இசிதோர் பெர்னாண்டசு (அரசியல்வாதி)
இசிதோர் அலெக்சினோ பெர்னாண்டசு (Isidore Fernandes (politician)) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1951 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 4 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற கோவா சட்டமன்ற தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக கனகோனா கோவா சட்டமன்றத்திற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2019 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் பாரதிய சனதா கட்சியில் இணைந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் பத்து உறுப்பினர்களில் இவரும் ஒருவர் ஆவார். தற்போது இவர் ஒரு சுயேச்சை அரசியல்வாதி ஆவார் [2][3]
இசிதோர் அலெக்சிங்கோ பெர்ணாண்டசு | |
---|---|
துணைசபாநாயக்ர் கோவா சட்டப் பேரவை | |
பதவியில் 24 மே 2019 – 21 சனவரி 2022 | |
முன்னையவர் | மைக்கேல் லோபோ |
பின்னவர் | சுபாஷ் உத்தம் பால் தேசாய் |
தொகுதி | கனகோனா சட்டப்பேரவைத் தொகுதி |
கோவா சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் 2017–2022 | |
முன்னையவர் | இரமேசு தவாத்கர் |
பின்னவர் | இரமேசு தவாத்கர் |
தொகுதி | கனகோனா சட்டப்பேரவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | இசிதோர் அலெக்சிங்கோ பெர்ணாண்டசு 4 ஏப்ரல் 1951 கனகோனா, கோவா (மாநிலம்), போர்த்துகேய இந்தியா |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | சுயேச்சை |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு, பாரதிய சனதா கட்சி |
வாழிடம்(s) | கனகோனா, கோவா (மாநிலம்), இந்தியா |
முன்னாள் கல்லூரி | தெம்பே கலை மற்றும் அறிவியல் கல்லூரி, (இளங்கலை]) |
தொழில் | வணிகர் |