இந்தியக் காப்பி விடுதி

இந்தியக் காப்பி விடுதி (Indian Coffee House) என்பது இந்தியாவின் பல பகுதிகளிலும் அமைந்திருக்கும் உணவு விடுதி ஆகும். இது தொழிலாளர்களின் கூட்டுறவு அமைப்பால் நடத்தப்படுகிறது. இந்தியா முழுவதும் கிட்டத்தட்ட 400 கிளைகளுடன் இயங்கி வருகிறது.[1][2]

கேரளாவின் திருவனந்தபுரத்தின் தம்பானூர் பகுதியில் அமைந்துள்ள இந்தியக் காப்பி விடுதி
பெங்களூர், இந்தியக் காப்பி விடுதியின் ஊழியர்

வரலாறு தொகு

இந்தியக் காப்பி விடுதியின் தொடர் நிறுவனங்கள் 1936 ஆம் ஆண்டு காப்பி செஸ் குழுவால் (Coffee Cess Committee) ஆரம்பிக்கப்பட்டது. இதன் முதல் நிறுவனம் மும்பையில் திறக்கப்பட்டது. 1950-ல் இந்தியா முழுமைக்கும் கிட்டத்தட்ட 50 கிளைகள் இயங்கிக் கொண்டிருந்தன. சில கொள்கை மாற்றங்களால் 1950 களின் மத்தியில் இந்நிறுவனம் தனது காப்பி விடுதிகள் அனைத்தையும் மூடும் முடிவை எடுத்தது. ஆனால் கம்யூனிஸ்ட் தலைவர் ஏ. கே. கோபாலனின் தலைமையில் தொழிலாளர்கள் இந்நிறுவனத்தை தங்கள் வசம் ஒப்படைக்கக் கோரி போராட்டம் நடத்தி அதில் வெற்றியும் பெற்றனர். பின்னர் இத்தொழிலாளர்கள் இணைந்து இந்தியத் காப்பித் தொழிலாளர்கள் கூட்டுறவு என்ற அமைப்பைத் தொடங்கினர். பின்னர் இந்தியக் காப்பி விடுதி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதன் கூட்டுறவு அமைப்பு பெங்களூரில் 1957 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 19-ம் தியதி தொடங்கப்பட்டது.[1] இவர்களின் முதல் இந்தியக் காப்பி விடுதி புதுதில்லியில் 27 ஆம் தியதி அக்டோபர் மாதம் 1957 -ல் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் நாடு முழுவதும் இதற்குக் கிளைகள் தொடங்கப்பட்டன. 1958 ஆம் ஆண்டின் இறுதிக்குள் பாண்டிச்சேரி, திருச்சூர், லக்னோ, ஜபல்பூர், மும்பை, கொல்கத்தா, தலச்சேரி மற்றும் புனே ஆகிய இடங்களில் இந்தியக் காப்பி விடுதி திறக்கப்பட்டது. கேரளாவில்தான் அதிகபட்சமாக 51 இந்தியக் காப்பி விடுதிகள் அமைந்துள்ளன.[3]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு