இசு-உன்-நிசா

முகலாய பேரரசர் ஷாஜகானின் மூன்றாவது மனைவி

இசு-உன்-நிசா பேகம் (Izz-un-Nissa Begum) முகலாய பேரரசர் ஷாஜகானின் மூன்றாவது மனைவி ஆவார். இவர், ஆக்பராபதி மகால் என்ற பெயரால் பிரபலமாக அறியப்படுகிறார். (ஒருவேளை இவர் ஆக்ராபாத் நகரைச் சேர்ந்தவர் என்பதால் இவ்வாறு அழைக்கப்பட்டிருக்கலாம்). மேலும், இவர்து ஷாஜகானாபாத்தில் (இன்றைய பழைய தில்லி ) 1650இல் ஆக்பராபதி பள்ளிவாசலை கட்டினார். சில சமயங்களில் பொதுவாக, இவர் சிரிந்தி பேகம் எனவும் அழைக்கப்படுகிறார்.

இசு-உன்-நிசா பேகம்
عزالنساء بیگم
இறப்பு28 சனவரி 1678[1]
ஆக்ரா, இந்தியா
புதைத்த இடம்
சிரிந்து பேகம் கல்லறை, பழைய தில்லி[2]
துணைவர்ஷாஜகான்
குழந்தைகளின்
பெயர்கள்
ஜஹான் அப்ரோஸ் மிர்சா
மரபுதைமூரித் (திருமணம் மூலம்)
தந்தைஷாநவாஸ் கான்
மதம்இசுலாம்

குடும்பம்

தொகு

இசு-உன்-நிசா பேகம், பைராம் கானின் பேரனும், முதலாம் அப்துல் ரஹீம் கானின் மகனுமான ஷாநவாஸ் கான் என்ற பட்டத்தை வைத்திருந்த மிர்சா ஐராசின் மகள் ஆவார்.[3] இவருக்கு மிர்சா கான் மனுசீர் என்ற ஒரு சகோதரர் இருந்தார்.[4] பைராம் கான் நடு ஆசியாவின் ஆப்கானித்தான் நாட்டில் படாக்சான் என்ற மாகாணத்தில் பிறந்த கலப்பு துருக்கி இனத்தின் வழித்தோன்றல் ஆவார்.[5]

திருமணம்

தொகு

161ஆம் ஆண்டில், தக்காண வெற்றிக்குப் பிறகு, இளவரசர் குர்ரம் (பிற்கால ஷாஜஹான்) புதிதாக கைப்பற்றப்பட்ட அனைத்து தெற்கு தீவுகளுக்கும் இசு-உன்-நிசாவின் தாத்தா அப்துல் ரஹீம் கானை ஆளுநராக நியமிக்க வேண்டும் என தனது தந்தை பேரரசர் ஜஹாங்கீருக்கு முன்மொழிந்தார். மேலும் இவரது தந்தை, ஷாநவாஸ் கானை தெற்கு தீவுகளின் உண்மையான தளபதியாகவும் ஆக்கினார். இரண்டு நியமனங்களும் ஷாஜஹானின் எதிர்கால விசுவாசத்திற்கு உத்தரவாதம் அளித்தன. ஷாநவாஸின் இளம் மகள் இசு-உன்-நிசா பேகத்தை தனது மூன்றாவது மனைவியாக ஆக்கிக்கொள்வதன் மூலம், அவர் பாரம்பரிய முறையில் மிகவும் உறுதியாக குடும்பத்தை இணைத்தார்.[6] ஷாஜஹானின் தனது தந்தை ஜஹாங்கிரைக் கூட கலந்தாலோசிக்க வில்லை. இருப்பினும், ஷாஜஹானின் ஆட்சியின் சமகால அரசவை வாழ்க்கை வரலாற்றாசிரியர் முகம்மது அமின் கசுனியின் கருத்துப்படி, இளவரசருக்கு திருமணம் கட்டாயப்படுத்தப்பட்டது.[6] திருமணம் செப்டம்பர் 2, 1617 அன்று புர்ஹான்பூரில் நடந்தது. மேலும் இது ஒரு முழு 'மத ஒப்புதல் திருமண' விழாவாக ஆனது.[7]

25 ஜூன் 1619 அன்று, ஆக்ராவில், [8] இவர் சுல்தான் ஜஹான் அப்ரோஸ் மிர்சா எனது தனது ஒரே மகனைப் பெற்றெடுத்தார். ஆனால் குழந்தை ஒரு நல்ல நேரத்தில் பிறக்காததால், ஷாஜஹான் குழந்தையை தன்னுடன் வைத்திருக்க விரும்பவில்லை. இதனால் தக்காணத்திலுள்ள தனது தாத்தா அப்துல் ரஹீம் கானின் மகள் ஜனன் பேகத்திடம் குழந்தையை பரமரிப்புக்காக அனுப்பினார்.[9] 1621 ஆம் ஆண்டில் பெரியம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஷாஜகானின் மகன் இளவரசர் ஷா ஷுஜா இறந்துவிடுவார் என்று அனைத்து சோதிடர்களும் நினைத்ததாக ஜஹாங்கீர் தனது நினைவுக் குறிப்பான துஸ்க்-இ-ஜஹாங்கிரியில் கூறியுள்ளார். இருப்பினும், சோதிடர் ஜோதிக் ராயின் கூற்றுப்படி, ஜஹாங்கீர் விரும்பாத அவரது மற்றொரு மகன்தான் இறந்துவிடுவார். அதனால் இசு-உன்-நிசாவின் மகன் மார்ச் 1621இல் புர்ஹான்பூரில் அகால மரணமடைந்தார்.[10] [8]

