ஆ. அருள்பிரகாசம்

இலங்கைத் தமிழ் குடிமைப்பணி அதிகாரி

ஆறுமுகம் அருள்பிரகாசம், OBE (c1890 – 1975) என்பவர் ஒரு முன்னணி இலங்கை அரசு ஊழியர் மற்றும் தேர்தல் ஆணையர் ஆவார்.[1][2]

ஆ. அருள்பிரகாசம்
OBE
பிறப்புc1890
இறப்பு1975
பணிகுடிமைப் பணி

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

அருள்பிரகாசம் 1890 இல் பிறந்தார்.[3] இவர் வட பிரித்தானிய இலங்கையில் வல்வெட்டியைச் சேர்ந்த பள்ளி ஆசிரியரான ஆறுமுகத்தின் மகன் ஆவார். இவர் உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி,[4] வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி போன்ற கல்லூரிகளில் கல்வி பயின்றார்.[3]

உடுப்பிட்டியைச் சேர்ந்த கந்தையா என்பவரின் மகளான சத்தியபாலதேவியை அருள்பிரகாசம் மணந்தார். இந்த இணையருக்கு மூன்று மகன்கள் (புலேந்திரன், தவேந்திரன், பாலேந்திரன்), நான்கு மகள்கள் (சரஸ்வதி, சாவித்திரி, திலகவதி, புனிதவதி) ஆவர்.[3]

தொழில் தொகு

அருள்பிரகாசம் 1920 மேயில் அரசாங்க பணியில் இணைந்தார். 1933 செப்டம்பர் வரை பணியாற்றினார். அந்த நேரத்தில் இவர் வழக்கறிஞராக தகுதி பெற்றார்.[3] 1933 அக்டோபரில், இவர் ஒரு சட்ட மற்றும் பத்திர எழுத்தராக ஆனார். 1935 அக்டோபர் முதல் நில ஆணையருக்கு, நில ஆணையரின் பத்திர உதவியாளராகவும், 1941 சூன் 1 முதல் 1942 செப்டம்பர் வரை உதவி நில ஆணையராக பணியாற்றினார். இவர் 1942 அக்டோபரில் இலங்கை குடிமைப் பணியில் மூன்றாம் நிலை அதிகாரியாக நியமிக்கப்பட்டாரு, பொது கருவூலத்துறையில் நியமிக்கப்பட்டார். 1942 திசம்பர் முதல் 1943 மே வரை மீண்டும் உதவி நில ஆணையாளராக நியமிக்கப்பட்டார். தனது முதல் மற்றும் இரண்டாம் ஒழுங்குமுறை தேர்வுகளை முடித்த பின்னர் இரண்டாம் நிலைக்கு பதவி உயர்வு பெற்று, கொழும்பு கச்சேரியில் அலுவலக உதவியாளர், மேற்பார்வையாளர், உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவு; மேலதிக உதவி அரசாங்க அதிபர், கொழும்பு; கொழும்பு, புத்தளம், குருநாகல் ஆகிய இடங்களில் உதவி அரசாங்க அதிபர், கொழும்பு திட்ட கண்காட்சியின் இணை ஆணையாளர்,[3] பதிவாளர் ஜெனரல் (1952), அரசாங்க முகவர், வடமேற்கு மாகாணம் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் (1955-57) உட்பட பல சிரேஷ்ட சிவில் ஊழியர் பதவிகளில் பணியாற்றினார்.[3] லேக் ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தில் உயர் பதவியையும் வகித்தார்.[3][5]

அருள்பிரகாசம் 1953 புத்தாண்டு கௌரவத்தில் ஆர்டர் ஆஃப் தி பிரித்தானிய பேரரசின் உறுப்பினர் என்ற கௌரவத்தையும்,[6] 1954 ஆம் ஆண்டு பிறந்தநாள் மரியாதையில் அவர் ஆர்டர் ஆஃப் தி பிரித்தானிய எம்பயர் அதிகாரி என்ற கௌரவத்தைப் பெற்றார்.[7]

அருள்பிரகாசம் 1975 இல் இறந்தார் [3]

குறிப்புகள் தொகு

 

  1. "History". Department of Elections, Sri Lanka. Archived from the original on 2012-08-05.
  2. "Chandrananda de Silva didn't do it". http://sundaytimes.lk/000924/letm.html. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 Arumugam, S.. Dictionary of Biography of the Tamils of Ceylon. http://www.noolaham.org/wiki/index.php?title=Dictionary_of_Biography_of_the_Tamils_of_Ceylon. 
  4. "150 years of Uduppidy A.M. College". www.island.lk. Archived from the original on 2014-02-04. பார்க்கப்பட்ட நாள் 2019-12-03.
  5. Ceylon Civil List 1954. 
  6. "Fifth Supplement". The London Gazette (39736): 48. 30 December 1952. https://www.thegazette.co.uk/London/issue/39736/supplement/48. 
  7. "Fourth Supplement". The London Gazette (40191): 3304. 1 June 1954. https://www.thegazette.co.uk/London/issue/40191/supplement/3304. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._அருள்பிரகாசம்&oldid=3924541" இலிருந்து மீள்விக்கப்பட்டது