ஆத்திரேலியா தேசிய காற்பந்து அணி
ஆத்திரேலியத் தேசியக் கால்பந்து அணி (Australia national association football team) பன்னாட்டு ஆடவர் காற்பந்தாட்டப் போட்டிகளில் ஆஸ்திரேலியாவின் சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை ஆத்திரேலியாவில் காற்பந்தாட்டத்தை ஒழுங்குபடுத்தும் அமைப்பான ஆத்திரேலியக் கால்பந்துக் கூட்டமைப்பு (FFA) மேலாண்மை செய்கின்றது. இது 2006இல் ஓசியானா கால்பந்துக் கூட்டமைப்பிலிருந்து விலகிய பின்னர் தற்போது ஆசியக் கால்பந்துக் கூட்டமைப்பிலும் வட்டார ஆசியான் கால்பந்துக் கூட்டமைப்பிலும் உறுப்பினராக இருந்து வருகின்றது. இந்த அணியை இரசிகர்கள் சாக்கரூசு எனச் செல்லமாக அழைக்கின்றனர்.
அடைபெயர் | சாக்கரூசு | ||
---|---|---|---|
கூட்டமைப்பு | ஆத்திரேலியக் கால்பந்துக் கூட்டமைப்பு | ||
மண்டல கூட்டமைப்பு | AFF (South-East Asia) | ||
கண்ட கூட்டமைப்பு | ஆ.கா.கூ (ஆசியா) | ||
தலைமைப் பயிற்சியாளர் | ஆங்கெ போசுடெகோக்லு | ||
அணித் தலைவர் | லூகாசு நீல் | ||
Most caps | மார்க்கு இசுவார்சர் (109) | ||
அதிகபட்ச கோல் அடித்தவர் | டாமியன் மோரி & டிம் கஹில் (29) | ||
பீஃபா குறியீடு | AUS | ||
பீஃபா தரவரிசை | 56 2 | ||
அதிகபட்ச பிஃபா தரவரிசை | 14 (செப்டம்பர் 2009) | ||
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை | 92 (சூன் 2000) | ||
எலோ தரவரிசை | 32 | ||
அதிகபட்ச எலோ | 9 (நவம்பர் 2001) | ||
குறைந்தபட்ச எலோ | 75 (நவம்பர் 1965) | ||
| |||
முதல் பன்னாட்டுப் போட்டி | |||
நியூசிலாந்து 3–1 ஆத்திரேலியா (துனெதுன், நியூசிலாந்து; 17 சூன் 1922) | |||
பெரும் வெற்றி | |||
ஆத்திரேலியா 31–0 அமெரிக்க சமோவா (கொஃப்சு ஆர்பர், ஆத்திரேலியா; 11 ஏப்ரல் 2001) (World Record for international matches)[1] | |||
பெரும் தோல்வி | |||
ஆத்திரேலியா 0–8 தென்னாப்பிரிக்கா (அடிலெயிட், ஆத்திரேலியா; 17 செப்டம்பர் 1955) | |||
உலகக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 4 (முதற்தடவையாக 1974 இல்) | ||
சிறந்த முடிவு | பதினாறவர் சுற்று, 2006 | ||
ஆசியக் கோப்பை | |||
பங்கேற்புகள் | 2 (முதற்தடவையாக 2007 இல்) | ||
சிறந்த முடிவு | இரண்டாமிடம், 2011 | ||
ஓசியானியா நாடுகள் கோப்பை | |||
பங்கேற்புகள் | 6 (முதற்தடவையாக 1980 இல்) | ||
சிறந்த முடிவு | வாகையர், 1980, 1996, 2000, 2004 | ||
கூட்டமைப்புகள் கோப்பை | |||
பங்கேற்புகள் | 3 (முதற்தடவையாக 1997 பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டி இல்) | ||
சிறந்த முடிவு | இரண்டாமிடம், 1997 |
ஆத்திரேலியா ஓசியானியா நாடுகள் கோப்பையை நான்கு முறை வென்றுள்ளது. 2006ஆம் ஆண்டில் ஆண்டின் ஏஃப்சி தேசிய அணி விருது பெற்றுள்ளது. உலகக்கோப்பைகளில் மூன்றுமுறை, 1974, 2006 மற்றும் 2010 ஆண்டுகளில், விளையாடியுள்ளது. 2014 உலகக்கோப்பை கால்பந்துப் போட்டிகளில் கலந்துகொள்ள இருக்கிறது. பிபா கூட்டமைப்புக்களின் கோப்பைப் போட்டிகளிலும் மூன்று முறை ஆடியுள்ளது.
மேற்சான்றுகள்
தொகு- ↑ "Aussie footballers smash world record". BBC Sport. 11 ஏப்ரல் 2001. http://news.bbc.co.uk/sport1/hi/football/world_cup_2002/1271854.stm. பார்த்த நாள்: 10 சூன் 2012.[தொடர்பிழந்த இணைப்பு]