இட்லரின் 50வது பிறந்தநாள்
இட்லரின் 50வது பிறந்தநாள் (Adolf Hitler's 50th birthday) 1939 ஏப்ரல் 20 அன்று நாட்சி செருமனியிலும், ஏனைய சில நாடுகளிலும் விடுமுறை நாளாகக் கொண்டாடப்பட்டது.[1] செருமனியிலும், அதன் கூட்டு நாடுகளிலும் இருந்து மக்கள் பரிசுகள் வழங்கியும், வாழ்த்துச் செய்திகள் அனுப்பியும் இவ்விழாவைக் கொண்டாடினர். பல மேற்குலக நாடுகள் இவ்விழாவைப் புறக்கணித்தன. தரைப்படை, வான்படை, கடற்படை, சுத்ஸ்டாப்பெல் என மொத்தம் 50,000 பேர் பங்கேற்றனர்.
கொண்டாட்டங்கள்:
தொகுசிலர் விழா நடைமுறைகளை தலைமையேற்று நடத்தினர். இருபுறமும் மரங்கள் கொண்ட பாதையில் உல்லாச வண்டியில் பயணம் செய்தனர். இட்லர் உரை நிகழ்த்தினார். இட்லருக்கு கீழ்படிந்துள்ள பிரபுக்கள் அவருக்கு பல்வேறு பரிசுகள் வழங்கினர். சிலைகள், ஓவியம், பழங்கால நாணயங்கள், போர்க்கருவிகள் போன்றவற்றை வழங்கினர். இட்லர் அவற்றுள் சிலவற்றை மட்டுமே பெற்றுக்கொண்டார். பெரும்பாலான பொருட்களை நிராகரித்தார்.[1] இட்லரின் விமானி ஆன்சு பவர் இட்லரின் சொந்த விமானத்திற்காக இயந்திரம் ஒன்றை வழங்கினார். இதையே அலுவலக பணிக்கான வாகனமாக இட்லர் பயன்படுத்திக் கொண்டார்.[2]
இராணுவ அணிவகுப்பு
தொகுசெருமனியின் இராணுவப் படையினர் அதிக அளவில் விழா செயல்பாடுகளில் ஈடுபட்டனர். இவர்களின் விழா செயல்பாடுகள் மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாக அமைந்தது.[1] நான்கு குழுக்கள் 5 மணி நேரம் விழா செயல்பாடுகளைச் செய்தனர். ஒரு குழுவில் 12 நிறுவனங்கள் பங்கு பெற்றது. 12 காலாட்படை 12 கப்பல்படையுடன் 40,000 முதல் 50,000 வீரர்கள் கலந்து கொண்டனர்.[3][4] 20,000 அலுவலக விருந்தினர்கள் பங்கேற்றனர். யோசேப் கோபெல்சு என்னும் விழா அமைப்பாளர் உரையாற்றும் போது, பெர்லின் ரீச் என்ற இடம் 'செருமன் வீரத்தின் நிழல்' என்றார். மேலும் இராணுவ ஆட்சிக்குக் கீழ் வியாபாரம், தொழில் மற்றும் வணிகம், நாட்டின் நல்வாழ்வு, பண்பாடு போன்றவை மலரப் போகிறது என்றார். இட்லர் என்ற சொல் நம் நாட்டின் அரசியல் மொழி என்றார்.[5]
பிறந்தநாள் பரிசுகள்
தொகுஇட்லருக்கு பிறந்தநாள் பரிசாக, டான்சிக் என்ற இடத்தின் "சிறந்த குடிமகன்" என்னும் பட்டம் வழங்கப்பட்டது.[5] அச்சமயத்தில் செருமன் மற்றும் போலந்து ஆகிய இரு நாடுகளிடையே அரசியல் மற்றும் இராணுவ சூழலில் கருத்து வேறுபாடுகள் அதிகமாகக் காணப்பட்டது. அப்பொழுது டான்சிக் நகரம் செருமனிக்குக் கீழ் வந்துவிட்டது என்று டைம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.[6] மார்ட்டின் போர்மான் என்னும் இட்லரின் அலுவலக செயலர் பிறந்தநாள் பரிசாக, Eagles Nest என்ற இடத்தை கட்டமைத்தார். இருப்பினும் இந்த இடம் இட்லருக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் அவருக்கு உயரம் என்றால் பயம்.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Kershaw 2000, ப. 183–185.
- ↑ Sterling 2008, ப. 182.
- ↑ Pittsburgh Press 1939.
- ↑ Miami Daily News 1939.
- ↑ 5.0 5.1 Daily Mail 2009.
- ↑ Time Magazine 1939.
- ↑ Tagesspiegel 1939.
மூலம்
தொகு- Hoffmann, Hilmar (1997). The Triumph of Propaganda: Film and National Socialism, 1933–1945. Berghahn Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-57181-122-6.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Kershaw, Ian (2000). Hitler: 1936–1945: Nemesis. Norton Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-393-32252-1.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Speer, Albert (1970). Inside the Third Reich. Orion Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-84212-735-3.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Stein, Marcel (2007). Field Marshal Von Manstein: The Janushead – A Portrait. Helion & Company. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-906033-02-6.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - Sterling, Christopher (2008). Military Communications: From Ancient Times to the 21st Century. ABC-CLIO. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85109-732-6.
{{cite book}}
: Invalid|ref=harv
(help) - "1,500,000 Watch Parade As Nazis Celebrate". Pittsburgh Press. 20 April 1939.
- "Adolf Hitler". Life. 25 September 1939. பார்க்கப்பட்ட நாள் 12 March 2015.
- "Foreign News: Birthday Present?". டைம். 24 April 1939. Archived from the original on 30 நவம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 12 March 2015.
{{cite web}}
: Unknown parameter|=
ignored (help) - "George VI Sends Hitler Congratulatory Message". Pittsburgh Press. 20 April 1939. பார்க்கப்பட்ட நாள் 12 March 2015.
- "Hitler's Commemorative Timepiece: Rare Limited Edition Watch Created For Dictator's 47th Birthday Is Discovered By Polish Customs Officials". டெய்லி மெயில். 7 March 2011. பார்க்கப்பட்ட நாள் 12 March 2015.
- "Hitler, Duce Repledge Aid". The Prescott Evening Courier. 21 April 1939. பார்க்கப்பட்ட நாள் 12 March 2015.
- "Wo Hitler Schwindlig Wurde [Where Hitler Was Dizzy]" (in German). Der Tagesspiegel. 21 October 1939. பார்க்கப்பட்ட நாள் 12 March 2015.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)