ஆ. இரா. வேங்கடாசலபதி

ஆ. இரா. வேங்கடாசலபதி (A. R. Venkatachalapathy, பிறப்பு: 1967)[1] தமிழகத்தின் குறிப்பிடத்தக்க ஆய்வாளர்களுள் ஒருவர். இவர் தில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பதிப்பு வரலாறு பற்றிய ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர். புதுமைப்பித்தனின் எழுத்துக்களைச் செம்பதிப்பாகத் தொகுத்துள்ளார். கடந்த 30 ஆண்டுகளில் தமிழ் வரலாற்று, பண்பாட்டுத்துறைக்கு முக்கியமான 25-க்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொடுத்திருக்கிறார். தற்போது சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.[2][3][4][5][6][7][8] 2024 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது.[9]

ஆ. இரா. வேங்கடாசலபதி
பிறப்பு1967
தொழில்பேராசிரியர், சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம்
தேசியம் இந்தியா
குடியுரிமைஇந்தியர்
கல்விமுனைவர்
கல்வி நிலையம்சென்னைப் பல்கலைக்கழகம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908
குறிப்பிடத்தக்க விருதுகள்சாகித்திய அகாதமி விருது (2024)
இணையதளம்
www.mids.ac.in/venkatachalapathy/

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

ஆ. இரா. வேங்கடாசலபதி புதுதில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றார்.[1] திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், சென்னைப் பல்கலைக்கழகம், சிக்காகோ பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கற்பித்தல் பணியில் ஈடுபட்டார்.[1] பாரிசு, கேம்பிரிச்சு, இலண்டன், ஆர்வர்டு ஆகிய இடங்களில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளார். சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தில் (2011-12) இந்தியப் படிப்பில் கலாச்சார உறவுகளுக்கான இந்தியப் பேரவைத் தலைவராக இருந்துள்ளார்.[1]

விருதுகள்

தொகு

இவரது நூல்கள்

தொகு
  • பின்னி ஆலை வேலை நிறுத்தம்
  • அந்தக் காலத்தில் காப்பி இல்லை
  • நாவலும் வாசிப்பும்
  • புதுமைப்பித்தன் கதைகள் (தொகுப்பாளர்)
  • புதுமைப்பித்தன் கட்டுரைகள் (தொகுப்பாளர்)
  • In Those Days There Was No Coffee
  • பாரதியின் சுயசரிதைகள்
  • பாரதி; கவிஞனும் காப்புரிமையும் – பாரதி படைப்புகள் நாட்டுடைமையான வரலாறு[13] [14]
  • சென்றுபோன நாட்கள் - பதிப்பாசிரியர்
  • Province of the Book
  • இன்று துயர்மிகு வரிகளை நான் எழுதலாம் பாப்லோ நெருடா கவிதைகள் (மொழிபெயர்ப்பாளர்)
  • Chennai not Madras
  • திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி.யும் 1908

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 A.R. Venkatachalapathy
  2. "தமிழ் இதழியல்: மீண்டு வரும் நாட்கள்". இந்து தமிழ் (நாளிதழ்). 18 ஆகஸ்ட் 2015. https://www.hindutamil.in/news/opinion/columns/52344-.html. பார்த்த நாள்: 23-10-2021. 
  3. Prof A R Venkatachalapathy
  4. "Chalapathy – Biography". mids.ac.in/. பார்க்கப்பட்ட நாள் 20 October 2009.
  5. Ramanathan, Mu (19 March 2009). "Little known Tamil scholars 5: A. R. Venkatachalapathy". www.thinnai.com. பார்க்கப்பட்ட நாள் 3 February 2010.
  6. Subramanian, T.S. (30 March 2008). "Early views of nationalist-poet Subramania Bharati". தி இந்து (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 1 April 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080401233641/http://www.hindu.com/2008/03/30/stories/2008033060231000.htm. 
  7. Guha, Ramachandra (2 February 2008). "GANDHI IN ORISSA – Remembering the most remarkable Indian of modern times". The Telegraph. Archived from the original on 13 September 2012. பார்க்கப்பட்ட நாள் 3 February 2010.
  8. "Thedi piditha Tamilar (Interview with Venkatachalapathy)", குமுதம் (இதழ்), 21 October 2009
  9. 9.0 9.1 சாகித்ய அகாதமி விருது பெறும் எழுத்தாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி, விகடன், 18 திசம்பர் 2024
  10. "பேராசிரியர் சலபதி, கே.சந்துரு உள்ளிட்ட 4 பேருக்கு ‘இயல்’ விருதுகள் அறிவிப்பு!". இந்து தமிழ் (நாளிதழ்). 19 மே 2022. https://www.hindutamil.in/news/world/801861-professor-a-r-venkatachalapathi-and-judge-k-chandru-got-iyal-awards-4.html. பார்த்த நாள்: 20-05-2022. 
  11. பாரதி ஆய்வாளர், பேராசிரியர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு ‘மகாகவி பாரதி விருது’- கோவை பாரதி பாசறை வழங்கியது
  12. பாரதி ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு தினமணியின் 'மகாகவி பாரதியார்' விருது
  13. பாரதி கவிஞனும் காப்புரிமையும். Kalachuvadu Publications Pvt. Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789384641245. பார்க்கப்பட்ட நாள் 22 அக்டோபர் 2021.
  14. "பாரதி கவிஞனும் காப்புரிமையும் -யூடியூப் காணொலி". பார்க்கப்பட்ட நாள் 23 அக்டோபர் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆ._இரா._வேங்கடாசலபதி&oldid=4171648" இலிருந்து மீள்விக்கப்பட்டது