இந்தியச் சிறிய வயல் எலி
இந்தியச் சிறிய வயல் எலி (Little Indian field mouse)(மசு போடுகா) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும். இது வங்காளதேசம், இந்தியா, மியான்மர், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படுகிறது .
இந்திய சிறிய வயல் எலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | முரிடே
|
பேரினம்: | மசு (பேரினம்)
|
இனம்: | M. booduga
|
இருசொற் பெயரீடு | |
Mus booduga (கிரே, 1837) |
விளக்கம்
தொகுதலை மற்றும் உடல் நீளம் 7 செ.மீ. ஆகும். இதன் வால் 6 செ.மீ. நீளமுடையது. உடலின் மேல் மேற்பரப்பில் சாம்பல் கலந்த வெள்ளை அல்லது வெள்ளை நிறத்திலும் வயிற்றுப்பகுதி பளபளப்பான வெளிர் பழுப்பு நிறமாகவும் இருக்கும். பெரும்பாலும் மார்பின் குறுக்கே வெளிர் பழுப்பு நிற பட்டை அல்லது பிளவு இருக்கும். பெரிய வட்டமான காதுகள் உள்ளன. முகவாய் மாறாக குறுகி காணப்படும். வால் மேலே கருமையாகவும் கீழே வெளிர் நிறமாகவும் இருக்கும். மேல் வெட்டுப்பற்கள் பின்னோக்கி வளைந்திருக்கும்.
கலாச்சாரத்தில்
தொகுஇந்த விலங்கு சிங்கள மக்களால் சரியான சுட்டி எனப் பொருள் படும் வகையில் வெல் ஹீன் மியா ( වෙල් හීන් මීයා) என்று அழைக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Aplin, K.; Molur, S.; Nameer, P.O. (2008). "Mus booduga". IUCN Red List of Threatened Species 2008: e.T13953A4370310. doi:10.2305/IUCN.UK.2008.RLTS.T13953A4370310.en. https://www.iucnredlist.org/species/13953/4370310.