இடைச்செருகல்
பழமையான தமிழ் நூல்களில் பிற்காலத்தவர் தம் கருத்தைத் திணிக்கும் பாடல்களை ஆங்காங்கே சேர்த்துவிடுவதை இடைச்செருகல் என்கிறோம்.
- இடைச்செருகல்கள்
- தொல்காப்பியத்தில் சில:
- அகத்திணையியலில் மக்களை ஆயர், வேட்டுவர் எனப் பகுத்துக் காட்டும் பகுதி தொல்காப்பியருடையது. சங்கப்பாடல்களில் இத்தகைய பாகுபாடுகளே உள்ளன. நால்வர், உயர்ந்தோர், பின்னோர் எனக் கூறும் 6 நூற்பாக்கள் இடைச்செருகல்.
- மரபியலில் ஆண், பெண் விலங்கினங்களின் பெயரைக் கூறிய பின்னர், புல் மர வகைகளின் இலை, பூ, காய் வகைகளை விளக்குவதற்கு முன்னர் இடையில் அந்தணர், அரசர், வைசியர், வேளாண்-மாந்தர் ஆகியோரைப் பற்றிப் பேசும் 15 நூற்பாக்கள் இடைச்செருகல்
- மேலும் ஆங்காங்கே சங்க காலத்துக்குப் பிற்பட்டபழக்க வழக்கங்களைக் கூறும் சிறுசிறு மாற்றங்கள்
- கம்பராமாயணத்தில் ஆங்காங்கே
- பெரியபுராணத்தில் வெள்ளியார் 33 பாடல்கள் [1]
அடிக்குறிப்பு
தொகு- ↑ சி. கே. சுப்பிரமணிய முதலியார், செந்தமிழ் (இதழ்) தொகுதி 17 பக்கம் 345-353