இண்டியம்(I) குளோரைடு

வேதிச் சேர்மம்

இண்டியம்(I) குளோரைடு (Indium(I) chloride) என்பது InCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இண்டியம் மோனோகுளோரைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. 120 °செல்சியசு வெப்பநிலைக்கு கீழே மஞ்சள் நிறத்தில் கனசதுர வடிவமாகவும், இந்த வெப்பநிலைக்கு மேல் சிவப்பு நிறத்தில் சேர்சாய்சதுர வடிவமாகவும் இண்டியம் மோனோகுளோரைடு காணப்படுகிறது.[2] மூன்று அறியப்பட்டுள்ள இண்டியம் குளோரைடுகளில் இதுவும் ஒன்றாகும்.

இண்டியம்(I) குளோரைடு
இனங்காட்டிகள்
13465-10-6 Y
ChemSpider 19988783
InChI
  • InChI=1S/ClH.In/h1H;/q;+1/p-1
    Key: APHGZSBLRQFRCA-UHFFFAOYSA-M
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 71311293
  • Cl[In]
பண்புகள்
தோற்றம் சிவப்பு மற்றும் மஞ்சள்
அடர்த்தி 4.218 கி/செ.மீ3[1]
உருகுநிலை 216 °C (421 °F; 489 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தயாரிப்பு

தொகு

முடிய ஒரு குழாயில் இண்டியம் முக்குளோரைடுடன் இண்டியம் உலோகத்தைச் சேர்த்து சூடாக்குவதன் மூலம் இண்டியம்(I) குளோரைடு தயாரிக்கப்படுகிறது.[3][4]

கட்டமைப்பு

தொகு

எக்சு-கதிர் படிகவியல் ஆய்வின் படி, மஞ்சள் நிற பல்லுருவத் தோற்றத்தின் கட்டமைப்பு சோடியம் குளோரைடை ஒத்திருக்கிறது. இங்கு Cl-In-Cl பிணைப்பு கோணங்கள் மட்டும் 90° ஆக இல்லை. ஆனால் 71 மற்றும் 130° கோணங்களுக்கு இடையே இருக்கும். சிவப்பு நிற பல்லுரு தாலியம்(I) அயோடைடு மையக்கருவில் படிகமாகிறது.[5][6]

வினைத்திறன்

தொகு

இண்டியம் மையத்தின் 5s எலக்ட்ரான்களின் ஒப்பீட்டளவு அதிக ஆற்றல் மட்டமானது InCl சேர்மத்தை ஆக்சிசனேற்றம் மற்றும் விகிதச்சமமின்மை ஆகிய இரண்டு வினைகளுக்கும் உட்பட்டு In(0) மற்றும் InCl3 ஆகியவற்றிற்கு ஏற்றவாறு மாறுகிறது.[2] டெட்ரா ஐதரோபியூரான் InCl மற்றும் பிற இண்டியம்(I) ஆலைடுகளின் பரவலை எளிதாக்குகிறது.>]].[2]

வரலாறு

தொகு

இண்டியம் (I) குளோரைடு முதன்முதலில் 1926 ஆம் ஆண்டில் இண்டியம் மற்றும் குளோரின் இடையே உருவான சேர்மங்கள் பற்றிய ஆய்வின் ஒரு பகுதியாக தனிமைப்படுத்தப்பட்டது.[7]

மேற்கோள்கள்

தொகு
  1. Van Den Berg, J. M. (1966). "The crystal structure of the room temperature modification of indium chloride, InCl". Acta Crystallographica 20 (6): 905–910. doi:10.1107/S0365110X66002032. Bibcode: 1966AcCry..20..905V. 
  2. 2.0 2.1 2.2 Pardoe, Jennifer A. J.; Downs, Anthony J. (2007-01-01). "Development of the Chemistry of Indium in Formal Oxidation States Lower than +3" (in en). Chemical Reviews 107 (1): 2–45. doi:10.1021/cr068027+. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2665. பப்மெட்:17212469. https://pubs.acs.org/doi/10.1021/cr068027%2B. 
  3. Annan, Theodore A.; Chadha, Raj K.; Doan, Peter; McConville, David H.; McGarvey, Bruce R.; Ozarowski, Andrzej; Tuck, Dennis G. (October 1990). "One-electron transfer processes in the reaction of indium(I) halides with substituted o-quinones" (in en). Inorganic Chemistry 29 (20): 3936–3943. doi:10.1021/ic00345a007. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. https://pubs.acs.org/doi/abs/10.1021/ic00345a007. 
  4. Poland, J. S.; Tuck, D. G. (1972-09-01). "Coordination compounds of indium: XIV. The insertion of indium(I) iodide into carbon-iodide bonds". Journal of Organometallic Chemistry 42 (2): 315–323. doi:10.1016/S0022-328X(00)90080-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:0022-328X. https://www.sciencedirect.com/science/article/pii/S0022328X00900809. 
  5. Van Der Vorst, C.P.J.M.; Maaskant, W.J.A. (1980). "Stereochemically active (5s)2 Lone Pairs in the Structures of α-InCl and β-InCl". Journal of Solid State Chemistry 34 (3): 301–313. doi:10.1016/0022-4596(80)90428-4. 
  6. Van Der Vorst, C. P. J. M.; Verschoor, G. C.; Maaskant, W. J. A. (1978). "The Structures of Yellow and Red Indium Monochloride". Acta Crystallographica Section B Structural Crystallography and Crystal Chemistry 34 (11): 3333–3335. doi:10.1107/S056774087801081X. Bibcode: 1978AcCrB..34.3333V. 
  7. Klemm, Wilhelm (1926). "Messungen an Indiumhalogeniden I". Zeitschrift für Anorganische und Allgemeine Chemie 152: 252–266. doi:10.1002/zaac.19261520128. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இண்டியம்(I)_குளோரைடு&oldid=4104691" இலிருந்து மீள்விக்கப்பட்டது