இசுதானா நூருல் இமான் அரண்மனை

புருணே நாட்டு அரண்மனை

இசுதானா நூருல் இமான் (அரண்மனையின் நம்பிக்கை ஒளி) (ஆங்கிலம்:Istana Nurul Iman) என்பது புருனே சுல்தான், கசனல் போல்கியா மற்றும் புருனே அரசாங்கத்தின் இருக்கை ஆகியவற்றின் உத்தியோகபூர்வ இல்லமாகும் . இந்த அரண்மனை புருனேயின் தலைநகரான பந்தர் செரி பெகாவானுக்கு தென்மேற்கே சில கிலோமீட்டர் தொலைவில் புருனே ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது உலகின் மிகப்பெரிய தனியார் இல்லமாக கருதப்படுகிறது, இது "உலகின் மிகப்பெரிய குடியிருப்பு அரண்மனை" என்ற பட்டத்தைப் பெற்றது. இசுதானா நூருல் இமான்

வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் தொகு

"இசுதானா நூருல் இமான்" என்ற பெயர் மலாய் இசுதானா மற்றும் அரபு நூர்-ஓல் இமான் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்டது, மேலும் இதற்கு அரண்மனையின் நம்பிக்கை ஒளி என்று பொருள். இதை வடிவமைத்தவர் பிலிப்பைன்ஸ் விசயன் பகுதியின்கட்டிடக் கலைஞர் லியாண்ட்ரோ வி. லோக்சின் என்பவராவார். இவர் புருனேயின் இஸ்லாமிய மற்றும் மலாய் தாக்கங்களை எதிரொலிக்க தங்கக் குவிமாடங்கள் மற்றும் கவிந்த கூரைகளின் கட்டடக்கலை உருவத்தைப் பயன்படுத்தினார். அரண்மனையின் உட்புறத்தை குவான் செவ் வடிவமைத்துள்ளார், இதன் மற்ற படைப்புகள் துபாயில் உள்ள புர்ஜ் அல் அரபு மேற்கொண்டுள்ளது. கட்டுமானத்தை இங்கிலாந்தின் கட்டுமான நிறுவனமான அயலா அபோட் மற்றும் பட்டர்ஸ் கையாண்டனர், மேலும் 1984 ஆம் ஆண்டில் மொத்தம் 1.4 பில்லியன் அமெரிக்க டாலர் செலவில் முடிக்கப்பட்டது.

உலகின் மிகப்பெரிய அரண்மனை தொகு

"உலகின் மிகப்பெரிய அரண்மனை" என்ற பெரைப் பெறுவது கடினம், மற்றும் சர்ச்சைக்குரியது, ஏனெனில் வெவ்வேறு நாடுகள் தங்கள் அரண்மனையை மிகப் பெரியது எனக் கூற தங்கள் தனித்துவமான தரத்தைப் பயன்படுத்துகின்றன. பல்வேறு வரையறைகளைப் பயன்படுத்தி, பல அரண்மனைகள் உலகின் மிகப்பெரியவை எனக் கூறப்படுகின்றன: இசுதானா நூருல் இமான், பக்கிங்காம் அரண்மனை, குய்ரினல் அரண்மனை, மாட்ரிட்டின் அரண்மனை, இசுடாக்கோம் அரண்மனை, தடைசெய்யப்பட்ட நகரம், வெர்சாய் அரண்மனை, கார்செடா அரண்மனை, குளிர்கால அரண்மனை, இலூவ்ரே அரண்மனை, பிராக் கோட்டை மற்றும் உருமேனியாவின் நாடாளுமன்ற அரண்மனை ஆகியன் அவற்றில் சில.

கின்னசு சாதனை தொகு

கின்னஸ் உலக சாதனைக்காக பரிசீலிக்க, அரண்மனை ஒரு அரச இல்லமாக பயன்படுத்தப்பட வேண்டும், மேலும் அரண்மனையின் உட்புற தளங்களின் ஒருங்கிணைந்த பகுதி மட்டுமே கருதப்படுகிறது. இந்த தரங்களால் அளவிடப்பட்டபடி, கின்னஸ் உலக சாதனை தற்போது இசுதானா நூருல் இமானை "உலகின் மிகப்பெரிய குடியிருப்பு அரண்மனை" என்று கருதுகிறது.[1] இதன் கட்டுமானம் முடிந்ததும், இசுதானா நூருல் இமான் உலகின் மிகப்பெரிய குடியிருப்பு அரண்மனையாகவும், இதுவரை கட்டப்பட்ட மிகப்பெரிய ஒற்றை குடும்ப இல்லமாகவும் மாறியது.[2] இந்த அரண்மனையில் 1,788 அறைகள் உள்ளன, இதில் 257 குளியலறைகள், 5,000 விருந்தினர்கள் வரை தங்கக்கூடிய ஒரு விருந்து மண்டபம், 1,500 பேர் வசிக்கும் ஒரு மசூதி ஆகியவை அடங்கும்.[3] இந்த அரண்மனையில் 110 கார் நிருத்துமிடம், சுல்தானின் 200 போலோ குதிரைகளுக்கு, குளிர்சாதன இலாயம் மற்றும் 5 நீச்சல் குளங்கள் உள்ளன. மொத்தத்தில், இசுதானா நூருல் இமானில் 2,152,782 சதுர அடி (200,000 மீ²) தரைத்தளம் உள்ளது. இசுதானா நூருல் இமானில் 564 சரவிளக்குகள், 51,000 ஒளி விளக்குகள், 44 படிக்கட்டுகள் மற்றும் 18 லிப்ட் ஆகியன உள்ளன.

பணிகள் தொகு

சுல்தான் தனது உத்தியோகபூர்வ பார்வையாளர்களை அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறார். இந்த அரண்மனை புருனே அரசாங்கத்தின் அனைத்து மாநில செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக, பிரதமர் அலுவலகம், செயல்படுகிறது

அணுகல் தன்மை தொகு

இஸ்லாமிய ஈகைத்திருநாள் கொண்டாட்டத்தைத் தவிர அரண்மனை பொதுமக்களுக்குத் திறக்கப்படுவதில்லை, அந்த விழா நடைபெறும் நாட்களில் அரண்மனை சுமார் 110,000 பார்வையாளர்களைப் பெறுகிறது, அங்கு விருந்தினர்கள் உணவுப் பரிசுகளையும், சிறு குழந்தைகள் பணம் கொண்ட பைகளும் பெறுகிறார்கள். ரமலான் காலத்தின் 10 நாட்களில் தடரஸ் மற்றும் தாராவி பிரார்த்தனைக் கூட்டங்களுக்காக இந்த அரண்மனை முஸ்லிம்களுக்கு திறக்கப்பட்டுள்ளது

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. "Largest residential palace". Guinness World Records. Archived from the original on 30 May 2015. பார்க்கப்பட்ட நாள் 30 May 2015.
  2. Guinness World Records
  3. Bartholomew, James. The Richest Man in the World, Penguin Books Ltd; New Ed edition (22 February 1990). ISBN 0-14-010890-4, ISBN 978-0-14-010890-3