இசுலாமியத் தமிழ்க் காப்பியங்கள்
இசுலாமியத் தமிழ்க் காப்பியங்கள் எனப்படுபவை இசுலாமியத் தமிழ்ப் புலவர்களால் எழுதப்பட்ட தமிழ்க் காப்பியங்கள் ஆகும். கிபி 1648 ஆம் ஆண்டிற்கும் கிபி 1894 ம் ஆண்டிருக்கும் இடைப்பட்ட காலத்தில் 16 இசுலாமியத் தமிழ்க் காப்பியங்கள் தோன்றின.[1]
பெருங் காப்பியங்கள்
தொகு- கனகாபிடேக மாலை - கனக கவிராயர் - 1648
- சீறாப்புராணம் - உமறுப் புலவர் - 1703
- திருமணக் காட்சி - சேகாதி நயினார் - 1710
- சின்னச் சீறா - பனீ அகமது மரைக்காயர் - 1732
- இராச நாயகம் - வண்ணக் களஞ்சியப் புலவர் - 1807
- குத்பு நாயகம் - சேகனாப் புலவர் - 1810
- திருக்காரணப் புராணம் - சேகனாப் புலவர் - 1812
- குத்பு நாயகம் - வண்ணக் களஞ்சியப் புலவர் - 1814
- முகைதீன் புராணம் - பதுறுத்தீன் புலவர் - 1816
- திருமணி மாலை - சேகனாப் புலவர் - 1816
- இறவுசுல் கூல் படைப்போர் - குஞ்சுமூசு லெப்பை - 1818
- புதூகுசா அம் - சேகனாப் புலவர் - 1821
- தீன் விளக்கம் - வண்ணக் களஞ்சியப் புலவர் - 1821
- நவமணி மாலை - ஐதுறூசு நயினார்ப் புலவர் - 1855
- நாகூர்ப் புராணம் - குலாம் காதிறு நாவலர் - 1882
- ஆரிபு நாயகம்
சிறு காப்பியங்கள்
தொகு- மிகுராசு மாலை - ஆலிம்புலவர்
- பொன்னரிய மாலை - மின்னா நுருத்தீன் புலவர்
- சாதுலி நாயகம் - முகம்மது முகியித்தீன் லெப்பை
- மூசாநபி புராணம் - முகம்மது நூருத்தீன்
- அபூ கமா மாலை - செய்தக்காதிப் புலவர்
- இராசமணி மாலை - பக்கீர் மதாறு புலவர்
- செய்யிதத்துப் படைப்போர் - குஞ்சுமூசுப் புலவர்
- யூசுபு நபி கிசா - மதாறு சாகிப் புலவர்
- சைத்தூன் கிசா - அப்துல் காதர் சாகிபு
தற்காலக் காப்பியங்கள்
தொகு- யூசுப் சுலைகா காப்பியம்
- காதல் யாத்திரை (லைலா - மஜ்னூன்) (குறுங் காப்பியம்)
- பிரளயம் கண்ட பிதா (குறுங் காப்பியம்)
மேற்கோள்கள்
தொகு- ↑ மு. சாயபு மரைக்காயர். தமிழ் இலக்கிய வரலாற்றில் இஸ்லாமியர் காலம். http://export.writer.zoho.com/public/emsabai/aug10-article6/fullpage[தொடர்பிழந்த இணைப்பு]
உசாத்துணைகள்
தொகு- வாழ்வியற் களஞ்சியம். தொகு 2.