இண்டியம்(III) அயோடைடு

வேதிச் சேர்மம்

இண்டியம்(III) அயோடைடு (Indium(III) iodide) InI3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இண்டியமும் அயோடினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

இண்டியம்(III) அயோடைடு
Indium(III) iodide
பெயர்கள்
வேறு பெயர்கள்
இண்டியம் மூவயோடைடு
இனங்காட்டிகள்
13510-35-5 Y
ChemSpider 75371
EC number 236-839-6
InChI
  • InChI=1S/3HI.In/h3*1H;/q;;;+3/p-3
    Key: RMUKCGUDVKEQPL-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83539
SMILES
  • [In](I)(I)I
பண்புகள்
InI3
வாய்ப்பாட்டு எடை 495.53
தோற்றம் மஞ்சள் திண்மம்
அடர்த்தி 4.69 கி/செ.மீ3
உருகுநிலை 210 °C (410 °F; 483 K)
கொதிநிலை 500 °C (932 °F; 773 K)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் இண்டியம்(III) புரோமைடு
இண்டியம்(III) குளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் அலுமினம் அயோடைடு
காலியம்(III) அயோடைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தயாரிப்பு தொகு

ஐதரோ அயோடிக் அமிலத்தில் கரைந்த இண்டியத்தை ஆவியாக்குதல் மூலமாக இண்டியம்(III) அயோடைடு உருவாகிறது.[1]

பண்புகள் தொகு

 
In2I6 மூலக்கூற்றின் பந்து-குச்சி மாதிரி

தனித்துவமான மஞ்சள் மற்றும் சிவப்பு நிற இண்டியம்(III) அயோடைடுகள் அறியப்படுகின்றன. 57 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிவப்பு நிற இண்டியம்(III) அயோடைடு மஞ்சள் நிற இண்டியம்(III) அயோடைடு சேர்மமாக மாற்றமடைகிறது. எக்சு கதிர் படிகவியல் ஆய்வுகள் சிவப்பு இண்டியம்(III) அயோடைடின் கட்டமைப்பை உறுதி செய்யவில்லை. ஆனால் நிறமாலையியல் ஆய்வுகள் ஆறு ஒருங்கிணைவுகளை இண்டியம் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கின்றன.[2] மஞ்சள் வடிவ இண்டியம்(III) அயோடைடில் (In2I6) 4 ஒருங்கிணைவு இண்டியம் மையங்கள் உள்ளன.

மேற்கோள்கள் தொகு

  1. E. Donges (1963). "Indium(III) Iodide". in G. Brauer. Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed.. 1. NY, NY: Academic Press. பக். 861-2. 
  2. Taylor M. J., Kloo L. A. Journal of Raman Spectroscopy 31, 6, (2000), 465
"https://ta.wikipedia.org/w/index.php?title=இண்டியம்(III)_அயோடைடு&oldid=3384748" இலிருந்து மீள்விக்கப்பட்டது