இசுலாமியப் பொற்காலம்

(இசுலாமிய பொற்காலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இசுலாமிய பொற்காலம் (Islamic Golden Age) என்பது எட்டாம் நூற்றாண்டு முதல் பன்னிரென்டாம் நூற்றாண்டு வரையான, பாக்தாத்தை ஆண்டுவந்த அப்பாசியர்களின் காலகட்டத்தை குறிப்பது. எட்டாம் நூற்றாண்டின் மத்தியில் அப்பாசியக் கலீபாக்கள், தங்கள் தலைநகரை திமிசுகு நகரில் இருந்து பாக்தாத்துக்கு மாற்றியதை தொடர்ந்து இசுலாமிய கலாச்சாரம் ஏற்றம் கான தொடங்கியது[1]. இந்த காலகட்டத்தில் பொறியியல், வணிகம், பொருளாதாரம், தொழிற்சாலை, அறிவியல், தொழினுட்பம், கட்டடக்கலை, விவசாயம், ஓவியம், சட்டம், இலக்கியம், தத்துவம், கடல் பயனம் என பல துறைகளிலும் இசுலாமியர்களின் பங்களிப்பு மிகுந்து இருந்தது. பைத் அல் இக்மா (ஞானத்தின் இல்லம்) எனும் நூலகம் ஏற்படுத்தப்பட்டு, உலகின் பழமையான புத்தகங்களும், இலக்கியங்களும் அரபு மற்றும் பாரசீக மொழியில் தொகுக்கப்பட்டன[2]. பின்னர் இவை இலத்தீன், எபிரேயம், துருக்கியம் ஆகியவற்றுக்கும் மொழி மாற்றம் செய்யப்பட்டது. மற்ற சமயத்தவரின் உரிமைகள் காக்கப்பட்டன. இந்த காலகட்டத்தில்தான் இந்தியர்களின் கணித எண்னான சுழி (0) அரபுலகத்துக்கு ஏற்றுமதியானது. பிரபல அரபு கணிதவியலறான அல்-குவாரிசுமி இதன் முக்கியத்துவத்தை பிரபடுத்தத் தொடங்கியதை அடுத்து, சுழியம் 12ம் நூற்றாண்டில் ஐரோப்பாவுக்கு அறிமுகமாகியது. தொடர்ந்து நடைபெற்ற சிலுவைப்போர்களை அடுத்து சரிவை சந்திக்கத் தொடங்கிய இசுலாமிய பொற்கால ஆட்சி, 1258ல் ஏற்பட்ட மங்கோலிய படையெடுப்பை அடுத்து முடிவுக்கு வந்தது[3].

இசுலாமிய பொற்கால பேரரசின் விரிவு

அல் பிருனி, அல் பராபி, இப்னு சீனா, அல்-குவாரிசுமி, இப்னு துர்க், ஓமர் கய்யாம், அல் கசாலி ஆகியோர் இந்த கால கட்டத்தில் வாழ்ந்து வந்த சில முக்கிய நபர்கள் ஆவர்.

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசுலாமியப்_பொற்காலம்&oldid=3909193" இலிருந்து மீள்விக்கப்பட்டது