in ஆங்கிலம்). அகாதமி ஆப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ். January 24, 2023. Archived from the original on 8 February 2023. பார்க்கப்பட்ட நாள் January 24, 2023.
  6. 6.0 6.1 "All That Breathes". Sundance Film Festival. Archived from the original on 4 May 2022. பார்க்கப்பட்ட நாள் 20 April 2022.
  7. Sharmila Bhowmick (27 December 2021). "All That Breathes: Delhi's Black Kites, Two Brothers And A Film". Outlook India. Archived from the original on 2 May 2022. பார்க்கப்பட்ட நாள் 20 April 2022.
  8. Lang, Brent (9 December 2021). "Sundance Unveils 2022 Feature Lineup, Including Films From Lena Dunham, Amy Poehler and Netflix's Kanye West Doc". Variety. Archived from the original on 22 September 2022. பார்க்கப்பட்ட நாள் 20 April 2022.
  9. "Indian documentary All That Breathes to screen at Cannes Film Festival 2022". Indian Express. 14 April 2022. Archived from the original on 20 April 2022. பார்க்கப்பட்ட நாள் 20 April 2022.
  10. Priyanka Dasgupta (16 April 2022). "Special screening of Indian documentary at Cannes". Times of India. Archived from the original on 16 April 2022. பார்க்கப்பட்ட நாள் 20 April 2022.
  11. "All That Breathes: a dream like flight to Delhi". Cannes Festival. 23 May 2022. Archived from the original on 13 March 2023. பார்க்கப்பட்ட நாள் 24 May 2022.
  12. "Documentary Competition::Firebird Awards, All That Breathes". Hong Kong International Film Festival (in ஆங்கிலம்). 24 August 2022. Archived from the original on 3 September 2022. பார்க்கப்பட்ட நாள் 3 September 2022.
  13. 13.0 13.1 Del Don, Giorgia (September 15, 2022). "The Zurich Film Festival unveils the programme for its 18th edition". Cineuropa. Archived from the original on 9 October 2022. பார்க்கப்பட்ட நாள் October 9, 2022.Del Don, Giorgia (15 September 2022).
  14. Jill Goldsmith (August 9, 2022). "New York Film Festival Sets Main Slate For 60th Edition". Deadline. Archived from the original on 21 August 2022. பார்க்கப்பட்ட நாள் August 12, 2022.
  15. "All That Breathes". Busan International Film Festival (in ஆங்கிலம்). September 7, 2022. Archived from the original on 8 September 2022. பார்க்கப்பட்ட நாள் September 16, 2022.
  16. Katz, David (17 October 2022). "Corsage clinches victory at the BFI London Film Festival". Cineuropa (in ஆங்கிலம்). Archived from the original on 7 March 2023. பார்க்கப்பட்ட நாள் 7 March 2023.
  17. Ravindran, Manori (14 May 2022). "HBO Documentary Films Buys Cannes Title and Sundance Winner 'All That Breathes' (EXCLUSIVE)". Variety. Archived from the original on 24 May 2022. பார்க்கப்பட்ட நாள் 24 May 2022.
  18. "Shaunak Sen's documentary 'All That Breathes' wins World Cinema Grand Jury Prize at Sundance Film Festival 2022". https://www.thehindu.com/entertainment/movies/all-that-breathes-wins-at-sundance/article38343085.ece. Srivatsan S (1 February 2022).
  19. "Indian film All That Breathes wins top documentary award at Cannes 2022". https://indianexpress.com/article/entertainment/entertainment-others/indian-film-all-that-breathes-wins-top-documentary-award-at-cannes-2022-7941337/. 
  20. "HKIFF46 NAMES 13 FIREBIRD AWARD WINNERS AND FIPRESCI PRIZE". Hong Kong International Film Festival (in ஆங்கிலம்). August 31, 2022. Archived from the original on 1 September 2022. பார்க்கப்பட்ட நாள் September 3, 2022.
  21. "'A New Old Play' and 'Mediterranean Fever' Claim Firebird Awards at Hong Kong Film Festival". https://variety.com/2022/film/asia/a-new-old-play-awards-at-hong-kong-film-festival-hkiff-1235355299/. 
  22. Ntim, Zac (October 16, 2022). "London Film Festival Winners: Vicky Krieps-Starrer 'Corsage' Takes Best Film Award". Deadline Hollywood. Archived from the original on 16 October 2022. பார்க்கப்பட்ட நாள் October 16, 2022.
  23. Moye, Clarence (October 31, 2022). "Montclair Film Festival Announces 2022 Award Winners". Awards Daily. Archived from the original on 23 January 2023. பார்க்கப்பட்ட நாள் October 31, 2022.
  24. "Kamila Andini’s ‘Before Now and Then’ Named Best Film at Asia-Pacific Screen Awards". https://variety.com/2022/awards/news/apsa-asia-pacific-screen-awards-kamila-andini-before-now-and-then-1235429778/. 
  25. Davis, Clayton (October 17, 2022). "'Fire of Love' and 'Good Night Oppy' Lead Critics Choice Documentary Award Nominations". Variety. Archived from the original on 6 March 2023. பார்க்கப்பட்ட நாள் October 17, 2022.
  26. Shanfield, Ethan (October 25, 2022). "'Tár' Leads Gotham Awards Nominations: Full List". Variety. Archived from the original on 25 October 2022. பார்க்கப்பட்ட நாள் October 25, 2022.
