இசுமாயில் யூசுப் கல்லூரி
இசுமாயில் யூசுப் கல்லூரி (Ismail Yusuf College) இந்தியாவின் மும்பை மாநகரின் நான்காவது பழமையான கல்லூரியாகும். "ஐ ஒய் கல்லூரி" என்று பிரபலமாக அறியப்படும் இது மகாராட்டிரா அரசால் நிர்வகிக்கப்படுகிறது. இது வடக்கு மும்பையில் உள்ள மிகப் பழமையான கல்லூரியாகும். இது 1930ஆம் ஆண்டில் ஜோகேஸ்வரி மலையில் உள்ள சர் முகமது யூசுப் இசுமாயில், கே. டி. யின் நன்கொடையுடன் நிறுவப்பட்டது. 1924ஆம் ஆண்டில் பம்பாய் ஆளுநரான லெஸ்லி ஓர்மே வில்சன் என்பவரால் அடிக்கல் நாட்டப்பட்டது.[1]
குறிக்கோளுரை | "Sā vidyā yā vimuktaye" |
---|---|
வகை | அரசுக் கல்லூரி |
உருவாக்கம் | 1930 |
பட்ட மாணவர்கள் | இளம் அறிவியல், இளங்கலை வணிகவியல், இளங்கலை |
அமைவிடம் | , , இந்தியா 19°08′00″N 72°51′14″E / 19.13334°N 72.854022°E |
வளாகம் | நகரம், ஜோகேஸ்வரி, 54 ஏக்கர்கள் (220,000 m2) |
சுருக்கப் பெயர் | ஐ ஒய் கல்லூரி |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா), தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை, மும்பை பல்கலைக்கழகம் |
இணையதளம் | ismailyusufcollege |
துறைகள்
தொகுஅறிவியல்
தொகு- இயற்பியல்
- வேதியியல்
- தாவரவியல்
- விலங்கியல்
- கணிதம்
- புள்ளியியல்
கலை
தொகு- வரலாறு
- தத்துவம்
- பொருளியல்
- அரசியல் அறிவியல்
மொழி
தொகு- இந்தி
- ஆங்கிலம்
- அரபிக்
- மராத்தி
- பெர்சியன்
- உருது
முன்னாள் மாணவர்கள்
தொகு- காந்திலால் மார்டியா, கணிதவியலாளர் மற்றும் புள்ளியியல் நிபுணர்
- ஏ. ஆர். அந்துலே, மகாராட்டிரா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர்
- ரஃபீக் ஜகாரியா, இசுலாமிய அறிஞர் மற்றும் மகாராட்டிரா முன்னாள் அமைச்சர்
- பி. எல். தேசுபாண்டே, மராத்தி நாடக ஆசிரியர்
- காதர் கான், திரைப்படக் கலைஞர்
- அபீப் வாலி முகமது, கஜல் பாடகர்
- அம்ரோசு சித்திக், கணித அறிஞர், ஆசிரியர்
- அமீத் தல்வாய்
- சங்கர் வைத்யா, மராத்தி கவிஞர் மற்றும் ஐ. ஒய். கல்லூரியின் முன்னாள் மராத்தி பேராசிரியர்