இட்டெர்பியம்(II) அயோடைடு
இட்டெர்பியம்(II) அயோடைடு (Ytterbium(II) iodide) என்பது YbI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இட்டெர்பியத்தின் அயோடைடு உப்பான இது மஞ்சள் நிறத்தில் திண்மநிலையில் காணப்படுகிறது.
இனங்காட்டிகள் | |
---|---|
19357-86-9 | |
ChemSpider | 3436141 |
EC number | 687-891-5 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 4227090 |
| |
பண்புகள் | |
I2Yb | |
வாய்ப்பாட்டு எடை | 426.86 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிறத் திண்மம்[1] |
உருகுநிலை | 780 °C (1,440 °F; 1,050 K)[1] (சிதைவடையும்) |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | முக்கோணம் |
புறவெளித் தொகுதி | P3m1 (No. 164) |
Lattice constant | a = 448 pm, c = 696 pm |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுஇட்டெர்பியம்(III) அயோடைடை சூடுபடுத்தினால் இட்டெர்பியம்(II) அயோடைடு உருவாகும்.:[1]
டெட்ரா ஐதரோபியூரானில் கரைக்கப்பட்ட 1,2-ஈரயோடோயீத்தேனுடன் உலோக இட்டெர்பியத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமும் இதைத் தயாரிக்கலாம்:[2]
இவ்வினை அறை வெப்பநிலையில் நடந்தாலும், வினையாக்கிகளின் உணர்திறன் காரணமாக நீரற்ற மற்றும் மந்த வாயுவின் கீழ் இவ்வினை நடைபெற வேண்டியது அவசியமாகும். இல்லையெனில், ஆக்சிசன் இருந்தால் இட்டெர்பியம்(III) அயனிக்கு விரைவான ஆக்சிசனேற்றம் நடைபெறுகிறது. பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக கரைசலின் நிறத்தை மாறுவதன் மூலம் இவ்விரைவான ஆக்சிசனேற்றம் பார்வைக்கும் அடையாளமாகும்.
பண்புகள்
தொகுஇட்டெர்பியம்(II) அயோடைடு மஞ்சள் நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது. காற்று மற்றும் ஈரப்பதத்திற்கு மிகவும் உணர்திறன் கொண்டது. இதனால் இட்டெர்பியம்(III) அயோடைடாக விரைவில் ஆக்சிசனேற்றம் அடைந்து விடும். இது தண்ணீருடன் வினைபுரிந்து ஐதரசன் வாயுவையும் அடிப்படை அயோடைடுகளை உருவாக்குகிறது. மேலும் அமிலங்களுடன் தீவிரமாக வினையில் ஈடுபடுகிறது.[1] சுமார் 800 பாகை செல்சியசு வெப்பநிலையில், கண்ணாடிச் சுவர்களில் இட்டெர்பியம்(II) அயோடைடின் மஞ்சள் நிறப் பதங்கமாதலை காணமுடியும். எனவே எனவே இட்டெர்பியம்(II) அயோடைடின் உருகு நிலையை துல்லியமற்றதாகவே தீர்மானிக்க முடியும்.[1][3]
சமாரியம்(II) அயோடைடு (SmI2), போலவே இட்டெர்பியம்(II) அயோடைடும் ஒரு வினையாக்கியாக கரிம வேதியியல் வினைகளில் பயன்படுத்தப்படுகிறது. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 G. Jantsch; N. Skalla; H. Jawurek (1931-11-10). "Zur Kenntnis der Halogenide der seltenen Erden. V. Über die Halogenide des Ytterbiums" (in en). Zeitschrift für anorganische und allgemeine Chemie 201 (1): 207–220. doi:10.1002/zaac.19312010119.
- ↑ 2.0 2.1 Pierre-Marie Girard; Jean Louis Namy; Henri B. Kagan (April 1980). "Divalent lanthanide derivatives in organic synthesis. 1. Mild preparation of samarium iodide and ytterbium iodide and their use as reducing or coupling agents" (in en). Journal of the American Chemical Society 102 (8): 2693–2698. doi:10.1021/ja00528a029. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863.
- ↑ Gmelins Handbuch der anorganischen Chemie, System Nr. 39, Band C 6, S. 199–200.
மேலும் படிக்க
தொகு- Henri B. Kagan; Namy, Jean Louis (1986). "Tetrahedron report number 213: Lanthanides in organic synthesis". Tetrahedron 42 (24): 6573–6614. doi:10.1016/s0040-4020(01)82098-6. பன்னாட்டுத் தர தொடர் எண்:0040-4020. https://archive.org/details/sim_tetrahedron_1986_42_24/page/6573.
- Steel, Patrick G. (2001-10-18). "Recent developments in lanthanide mediated organic synthesis". Journal of the Chemical Society, Perkin Transactions 1 (21): 2727–2751. doi:10.1039/a908189e. பன்னாட்டுத் தர தொடர் எண்:1472-7781.