இட்டமொழி
இட்டமொழி (Ittamozhi) என்பது தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் - திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள கிராமம் ஆகும். இவ்வூர் நாங்குநேரி வட்டத்திற்கு உட்பட்டதாகும்.[1]
இட்டமொழி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 8°23′36.15″N 77°50′45.69″E / 8.3933750°N 77.8460250°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருநெல்வேலி |
வட்டம் | நாங்குநேரி |
மொழி | |
• அலுவல் | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 627652 |
தொலைபேசி குறியீடு | 91-(0)4637 |
மக்கள்
தொகுஇட்டமொழி கிராமத்தில் 2056க்கும் அதிகமான குடும்பத்தினர் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் புலம் பெயர்ந்து நகரங்களில் வசிக்கின்றனர்.[2] இட்டமொழியில் 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி ஆண்கள் 3964, பெண்கள் 4154 என மொத்தம் 8118 பேர் வசிக்கின்றனர்.[3]
மக்கள் வகைபாடு
தொகுஇவ்வூரில் இந்து மற்றும் கிறித்துவ மதத்தினைப் பின்பற்றும் மக்கள் வசித்து வருகின்றனர்.[2]
சுற்றுச்சூழல்
தொகுஇட்டமொழி வறண்ட நிலப்பகுதியாகும். வருடத்தின் பெரும்பாலான நாட்களில் உலர்ந்த காலநிலையைக் கொண்டிருக்கிறது. இப்பகுதியில் பொதுவாக புளிய மரங்கள், பனை மரங்கள் மற்றும் அகாசியா நீலோட்டா மரங்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவ்வூரைச் சுற்றி அய்யன் குளம், ஊரணி குளம், வெலன்காடு குளம் ஆகியன உள்ளன.[4]
வசதிகள்
தொகுஅரசு ஆரம்ப சுகாதார மையம், அரசு நூலகம், அஞ்சல் அலுவலகம், மின்சார வாரிய அலுவலகம், தமிழ்நாடு கிராம வங்கி, முதன்மை வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளிட்ட சேவை வசதிகள் இங்கு அமைந்துள்ளன.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ India. Director of Census Operations, Tamil Nadu; K. Chockalingam (1972). District Census Handbook: Series 19: Tamil Nadu: Tirunelveli.
- ↑ 2.0 2.1 India. Director of Census Operations, Tamil Nadu (1983). Total Population and Population of Scheduled Castes and Scheduled Tribes in Panchayats and Panchayat Unions [in Tamil Nadu].: Tirunelveli. Government of Tamil Nadu.
- ↑ "Ittamozhi Village Population - Nanguneri - Tirunelveli, Tamil Nadu". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 2022-07-05.
- ↑ Dervla Murphy (11 December 1989). On a Shoestring to Coorg: A Travel Memoir of India. Overlook. pp. 95–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4683-0573-9.
- ↑ "Tirunelveli district to get three more PACBs".