  27. Jones, Marcus (December 8, 2022). "2022 National Board of Review Winners: 'Top Gun: Maverick' Takes Top Honor". IndieWire. Archived from the original on 8 December 2022. பார்க்கப்பட்ட நாள் December 8, 2022.
  28. Lewis, Hilary (December 10, 2022). "IDA Documentary Awards: 'All That Breathes' Tops Winners". Hollywood Reporter. Archived from the original on 20 December 2022. பார்க்கப்பட்ட நாள் December 10, 2022.
  29. Anderson, Erik (December 10, 2022). "Washington DC Film Critics nominations: 'Everything Everywhere All At Once,' 'The Fabelmans' lead". AwardsWatch. Archived from the original on 11 December 2022. பார்க்கப்பட்ட நாள் December 10, 2022.
  30. Neglia, Matt (December 19, 2022). "The 2022 Dallas Fort-Worth Film Critics Association (DFWFCA) Winners". Next Best Picture. Archived from the original on 20 December 2022. பார்க்கப்பட்ட நாள் December 20, 2022.
  31. "2022 EDA AWARDS NOMINEES". Alliance of Women Film Journalists. Archived from the original on 23 December 2022. பார்க்கப்பட்ட நாள் December 23, 2022.
  32. Zilko, Christian (January 7, 2023). "'TÁR' and 'Aftersun' Win Big at National Society of Film Critics Awards (Complete Winners List)". IndieWire (in ஆங்கிலம்). Archived from the original on 7 January 2023. பார்க்கப்பட்ட நாள் January 7, 2023.
  33. Neglia, Matt (January 6, 2023). "The 2022 San Francisco Bay Area Film Critics Circle (SFBAFCC) Nominations". Next Best Picture. Archived from the original on 6 January 2023. பார்க்கப்பட்ட நாள் January 6, 2023.
  34. Jones, Marcus (November 10, 2022). "'Fire of Love' and 'The Territory' Lead 2023 Cinema Eye Honors Nonfiction Film Nominees". IndieWire. Archived from the original on 10 November 2022. பார்க்கப்பட்ட நாள் November 10, 2022.
  35. MacCary, Julia; Shafer, Ellise (January 12, 2023). "'All That Breathes,' 'Fire of Love' Lead Cinema Eye Honors". Variety. Archived from the original on 6 March 2023. பார்க்கப்பட்ட நாள் January 13, 2023.
  36. Anderson, Erik (January 7, 2023). "2022 Georgia Film Critics Association (GAFCA) nominations". AwardsWatch. Archived from the original on 7 January 2023. பார்க்கப்பட்ட நாள் January 7, 2023.
  37. Neglia, Matt (January 23, 2023). "The 2022 Online Film Critics Society (OFCS) Winners". Next Best Picture. Archived from the original on 23 January 2023. பார்க்கப்பட்ட நாள் January 23, 2023.
  38. Pulver, Andrew (December 21, 2022). "The Banshees of Inisherin leads pack as London film critics announce nominations". தி கார்டியன். Archived from the original on 21 December 2022. பார்க்கப்பட்ட நாள் December 22, 2022.
  39. Anderson, Erik (December 8, 2022). "'Top Gun: Maverick' leads International Press Academy's 27th Satellite Awards nominations". AwardsWatch. Archived from the original on 9 December 2022. பார்க்கப்பட்ட நாள் December 8, 2022.
  40. Schneider, Michael (January 10, 2023). "Severance, Station Eleven, The Daily Show Lead 2023 DGA Awards Television Nominations". Variety. Archived from the original on 10 January 2023. பார்க்கப்பட்ட நாள் January 10, 2023.
  41. "Producers Guild of America Awards Celebrates Everything Everywhere All At Once, White Lotus, The Bear, Navalny & more with Top Honors". செய்திக் குறிப்பு.
  42. Carey, Matthew (December 12, 2022). "PGA Awards Documentary Nominations Bring Shocks and Surprises: Nothing Compares In, All The Beauty And The Bloodshed Out". Deadline Hollywood. Archived from the original on 28 January 2023. பார்க்கப்பட்ட நாள் January 12, 2023.
  43. Ntim, Zac (January 19, 2023). "BAFTA Film Awards Nominations: 'All Quiet On The Western Front,' 'Banshees Of Inisherin' & 'Everything Everywhere All At Once' Lead — The Complete List". Deadline Hollywood. Archived from the original on 19 January 2023. பார்க்கப்பட்ட நாள் January 19, 2023.
  44. Lattanzio, Ryan (November 22, 2022). "2023 Film Independent Spirit Award Nominations Announced (Updating Live)". IndieWire. Archived from the original on 22 November 2022. பார்க்கப்பட்ட நாள் November 22, 2022.
  45. Tangcay, Jazz (January 9, 2023). "'The Batman,' 'Top Gun: Maverick,' 'Elvis' Nominated by American Society of Cinematographers". Variety. Archived from the original on 10 January 2023. பார்க்கப்பட்ட நாள் January 10, 2023.
  46. Lewis, Hilary (January 24, 2023). "Oscars: Full List of Nominations". The Hollywood Reporter (in ஆங்கிலம்). Archived from the original on 24 January 2023. பார்க்கப்பட்ட நாள் January 24, 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆல்_தட்_பிரீத்ஸ்&oldid=4166813" இலிருந்து மீள்விக்கப்பட்டது