இடை தோலியப்புற்று
இடைத் தோலியப்புற்று (Mesothelioma) என்பது பல உடல் உள்ளுறுப்புகளை மூடியுள்ள மீசோதெலியம் எனப்படும் திசுக்களின் மெல்லிய அடுக்கிலிருந்து உருவாகும் ஒரு வகையான புற்றுநோயாகும்[8]. மீசோதெலியோமா, இடைத்தோற் புற்று என்ற பெயர்களாலும் இதை அழைக்கலாம். நுரையீரல், மார்புச்சுவர் ஆகிய உறுப்புகளின் புறணி இந்நோயால் அதிகம் பாதிக்கப்படுகிறது[1]. வயிற்றுப் புறணியும் பெரிகார்டியம் எனப்படும் இதய உறையும்[9], விந்தகத்தைச் சுற்றியுள்ள திசு உறையும் மிக அதிகமாகப் பாதிக்கபடுவதில்லை. என்றாலும் இவையும் பாதிக்கப்படலாம்[1][10]. நுரையீரலைச் சுற்றியுள்ள நீர்மம் காரணமாக மூச்சுத் திணறல், வயிறு வீக்கம், மார்புச் சுவரில் வலி, இருமல், சோர்வாக உணர்தல், எடை குறைதல் போன்றவை இடைத்தோற் புற்றுநோயின் அறிகுறிகள் ஆகும்[1]. பொதுவாக இத்தகைய அறிகுறிகள் மெதுவாகத் தோன்றும்[2].
இடைத்தோற் புற்றுநோய் Mesothelioma | |
---|---|
ஒத்தசொற்கள் | இடைத்தோலியப் புற்றுநோய் |
இடை தோலியப்புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள இடப்பக்கம் விரிவடைந்த நுரையீரல் இடைத்தோல் நிணநீர்க்கணு-வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி காட்டும் படம் | |
சிறப்பு | புற்றுநோயியல் |
அறிகுறிகள் | மூச்சுத்திணறல், அடிவயிறு வீக்கம், மார்பகச் சுவர் வலி, இருமல், சோர்வாக உணர்தல்,எடையிழப்பு[1] |
சிக்கல்கள் | நுரையீரலைச் சுற்றி திரவம் வெளிப்படுதல்[1] |
வழமையான தொடக்கம் | படிப்படியாகத் தொடங்கும்[2] |
காரணங்கள் | ~ 40 ஆண்டுகளானகல்நார் வெளிப்பாடு[3] |
சூழிடர் காரணிகள் | மரபியல், சிமியன் வைரசு 40-இன் தொற்று[3] |
நோயறிதல் | மருத்துவப் படிமவியல், உயிரணு உயிரியல், உயிரகச்செதுக்கு[2] |
தடுப்பு | கல்நார் வெளிப்பாட்டினைக் குறைத்தல் |
சிகிச்சை | அறுவை சிகிச்சை,கதிர் மருத்துவம், வேதிச்சிகிச்சை, செயற்கை முறை இடைவெளி அழித்தல்[4] |
முன்கணிப்பு | ஐந்து ஆண்டுவரை ஆயுட்காலம் ~8% (US)[5] |
நிகழும் வீதம் | 60,800 (2015 இல்)[6] |
இறப்புகள் | 32,400 (2015)[7] |
80% க்கும் அதிகமான இடைத்தோற் புற்று நோயாளிகள் சிலிக்கேட்டு கனிமமான கல்நார் வெளிப்பாட்டின் காரணமாக நோய்பாதிப்புக்கு உட்படுகிறார்கள். கல்நாரின் வெளிப்பாடு அதிகரிக்கும்போது நோய் ஆபத்து வாய்ப்பும் அதிகரிக்கிறது[3]. 