சமகால வரலாற்றாசிரியர் இனாயத் கானின் கூற்றுப்படி, ஷாஜகான் இவரையும் கந்தாரி பேகத்தையும் திருமணம் செய்திருந்தாலும், 'அவரது முழு மகிழ்ச்சியும் இந்த புகழ்பெற்ற பெண்மணியையே மையமாகக் கொண்டிருந்தது ( மும்தாசு மகால் ).[9][11] [12]

இறப்பு

தொகு

1666 இல் தனது கண்வர் இறந்த இவர் 12 ஆண்டுகளுக்குப் பிறகு 1678 ஜனவரி 28 அன்று ஆக்ராவில் இறந்தார். ஷாஜகானாபாத்தின் புறநகர்ப் பகுதியில் உள்ள சப்ஜி மண்டி பகுதியில் இவரால் அமைக்கப்பட்ட சிரிந்தி தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இவரது கல்லறை சிரிந்தி பேகத்தின் கல்லறை என்று குறிப்பிடப்படுகிறது. இது இவரது மற்றொரு பெயராக இருக்க வேண்டும்.[2]

கட்டிடக்கலைக்கான பங்களிப்புகள்

தொகு

இவர், தில்லியின் தெற்கு பகுதியில் உள்ள ஒரு முக்கிய சந்தையில் பயணியர் விடுதியையும் ஒரு பள்ளிவாசலையும் கட்டினார். ஷாஜகான் இவரது மசூதியை 1656இல் கட்டி முடிக்கும் வரை பிரார்த்தனைக்கு பயன்படுத்தினார். இது இப்போது இல்லை, ஆனால் 19 ஆம் நூற்றாண்டின் எடுத்துக்காட்டுகளாளான பதேபுரி மகால் (ஷாஜஹானின் மனைவிகளில் ஒருவர்) மற்றும் ஜஹானாரா பேகம் ஆகியோரால் கட்டப்பட்ட சமகால கட்டிடங்களைப் போன்றது என்பதைக் குறிக்கிறது.[13]

மேற்கோள்கள்

தொகு
  1. Awrangābādī, Shāhnavāz Khān; Shāhnavāz, ʻAbd al-Ḥayy ibn; Prashad, Baini (1952). The Maāthir-ul-umarā: being biographies of the Muhammādan and Hindu officers of the Timurid sovereigns of India from 1500 to about 1780 A.D. (in ஆங்கிலம்). Asiatic Society. p. 924.
  2. 2.0 2.1 Sarker, Kobita (2007). Shah Jahan and his paradise on earth : the story of Shah Jahan's creations in Agra and Shahjahanabad in the golden days of the Mughals (1. publ. ed.). Kolkata: K.P. Bagchi & Co. p. 39. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170743002.
  3. Bibliotheca Indica - Volume 61, Issue 1. Baptist Mission Press. 1873. pp. 334–337.
  4. Maāthir-ul-umarā: being biographies of the Muhammādan and Hindu officers of the Timurid sovereigns of India from 1500 to about 1780 A.D. Asiatic Society. 1952. p. 80.
  5. The History of Humayun (Humayun-Nama). Royal Asiatic Society. 1902. pp. 281.
  6. 6.0 6.1 Nicoll 2009, ப. 103.
  7. Nicoll 2009, ப. 104.
  8. 8.0 8.1 Nicoll 2009.
  9. 9.0 9.1 Khan & Begley 1990.
  10. Jahangir, Emperor; Thackston, Wheeler McIntosh (1999). The Jahangirnama : memoirs of Jahangir, Emperor of India. Washington, D. C.: Freer Gallery of Art, Arthur M. Sackler Gallery, Smithsonian Institution; New York: Oxford University Press.
  11. Shah Jahan and his paradise on earth: the story of Shah Jahan's creations in Agra and Shahjahanabad in the golden days of the Mughals. K.P. Bagchi & Co. 2007. p. 24.
  12. The complete Taj Mahal and the riverfront gardens of Agra. Bookwise (India) Pvt. Ltd.
  13. Asher, [by] Catherine B. (1992). The new Cambridge history of India (Repr. ed.). Cambridge: Cambridge Univ. Press. p. 201. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780521267281.

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இசு-உன்-நிசா&oldid=3937448" இலிருந்து மீள்விக்கப்பட்டது