இங்கா (நாவல்)
இங்கா (2014) என்பது பொய்ல் சென்குப்தாவால் இந்தியப் பின்னணியைக் கொண்டு எழுதப்பட்ட ஆங்கில புதினமாகும். ராபா என்ற தமிழ் பிராமணப் பெண்ணின் வாழ்க்கையையும் அதன் போராட்டங்களைச் சுற்றிம் இப்புதினத்தின் கதை எழுதப்பட்டுள்ளது. [1] [2]
நூலாசிரியர் | பொய்ல் செங்குப்தா |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | ஆங்கிலம் |
வகை | புதினம் |
வெளியிடப்பட்டது | வெஸ்ட்லேண்ட் பிரசுரங்கள் |
ISBN | 978-93-84030-64-3 |
செங்குப்தா பிரபலமான நாடக ஆசிரியராகவும் நாடக ஆளுமையாகவும் குழந்தைகளுக்கான கதை எழுத்தாளராகவும் அறியப்பட்டுள்ளார்.இவரால் எழுதப்பட்ட முதல் புதினம் "இங்கா" ஆகும். இந்த புத்தகம் அதிகாரப்பூர்வமாக 30 அக்டோபர் 2014 அன்று இந்தியாவின் பெங்களூருவில் வெளியிடப்பட்டுள்ளது.
கதைக்கரு
தொகுஇருண்மையான ஆணாதிக்க ரகசியங்கள், பாரம்பரியங்கள் நிறைந்த தமிழ் பிராமண குடும்பத்தில் பிறந்த ராபா, டெல்லியில் வளர்க்கப்படுகிறாள், அங்கு அவளுக்கு கிடைக்கும் 'ஆங்கில' கல்வி அவளுக்கு கவர்ச்சிகரமான வெளிநாட்டு இலக்கியத்தை அறிமுகப்படுத்துகிறது. மேலும் கோடை விடுமுறைகளில் கேரளாவில் உள்ள தங்கள் குடும்ப வீட்டிற்கு சென்று, அங்கு தனது சகோதரியான இங்காவுடன் தங்குகிறார். இரண்டு பெண்களின் வாழ்க்கையும் கடினமான, வலி நிறைந்த பாதையில் செல்லுகிறது. ராபா இறந்து நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ராபாவின் கணவர் அவளது நாட்குறிப்புகளை கண்டெடுத்து புத்தகமாக வெளியிடுகிறார், அதில் அவளது குடும்பத்திற்கு எதிரான போராட்டம், அவளது திருமணம் மற்றும் இங்காவுடனான அவளது இறுதி சந்திப்பு. ஏக்கம் மற்றும் நம்பிக்கை, ஏளனம் மற்றும் ஆத்திரம், அற்புதங்கள் மற்றும் கனவுகள், அர்ப்பணிப்பு மற்றும் முற்றிலும் நிராகரிப்பு ஆகிய எல்லாம் நிறைந்து எழுதப்பட்டுள்ள சோகமான கதையாக அது உள்ளது.
வெளியீடு
தொகுஇந்த புதினம் அதிகாரப்பூர்வமாக 30 அக்டோபர் 2014 அன்று இந்தியாவின் பெங்களூரில் வெளியிடப்பட்டுள்ளது .இந்திய எழுத்தாளர் சசி தேஷ்பாண்டே வெளியிட, யுனெஸ்கோவுக்கான முன்னாள் தூதர் சிரஞ்சீவ் சிங் இதன் முதல் பிரதியை வாங்கி வெளியிடப்பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Inga by Poile Sengupta". Indian Express. 24 October 2014.
- ↑ "Inga book". Crossword. Archived from the original on 26 October 2014. பார்க்கப்பட்ட நாள் 26 October 2014.