இடாய்ச்சு வேற்றுமை (இலக்கணம்)

இடாய்ச்சு மொழியில் நான்கு வகையான வேற்றுமைகள் உள்ளன. அவை,

  1. முதலாம் வேற்றுமை (Nominative-Nominativ)
  2. இரண்டாம் வேற்றுமை (Accusative-Akkusativ)
  3. நான்காம் வேற்றுமை (Dative-Dativ)
  4. ஆறாம் வேற்றுமை (Genitive-Genitiv)


முதலாம் வேற்றுமை தொகு

பயன்படுத்தப்படும் இடங்கள்:

௧. வினைமுற்றுடன்

௨. bleiben, heißen, scheinen, sein, werden, nennen என்னும் வினைச்சொற்களின் பின் வரும் பொழுதும், செயற்பாட்டு வினை வாக்கியங்களிலும்.

௩. வினையற்ற பெயர்ச்சொற்களுடனும்(Noun) இடப் பெயர்ச்சொற்களுடனும்(Pronoun) (ஏவல் வாக்கியங்களில் வருவது போன்று).

இரண்டாம் வேற்றுமை தொகு

பயன்படுத்தப்படும் இடங்கள்:

௧. இரண்டாம் வேற்றுமையின் செய்யப்படுபொருளை உணர்த்துவதற்கு.

௨. bis, durch, für, gegen, ohne, um மற்றும் wider என்னும் முன்விபக்திகளுக்கு பின்.

௩. முன்விபக்தியின்றி ஒரு காலகட்டத்தயோ அல்லது கால அளவையோ குறிக்க.

௪. நகரும் வினைகளுடன் வரும்பொழுது, திசையையோ அல்லது தூரத்தையோ குறிக்க.

௫. வாழ்த்துக்களுடன்.

௬. ஆகிய வினைகளுடன் இரண்டு இரண்டாம் வேற்றுமை செய்யப்படுபொருட்கள் வரும்.

௭. அளவை குறிக்கும் வினை உரிச்சொற்களுடன்.

குறிப்பு: entlang என்னும் முன்விபக்தி, இரண்டாம் வேற்றுமையில் பெயர்ச்சொல்லை பின்தொடர்ந்தே வரும்.


நான்காம் வேற்றுமை தொகு

பயன்படுத்தப்படும் இடங்கள்:

௧. நான்காம் வேற்றுமையின் செய்யப்படுபொருளை குறிக்க.

௨. ab, aus, außer, bei, gemäß, laut, mit, nach, seit, von, zu என்னும் சில முன்விபக்திகளுக்கு பின்.

குறிப்பு: (an)statt, dank, trotz, während, wegen ஆகிய முன்விபக்திகள் நான்காம் வேற்றுமையுடனும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், பொதுவாக அவைகளை ஆறாம் வேற்றுமையே தொடர்ந்து வரும்.


ஆறாம் வேற்றுமை தொகு

பயன்படுத்தப்படும் இடங்கள்:


மேலும் காண்க தொகு