உடுப்பிட்டி அமெரிக்கன் மிசன் கல்லூரி

உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி (Udupiddy American Mission College) இலங்கையின் வட மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியில் உடுப்பிட்டி என்ற ஊரில் அமைந்துள்ள பாடசாலை ஆகும். இப்பாடசாலை 1852 சனவரி 4 இல் அமெரிக்க மிசனரிகளினால் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாடசாலை[1] இன்று க.பொ.த உயர்தரம் வரை வகுப்புக்களை கொண்டுள்ளது. இங்கு உயர்தரத்தில் உயிரியல், கணிதம், வர்த்தகம். கலை ஆகிய நான்கு பிரிவுகளும் கற்பிக்கப்படுகின்றன. 2002 இல் கல்லூரியின் 150 ஆண்டு நிறைவைக் கொண்டாடுமுகமாக இலங்கை அரசு முத்திரை[2] வெளியிட்டுக் கௌரவித்தது.

Udupiddy A.M.C.
உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி
அமைவிடம்
உடுப்பிட்டி, யாழ்ப்பாண மாவட்டம், Northern Province
இலங்கை
அமைவிடம்9°48′20.20″N 80°09′55.60″E / 9.8056111°N 80.1654444°E / 9.8056111; 80.1654444
தகவல்
வகைபொது 1AB
நிறுவல்சனவரி 4, 1852
பள்ளி மாவட்டம்வடமராட்சி கல்வி வலயம்
ஆணையம்வட மாகாண சபை
பள்ளி இலக்கம்1008003
ஆசிரியர் குழு55
தரங்கள்1-13
பால்இரு பாலார்
வயது வீச்சு5-18
மொழிதமிழ், ஆங்கிலம்
School roll86

கல்லூரியின் அதிபர்கள்

தொகு
  • எஸ். அர். இராசையா. 1932-1938
  • கெ.டி ஜோன் 1939-1956
  • எஸ். எஸ் செல்வதுரை 1956-1971
  • என். அனந்தராஜ் 1993 - 1996
  • தில்லையம்பலம் 1996 - 1997

கல்லூரியில் படித்துப் புகழ் பூத்தவர்கள்

தொகு
  1. பேராசிரியர் அ. துரைராஜா, யாழ் பல்கல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர்
  2. ரி. இராமலிங்கம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
  3. பி. சிறீஸ்கந்தராஜா முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி
  4. அ. அருள்பிரகாசம். முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர்

மேற்கோள்கள்

தொகு