2013 ஆம் ஆண்டு கிடைத்த தரவுகளின்படி, உலகளவில் சுமார் 125 மில்லியன் மக்கள் பணியில் இருக்கும்பொழுது கல்நார் வெளிப்படும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்[11]. கல்நாரை சுரங்கம், கல்நார் தயாரிப்பு, கல்நார் தயாரிப்புகளுடன் பணிபுரிபவர், கல்நார் தொழிலாளர்களுடன் வாழ்பவர்கள் அல்லது கல்நார் இடம்பெற்றுள்ள கட்டிடங்களில் வேலை செய்பவர்கள் போன்றவர்களுக்கு அதிக அளவில் நோய் பாதிப்பு ஏற்படுகிறது. கல்நார் வெளிப்பாடு மற்றும் புற்றுநோயின் ஆரம்பம் பொதுவாக கல்நார் வெளிப்பாட்டின் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகே அறியப்படுகின்றன. கல்நாருடன் பணிபுரிந்த ஒருவரின் ஆடைகளை துவைப்பதும் ஆபத்தை அதிகரிக்கும். கல்நார் வெளிப்பாடு மற்றும் புற்றுநோயின் ஆரம்பம் பொதுவாக கல்நார் வெளிப்பாட்டின் சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகே அறியப்படுகின்றன. கல்நார் தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் உடைகளை சலவை செய்பவர்களுக்கும் கூட இந்நோய் பாதிப்பின் வாய்ப்பு அதிகம் என்று கூறப்படுகிறது [11]. சிமியன் வைரசு 40 இன் தொற்றும் மரபியல் கோளாறுகளும் கூட நோய் வாய்ப்பை அதிகரிக்கும் காரணிகளாகும் [3]. ஊடுகதிர் நிழற்படம் மற்றும் சி.டி சிகேன் சோதனைகளின் அடிப்படையில் நோயறிதல் காணப்படுகிறது. புற்றுநோயால் உருவாக்கப்படும் நீர்மம் அல்லது திசு பரிசோதனை மூலம் இடைத்தோற் புற்றுநோய் உறுதிப்படுத்தப்படுகிறது [2].
கல்நார் வெளிப்பாட்டைக் குறைப்பதன் மூலம் இடைத்தோற் புற்று நோய் வராமல் தடுக்க இயலும். அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் கீமோதெரபி ஆகியவை சிகிச்சைகளாக வழங்கப்படுகின்றன. மென்மையும் வழவழப்பும் கொண்ட சீமைச் சுண்ணாம்புக் கல்லால் நுரையீரல்களுக்கு இடையேயுள்ள நீர்மத்தால் நிரம்பிய இடைவெளியை செயற்கை முறையில் உட்தசைகளை இணைக்கும் மருத்துவச் செயல்முறை மூலமும் சிகிச்சை இந்நோய்க்கு சிகிச்சையளிக்கப்படுகிறது. இதனால் நுரையீரலைச் சுற்றி அதிக நீர்மம் சூழப்படுவது தடுக்கப்படுகிறது [4]. சிசுபிளாட்டின் என்ற செல்நச்சு மருந்தும் பெமெட்ரெக்சு என்ற வேதிச்சிகிச்சை மருந்தும் இந்நோய்க்கான வேதிச்சிகிச்சையின்போது வழங்கப்படுகின்றன[2]. நோயறிதலைத் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் உயிர்வாழும் நபர்களின் சதவீதம் அமெரிக்காவில் சராசரியாக 8% ஆகும்[5].
2015 ஆம் ஆண்டில், சுமார் 60,800 பேருக்கு இடை தோலியப்புற்று நோய் பாதிப்பு இருந்தது. 32,000 பேர் இந்த நோயால் இறந்தனர்[6] [7]. இடை தோலியப்புற்று நோய் பாதிப்பின் விகிதங்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் வேறுபடுகின்றன[3]. ஆத்திரேலியா, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் அதிகமாகவும் சப்பானில் சற்று குறைவாகவும் இந்நோய் பாதிப்பு உள்ளது[3]. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஆண்டுக்கு சுமார் 3,000 பேர் இடைத்தோற் புற்றால் பாதிக்கப்படுகின்றனர் [12]. பெரும்பாலும் பெண்களை விட ஆண்களுக்கு இந்நோயின் பாதிப்பு அதிகம் நிகழ்கிறது[3].
1950 ஆம் ஆண்டுகளிலிருந்து இடைத்தோற் புற்று நோயின் விகிதம் அதிகரித்து வருகிறது. நோய் கண்டறிதல் பொதுவாக 65 வயதிற்குப் பிறகு நிகழ்கிறது[3]. பெரும்பாலான மரணங்கள் 70 வயதிற்குள் நிகழ்கின்றன[3]. கல்நாரின் வணிக பயன்பாட்டிற்கு முன்பு இந்த நோய் பாதிப்பு அரிதாகவே இருந்தது[3].
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "Malignant Mesothelioma Treatment–Patient Version (PDQ®)". NCI. September 4, 2015. Archived from the original on 5 April 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2016.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Kondola, S (12 February 2016). "Malignant pleural mesothelioma: an update on diagnosis and treatment options.". Therapeutic Advances in Respiratory Disease 10 (3): 275–88. doi:10.1177/1753465816628800. பப்மெட்:26873306.
- ↑ 3.00 3.01 3.02 3.03 3.04 3.05 3.06 3.07 3.08 3.09 Robinson, BM (November 2012). "Malignant pleural mesothelioma: an epidemiological perspective.". Annals of Cardiothoracic Surgery 1 (4): 491–6. doi:10.3978/j.issn.2225-319X.2012.11.04. பப்மெட்:23977542.
- ↑ 4.0 4.1 "Malignant Mesothelioma Treatment–Patient Version (PDQ®)". NCI. September 4, 2015. Archived from the original on 5 April 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2016.
- ↑ 5.0 5.1 "Age-Adjusted SEER Incidence and U.S. Death Rates and 5-Year Relative Survival (Percent) By Primary Cancer Site, Sex and Time Period" (PDF). NCI. Archived from the original (PDF) on 6 September 2015. பார்க்கப்பட்ட நாள் 3 April 2016.
- ↑ 6.0 6.1 GBD 2015 Disease and Injury Incidence and Prevalence, Collaborators. (8 October 2016). "Global, regional, and national incidence, prevalence, and years lived with disability for 310 diseases and injuries, 1990-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.". Lancet 388 (10053): 1545–1602. doi:10.1016/S0140-6736(16)31678-6. பப்மெட்:27733282.
- ↑ 7.0 7.1 GBD 2015 Mortality and Causes of Death, Collaborators. (8 October 2016). "Global, regional, and national life expectancy, all-cause mortality, and cause-specific mortality for 249 causes of death, 1980-2015: a systematic analysis for the Global Burden of Disease Study 2015.". Lancet 388 (10053): 1459–1544. doi:10.1016/s0140-6736(16)31012-1. பப்மெட்:27733281.
- ↑ "Malignant Mesothelioma—Patient Version". NCI. January 1980. Archived from the original on 6 April 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2016.
- ↑ Sardar, MR; Kuntz, C; Patel, T; Saeed, W; Gnall, E; Imaizumi, S; Lande, L (2012). "Primary pericardial mesothelioma unique case and literature review.". Texas Heart Institute Journal / From the Texas Heart Institute of St. Luke's Episcopal Hospital, Texas Children's Hospital 39 (2): 261–4. பப்மெட்:22740748.
- ↑ Panou, V; Vyberg, M; Weinreich, UM; Meristoudis, C; Falkmer, UG; Røe, OD (June 2015). "The established and future biomarkers of malignant pleural mesothelioma.". Cancer Treatment Reviews 41 (6): 486–95. doi:10.1016/j.ctrv.2015.05.001. பப்மெட்:25979846.
- ↑ 11.0 11.1 Gulati, M; Redlich, CA (March 2015). "Asbestosis and environmental causes of usual interstitial pneumonia.". Current Opinion in Pulmonary Medicine 21 (2): 193–200. doi:10.1097/MCP.0000000000000144. பப்மெட்:25621562.
- ↑ "What are the key statistics about malignant mesothelioma?". American Cancer Society. 2016-02-17. Archived from the original on 8 April 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2016.
புற இணைப்புகள்
தொகுவகைப்பாடு | |
---|---|
வெளி இணைப்புகள் |