இங்கோகம் பாலா தேவி

இங்கோகம் பாலா தேவி (Ngangom Bala Devi) ஓர் இந்திய கால்பந்தாட்ட வீராங்கனையாவார். 1990 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 2 அன்று பிறந்தார். இசுக்காட்லாந்து பெண்கள் கால்பந்தாட்ட கூட்டிணைவுப் போட்டிகளில் விளையாடும் ரேஞ்சர்சு கால்பந்து அணியிலும்[1] இந்தியப் பெண்கள் தேசிய கால்பந்தாட்ட அணியிலும் முன்கள வீரராக பாலா தேவி விளையாடி வருகிறார்.

இங்கோகம் பாலா தேவி
சுய தகவல்கள்
பிறந்த நாள்2 பெப்ரவரி 1990 (1990-02-02) (அகவை 34)
பிறந்த இடம்மணிப்பூர், இந்தியா
ஆடும் நிலை(கள்)Forward (association football)#Striker
கழகத் தகவல்கள்
தற்போதைய கழகம்
Rangers W.F.C.
எண்10
2017Eastern Sporting Union3(4)
2017–2018KRYPHSA F.C.7(12)
பன்னாட்டு வாழ்வழி
ஆண்டுகள்அணிதோற்.(கோல்)
2005India U163(5)
2006–2007India women's national under-19 football team8(5)
2010–India women's national football team38(36)
‡ தேசிய அணிக்கான விளையாட்டுகளும் கோல்களும் 6 November 2019 அன்று சேகரிக்கப்பட்டது.

வாழ்க்கைக் குறிப்பு தொகு

பாலா தேவி வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரில் பிறந்து வளர்ந்தார். கால்பந்தாட்டம் தேவியின் குடும்பத்தில் ஒரு மரபாகவே இருந்தது. தன் இளம் வயதிலேயே தேவி கால்பந்தாட்டத்தை ஆடத் தொடங்கினார். 11 வயதில் உள்ளூர் பெண்கள் கால்பத்தாட்டக் குழுவில் இணைந்து விளையாடத் தொடங்கினார். இவரது தந்தையின் பிரியமான பொழுது போக்குகளில் ஒன்றும் கால்பந்தாட்டமாகும். தேவி தனது தந்தை, மூத்த சகோதரர், இரட்டையரான சகோதரிகள் ஆகியோருடன் கால்பந்தாட்டம் ஆடிவந்தார். குறிப்பாக ஆண்களுடன் கால்பந்தாட்டம் ஆடியபடியே தேவி வளர்ந்தார்.[2] வலைப்பந்தாட்டம், எறிபந்தாட்டம் போன்ற விளையாட்டுகளையும் தேவி விளையாடி வந்தார். மணிப்பூர் மாநிலத்திலுள்ள ஓயினாம் நகரிலுள்ள ஓனம் தம்பல் மார்க் கல்லூரியில் தனது கல்வியை முடித்தார். குடும்பத்தில் பாலா தேவி மட்டுமே தொழில்முறை கால்பந்தாட்டம் ஆடுமளவுக்கு உயர்ந்தார்.

தொழில்முறை சாதனைகள் தொகு

  1. 2002 ஆம் ஆண்டு அசாமில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான பெண்கள் சாம்பியன் பட்டப் போட்டியில் பங்கேற்ற மணிப்பூர் அணியின் ஒரு பகுதியாக இருந்தார். இப்போட்டியின் சிறந்த ஆட்டக்காரர் என்ற சிறப்பு வழங்கப்பட்டது. 2003 ஆம் ஆண்டு போட்டியிலும் இந்த சிறப்பு மீண்டும் இவருக்குக் கிடைத்தது.
  2. இந்திய மகளிர் கால்பந்து சாம்பியன்பட்டப் போட்டியில் மணிப்பூர் மூத்த பெண்கள் கால்பந்து அணியை பிரதிநிதித்துவப்படுத்த தேவி தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]
  3. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் கால்பந்து சாம்பியன்பட்டத்தை வென்ற மணிப்பூர் அணியின் ஒரு பகுதியாக தேவி விளையாடினார். மணிப்பூர் ஒடிசாவை இறுதிப்போட்டியில் 3–1 என்ற கணக்கில் தோற்கடித்தது.
  4. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய கால்பந்துக் கூட்டமைப்பு சாம்பியன் பட்டப் போட்டியில் வென்ற இந்திய அணியில் தேவி அங்கம் வகித்தார்.[4]
  5. 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கால்பந்தாட்டப் பிரிவில் தேவி அங்கம் வகித்த மணிப்பூர் அணி தங்கப் பதக்கம் வென்றது.[5]
  6. 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 6 அன்று ஐரோப்பாவில் நடைபெற்ற ஒரு தொழில்முறை கால்பந்து போட்டியில் கோல் அடித்த முதல் இந்திய பெண்மணி என்ற பெருமையை பாலா தேவி பெற்றார்.[6]
  7. பல நட்சத்திர வீர்ர்களுடன் போட்டியிட்டு ஆசிய கால்பந்தாட்ட கூட்டமைப்பு வழங்கும் இந்த வார சிறந்த கால்பந்தாட்ட வீர்ர் என்ற விருதை தேவி வென்றுள்ளார். இவ்விருதை வென்ற முதல் இந்தியர் என்ற சிறப்பு தேவிக்கு கிடைத்தது..[7]

மேற்கோள்கள் தொகு

  1. "Rangers Sign Indian International Bala Devi". Rangers Football Club. 29 January 2020. Archived from the original on 12 மே 2020. பார்க்கப்பட்ட நாள் 18 பிப்ரவரி 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  2. Yen, Samarjit (3 January 2015). "AIFF’s Footballer of the year: Ng Bala Devi". IFP.co.in இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150402143923/http://ifp.co.in/page/items/24749/aiffs-footballer-of-the-year-ng-bala-devi. பார்த்த நாள்: 15 March 2015. 
  3. "International Women's Day Special: Interview with Indian women's football team striker Ngangom Bala Devi". SportsKeeda. 8 March 2015. http://www.sportskeeda.com/football/international-womens-day-special-interview-with. பார்த்த நாள்: 15 March 2015. 
  4. Abbasi, Kashif (20 November 2014). "Indian women close in on hat-trick of SAFF crowns". Dawn. http://www.dawn.com/news/1145551. பார்த்த நாள்: 15 March 2015. 
  5. "Manipur clinch 4 gold, 1 silver and 3 bronze medals Manipur ranked at 7th position on the 10th day". E-Pao. 10 February 2015. http://e-pao.net/GP.asp?src=Sport1..110215.feb15. பார்த்த நாள்: 15 March 2015. 
  6. "Bala Devi becomes first Indian woman footballer to score in Europe". Goal.com. 6 December 2020.
  7. "Bala Devi AFC International player of the week". 20 December 2020 இம் மூலத்தில் இருந்து 16 ஜனவரி 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210116231635/https://footballexpress.in/bala-devi-beats-son-heung-min-to-win-afc-international-player-of-the-week/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இங்கோகம்_பாலா_தேவி&oldid=3730518" இலிருந்து மீள்விக்கப்பட்டது