இசுமாலியா நகரம்
இசுமாலியா (Ismailia) என்பது வடகிழக்கு எகிப்தில் உள்ள ஒரு நகரமாகும். எகிப்தின் "அழகான, மகிழ்ச்சியான நகரம்" என்று அறியப்படும் [1] இந்த நகரம் சுயஸ் கால்வாயின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது. மேலும் இது இசுமாயிலியா மாவட்டத்தின் தலைநகரமுமாகும். 2012 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்த நகரத்தின் மக்கள் தொகை 366,669 ஆகும் (சுமார் 750,000, சுற்றியுள்ள கிராமப்புறங்கள் உட்பட). இது வடக்கே சயீது துறைமுகம் மற்றும் தெற்கே சுயஸ் இடையே அமைந்துள்ளது.
இசுமாலியா
الإسماعيلية | |
---|---|
அடைபெயர்(கள்): "அழகான, மகிழ்ச்சியான நகரம்" | |
ஆள்கூறுகள்: 30°35′N 32°16′E / 30.583°N 32.267°E | |
நாடு | எகிப்து |
மாவட்டம் | இசுமாலியா |
பரப்பளவு | |
• மொத்தம் | 210 km2 (80 sq mi) |
ஏற்றம் | 13 m (43 ft) |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 3,66,669 |
• அடர்த்தி | 1,700/km2 (4,500/sq mi) |
இனம் | இசுமாயிலியாட்டா |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்) |
இடக் குறியீடு | (+20) 69 or (+20) 64 |
வரலாறு
தொகு1863 ஆம் ஆண்டில், சுயஸ் கால்வாயைக் கட்டியபோது, எகிப்த்தின் ஆட்சியாளர் இசுமாயில் பாஷா என்பவரால் இந்த நகரம் நிறுவப்பட்டது. 1882 இல் ஆங்கிலேய-எகிப்திய போரைத் தொடர்ந்து ஆங்கிலேயர்கள் இங்கு ஒரு தளத்தை நிறுவினர்.
சுயஸ் கால்வாய் ஆணையத்தின் தலைமை அலுவலகம் திம்சா ஏரியின் கரையில் அமைந்துள்ளது. ஐக்கிய இராச்சியமும், பிரான்சும் கால்வாய்ப் பணிகளில் ஈடுபட்டபோது ஏராளமான கட்டிடங்கள் கட்டபட்டன. இந்த கட்டிடங்களில் பெரும்பாலானவை தற்போது கால்வாய் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளால் பயன்படுத்தப்படுகின்றன.
முதலாம் உலகப் போரின்போது ஆங்கிலேயர்கள் அங்கு ஒரு விமானத் தளத்தைக் கொண்டிருந்தனர். மேலும், உரோமானி போர் இதன் அருகிலேயே நடந்தது. 1919 ஆம் ஆண்டில் சர் ராபர்ட் லோரிமர் என்பவரால் இசுமாயிலியா போர்க் கல்லறை வடிவமைக்கப்பட்டது. [2]
1973 இல் இசுமாயிலியாப் போர் இந்த நகரில் நடந்தது.
கலாச்சாரமும் பொழுதுபோக்கும்
தொகுகலையும் திருவிழாக்களும்
தொகுஇந்நகரம் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முக்கியமான விழாக்களை நடத்துகிறது. முதலாவது சூன் மாதம் நடைபெறும் ஆவணப்படங்கள் மற்றும் குறும்படங்களுக்கான சர்வதேச திரைப்பட விழா. [3] சூன் 2014 இல் தொடர்ச்சியாக 17 வது திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டது. இரண்டாவது செப்டம்பர் மாதம் நடைபெறும் இசுமாயிலியா சர்வதேச நாட்டுப்புற கலை விழா. இந்த திருவிழாவில் உலகெங்கிலும் உள்ள நாட்டுப்புற குழுக்கள் நகரில் சந்திக்கின்றன. இங்கு அவர்கள் தங்கள் நாடுகளின் கலாச்சாரத்தை குறிக்கும் நாட்டுப்புற நடனங்களை செய்கிறார்கள். [4]
தொல்பொருள் அருங்காட்சியகம்
தொகு1932 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இசுமாயிலியா அருங்காட்சியகம் ஒரு முக்கிய ஈர்ப்பாகும். பார்வையாளர்கள் பல்வேறு குறிப்பிடத்தக்க தொல்பொருள் கண்டுபிடிப்புகளை குறிப்பாக இசுமாயிலியா மாவட்டத்தின் தளங்களான தெல் எல்-மஸ்குதா, வடக்கு சினாய் மற்றும் மேல் எகிப்திலிருந்து காணலாம்.
சுற்றுலா
தொகுசர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு நகரம் ஒரு முக்கிய சுற்றுலா தலமாக இல்லை. ஆனால் எகிப்திலிருந்து அதிக அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இந்த நகரம் கெய்ரோவிலிருந்து சுமார் தொண்ணூறு நிமிட பயணத்தில் அமைந்துள்ளாது. இங்கிருந்து தெற்கு சினாயில் உள்ள ஷர்ம் எல்- ஷேக்கிற்கு சுமார் நான்கு மணிநேர பயணத்தில் அடையலாம் .
தபாவில் உள்ள தபா பார்டர் கிராசிங் மற்றும் ரஃபாவில் ரஃபா பார்டர் கிராசிங் ஆகிய இரண்டிற்கும் ஓட்டுநர் ஏறக்குறைய நான்கு மணி நேர இயக்கிகள். ஆளுநரின் உள்ளூர் விளையாட்டுக் குழுவான இஸ்மெய்லி ஸ்போர்ட்ஸ் கிளப்பின் அசல் கிட் வண்ணத்திற்குப் பிறகு மஞ்சள் மற்றும் நீல நிறங்களில் வரையப்பட்ட நடைபாதைகளுக்கும் இந்த நகரம் பிரபலமானது.
காலநிலை
தொகுநகரம் கோப்பன்-கீகர் காலநிலை வகைப்பாடு காலநிலையை கொண்டுள்ளது. சூடான பாலைவனம் என வகைப்படுத்துகிறது. 14 சூன் 1944 இல் அதிகபட்ச வெப்பநிலை 47 ° C (117 ° F) ஆகவும், சனவரி மாதத்தில் வெப்பம் 0.2 ° C (32.4 ° F) ஆகவும் இருந்தது..
குறிப்புகள்
தொகு- ↑ "Photo: The Lake,Ismailia,Egypt,The City of Beauty and Enchantment,Africa,c1935". oldphotobank. Archived from the original on 2021-01-17. பார்க்கப்பட்ட நாள் 2020-12-09.
- ↑ Dictionary of Scottish Architects: Robert Lorimer
- ↑ "Ismailia Film Festival 21st version (2019)edition to be from 10 April to 16 April 2019". Ismailia Film Festival. பார்க்கப்பட்ட நாள் 4 August 2014.
- ↑ Egypt State Information Service http://www.sis.gov.eg/En/Templates/Articles/tmpArticles.aspx?CatID=1078#.U9_y6Xt5ElQ. பார்க்கப்பட்ட நாள் 4 August 2014.
{{cite web}}
: Missing or empty|title=
(help)
வெளி இணைப்புகள்
தொகு- Ismaïlia governorate official website
- Diocese of Ismailia
- Suez Canal University official website
- Short animation festival in Ismailia