இங்கிலாந்தின் தேசியப்பண்
இங்கிலாந்தின் தேசியப் பண் என்று அலுவல்முறையாக எதுவும் இல்லாதபோதும் இதற்காக பல்வேறு பாடல்கள் கலந்துரையாடப்பட்டு வருகின்றன. பெரும்பான்மையான தேசிய விளையாட்டு நிகழ்வுகளில் 'கடவுள் அரசியைக் காப்பாற்றட்டும்' பயன்படுத்தப்படுகிறது.
விளையாட்டுக்களில் தற்போது பயன்படுத்தப்படும் பண்கள்
தொகுதற்போது கீழ்காணும், பாடல்கள் இசைக்கப்படுகின்றன:
பல்விளையாட்டு நிகழ்வுகள்
தொகு- பொதுநலவாய விளையாட்டு நிகழ்வுகளில், இங்கிலாந்து அணி "ஜெருசலம்" என அறியப்படும் பாடலை 2010 முதல் வெற்றிகீதமாக பயன்படுத்துகின்றனர். 2010 பொதுநலவாய விளையாட்டுக்களின்போது இதற்கான வாக்கெடுப்பு மக்களிடையே நடத்தப்பட்டு இப்பாடல் தேர்வானது. இந்த வாக்கெடுப்பில் எடுத்துக்கொள்ளப்பட்ட மூன்று பாடல்கள்: "கடவுள் அரசியைக் காப்பாற்றட்டும்", "ஜெருசலம்" மற்றும் "நம்பிக்கைக்கும் பெருமைக்குமான நாடு". இதில் 52% வாக்குகளைப் பெற்று ஜெருசலம் வென்றது.[1]
ஒரு விளையாட்டு போட்டிகள்
தொகு- பன்னாட்டு காற்பந்து போட்டிகளில், இங்கிலாந்தின் தேசிய அணி தனது தேசியப் பண்ணாக பிரித்தானிய நாட்டுப்பண்ணை பயன்படுத்துகிறது.
- பன்னாட்டு ரக்பி யூனியன் போட்டிகளில், இங்கிலாந்தின் தேசிய அணி தனது தேசியப் பண்ணாக பிரித்தானிய நாட்டுப்பண்ணையும் போட்டி துவக்கத்தில் "நம்பிக்கைக்கும் பெருமைக்குமான நாடு" பாடலையும் இசைக்கிறது.
- பன்னாட்டு ரக்பி லீக் போட்டிகளில், இங்கிலாந்தின் தேசிய அணி தனது தேசியப் பண்ணாக பிரித்தானிய நாட்டுப்பண்ணை பயன்படுத்துகிறது.
- பன்னாட்டு தேர்வுத் துடுப்பாட்டம் போட்டிகளில், இங்கிலாந்தின் துடுப்பாட்ட அணி 2003 முதல் "ஜெருசலம்" பண்ணைத் தனது துவக்க பண்ணாக பயன்படுத்தி வருகிறது.[2]
- பன்னாட்டு லாக்ரோசு போட்டிகளில், இங்கிலாந்தின் ஆடவர் தேசிய அணி தனது தேசியப் பண்ணாக பிரித்தானிய நாட்டுப்பண்ணையும் மகளிர் அணி "நம்பிக்கைக்கும் பெருமைக்குமான நாடு" பாடலையும் இசைத்து வருகின்றன.
சான்றுகோள்கள்
தொகு- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-06-11. பார்க்கப்பட்ட நாள் 2013-02-26.
- ↑ "Sing Jerusalem for England!". BBC News. 2005-09-06. http://news.bbc.co.uk/sport1/hi/cricket/england/4217144.stm. பார்த்த நாள்: 2008-06-15.