1969 இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்
இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் 1969 என்பது 30 ஆகத்து 1969 அன்று நடைபெற்றது. இந்தியாவின் நான்காவது துணைக் குடியரசுத் தலைவராக கோபால் சுவரூப் பதக் வெற்றி பெற்றார்.[1] தற்போதைய குடியரசுத் தலைவர் சாகீர் உசேன் மறைவுக்குப் பிறகு, குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்காக, தற்போதைய துணைத் தலைவர் வி. வி. கிரி பதவி விலகியதால் இத்தேர்தல் நடந்தது.
| |||||||||||||||||
| |||||||||||||||||
|
அட்டவணை
தொகுதேர்தல் அட்டவணை 31 சூலை 1969 இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டது.[2]
எஸ்.எண். | வாக்கெடுப்பு நிகழ்வு | தேதி | |
---|---|---|---|
1. | வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி | 9 ஆகஸ்ட் 1969 | |
2. | வேட்புமனு பரிசீலனைக்கான தேதி | 11 ஆகஸ்ட் 1969 | |
3. | வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி தேதி | 14 ஆகஸ்ட் 1969 | |
4. | வாக்கெடுப்பு தேதி | 30 ஆகஸ்ட் 1969 | |
5. | வாக்கு எண்ணும் தேதி | 30 ஆகத்து 1969 |
முடிவுகள்
தொகுஇந்திய நாடாளுமன்றத்தின் 759 உறுப்பினர்கள் இத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் ஆவார். இத்தேர்தலில் 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டதன் பின்னர் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 400 முதல் விருப்பு வாக்குகளைப் பெற்று பதக் தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.[2]