கனகோனா (Canacona) என்பது இந்தியாவின் கோவா மாநிலத்தின் தெற்கு கோவா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமும், நகராட்சி மன்றமுமாகும் . கனகோனா வட்டத்தில் பட்னெம், சௌடி, போயுங்கினிம், லோலியம்-போலம், அகோண்டா ,கௌம்டோங்ரே ஆகிய ஊர்கள் அடங்கும். இந்த வட்டத்தின் தலைமையகமான சவுதி நன்கு வளர்ந்த நகரமாக இருக்கிறது . புகழ்பெற்ற பாலோலெம் கடற்கரை இங்கு அமைந்துள்ளது. [1]

கனகோனா
நகரம்
கனகோனா is located in கோவா
கனகோனா
கனகோனா
Location in Goa, India
கனகோனா is located in இந்தியா
கனகோனா
கனகோனா
கனகோனா (இந்தியா)
ஆள்கூறுகள்: 15°01′N 74°01′E / 15.02°N 74.02°E / 15.02; 74.02
நாடு இந்தியா
மாநிலம்கோவா (மாநிலம்)
மாவட்டம்தெற்கு கோவா மாவட்டம்
அரசு
 • சட்டமன்ற உறுப்பினர்இதோர் பெர்னாண்டசு
 • தலைவர்நித்து சமீர் தேசாய்
ஏற்றம்10 m (30 ft)
மக்கள்தொகை (2011)மொழிகள்
 • மொத்தம்12,434
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுGA 10
இணையதளம்goa.gov.in

நிலவியல் தொகு

கனகோனா 15.02 ° வடக்கிலும், 74.02 ° கிழக்கிலும் அமைந்துள்ளது . [2] சராசரியாக 10 மீட்டர் (32 அடி) உயரத்தைக் கொண்டுள்ளது. கனகோனா கோவாவின் தெற்கே வட்டமாகும்.

வரலாறு தொகு

கனகோனாவின் வரலாற்று பெயர் "கன்வபுரம்" என்பதாகும்.

கல்வி தொகு

இங்குள்ள பிரபோதினி மண்டலத்தின் மல்லிகார்ஜூன கலை மற்றும் வணிகக் கல்லூரி கோவா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, இப்பகுதியின் உயர் கல்வித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் இந்த வட்டத்தின் முதன்மை கல்வி நிறுவனம் ஆகும். கனகோனாவில் இரண்டு உயர்நிலைகள் உள்ளன. [3]

புள்ளிவிவரங்கள் தொகு

2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, கனகோனா நகரில் 12,434 மக்கள் தொகை இருந்தது. மக்கள்தொகையில் ஆண்கள் 52%, பெண்கள் 48%. கனகோனாவின் சராசரி கல்வியறிவு விகிதம் 89.31% ஆகும். இது தேசிய சராசரியான 74.04% ஐ விட அதிகமாகும்; ஆண்களின் கல்வியறிவு 93.09% மற்றும் பெண் கல்வியறிவு 85.47%. மக்கள் தொகையில் 10% 6 வயதுக்குட்பட்டவர்கள். கொங்கணியைத் தவிர, மராத்தி மொழியும் இங்கு ஒரு சிலரால் பேசப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Canacona Map[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Falling Rain Genomics, Inc - Canacona
  3. "Shree Mallikarjun College of Arts & Commerce". Archived from the original on 19 April 2019. பார்க்கப்பட்ட நாள் 10 December 2013.

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Canacona
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  •   விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Canacona
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனகோனா&oldid=3047504" இலிருந்து மீள்விக்கப்பட்டது