இசா சாவ்லா
இசா சாவ்லா (Isha Chawla; பிறப்பு 6 மார்ச் 1988) என்பவர் இந்திய நடிகை ஆவார். இவர் முதன்மையாகத் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.
இசா சாவ்லா | |
---|---|
இசா சாவ்லா 2018-ல் | |
பிறப்பு | 6 மார்ச்சு 1988 தில்லி, இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2011–2016 |
இசா பிரேமா கவாலி (2012) எனும் தெலுங்கு திரைப்படம் மூலம் அறிமுகமானார்.
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுஇசா சாவ்லா 1988ஆம் ஆண்டு மார்ச் 6 ஆம் தேதி தில்லியில் பிறந்தார். இவர் அரசியல் அறிவியலில் பட்டம் பெற்றுள்ளார். திரைப்படங்களில் நடிப்பதற்காக மும்பையில் உள்ள நாடகக் குழு ஒன்றில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.[1]
திரைத்துறையில்
தொகுசாவ்லா கே. விஜய் பாஸ்கர் இயக்கத்தில் பிரேமா கவாலி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.[2][3] நந்தமுரி பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகப் புள்ள ரங்கடு மற்றும் ஸ்ரீமன்னாராயன் ஆகிய படங்களில் நடித்தார்.[4] 2013-ல், தனு வெட்ஸ் மனுவின் (2011) மறுதயாரிப்பான மிஸ்டர் பேலிகொடுகு படத்தில் நடித்தார். விராட் (2016) படத்தில் தர்ஷனுக்கு துணையாக கன்னடத்தில் அறிமுகமாகும் முன் ஜம்ப் ஜிலானி (2014) படத்தில் நடித்தார்.[5] சாவ்லா எம். எஸ். த்ரிஷா மற்றும் நிகேஷா படேல் நடித்த ரம்பா ஊர்வசி மேனகா படத்திலும் நடித்துள்ளார். ஆனால் இத்திரைப்படம் இன்னும் வெளிவராமல் உள்ளது.
திரைப்படங்கள்
தொகு- அனைத்துத் திரைப்படங்களும் தெலுங்கு மொழித் திரைப்படங்கள். பிற மொழித் திரைப்படங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | குறிப்பு | மேற்கோள் |
---|---|---|---|---|
2011 | பிரேமா கவாலி | பிரேமா | மிகவும் நம்பிக்கைக்குரிய முகத்திற்கான சினிமா விருது - வென்றது | [5] |
2012 | பூலா ரங்காடு | அனிதா | ||
2012 | ஸ்ரீமந்நாராயணா | பானு | ||
2013 | பெல்லிகொடுகு திரு | அஞ்சலி | ||
2014 | ஜம்ப் ஜிலானி | மாதவி | ||
2016 | விராட் | பிரித்தி | கன்னடம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Happy Birthday Isha Chawla". The Times of India. 6 March 2019. பார்க்கப்பட்ட நாள் 7 May 2021.
- ↑ Sunil's advice for Isha Chawla பரணிடப்பட்டது 15 அக்டோபர் 2013 at the வந்தவழி இயந்திரம். The Times of India. 29 March 2012.
- ↑ Isha Chawla to do a Kangna பரணிடப்பட்டது 23 பெப்பிரவரி 2012 at the வந்தவழி இயந்திரம். The Times of India. 20 February 2012
- ↑ "Remember Isha Chawla from 'Prema Kavali'? This is how she looks now (PHOTOS)". The Times of India. 3 April 2020. Archived from the original on 27 April 2020. பார்க்கப்பட்ட நாள் 1 October 2020.
- ↑ 5.0 5.1 "Honoured for excellence". thehansindia.com. 28 April 2019. Archived from the original on 28 April 2019. பார்க்கப்பட்ட நாள் 1 October 2020.