இக்ரா சௌத்ரி

இக்ரா சௌத்ரிஅல்லது இக்ரா சவுத்ரி (Iqra Choudhary). உத்தரபிரதேசத்தில் உள்ள கைரானா மக்களவைத் தொகுதியில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்று மக்களவை உறுப்பினராவார்[1][2]

பிறப்பும் கல்வியும்

தொகு

இக்ரா உத்தரபிரதேசத்தில் உள்ள கைரானா மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் மறைந்த சௌத்ரி முனவ்வர் ஹசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பேகம் தபசம் ஹசன் ஆகியோரின் மகளாவார். இவரது சகோதரர் நாஹித் ஹூசைன் கைரானா சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருக்கின்றார்.

இக்ரா லண்டனின் SOAS பல்கலைக்கழகத்தில் அரசியலில் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.

அரசியல் வாழ்க்கை

தொகு

கைரானா மக்களவைத் தொகுதியில் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் சார்பில் போட்டியிட்டு, பாரதிய ஜனதாவின் பிரதீப் குமாரை வென்று மக்களவை உறுப்பினராவார்.[1][3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Election Commission of India". results.eci.gov.in. Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 4 June 2024.
  2. "Iqra Choudhary(Samajwadi Party(SP)):Constituency- KAIRANA(UTTAR PRADESH)". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 4 June 2024.
  3. India Today News Desk (4 June 2024). "Kairana, Uttar Pradesh Lok Sabha Election Results 2024 Highlights: SP Wins by 112852 Votes". India Today. https://www.indiatoday.in/elections/lok-sabha/story/kairana-uttar-pradesh-lok-sabha-election-results-2024-live-updates-clse-2547978-2024-06-04. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இக்ரா_சௌத்ரி&oldid=3998370" இலிருந்து மீள்விக்கப்பட்டது