இந்தியத் தும்பு வாரியம்

இந்தியத் தும்பு வாரியம் (Coir Board of India) என்பது இந்திய அரசாங்கத்தால் தென்னை நார் தொழில் சட்டம் 1953 (எண். 45 இன் 1953) இன் கீழ் இந்தியாவில் தென்னை நார் (தேங்காய் நார்) தொழிலின் முன்னேற்றம் மற்றும் மேம்பாட்டிற்காக நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.

பின்னணி

தொகு

இந்தியத் தும்பு வாரியம் கொச்சி மற்றும் ஆலப்புழாவினை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது. இந்த வாரியத்தின் தலைமை அலுவலகம் கொச்சியிலும், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அலுவலகம் ஆலப்புழா மற்றும் பெங்களூரிலும் அமைந்துள்ளது. தென்னை நார் தொழில் இந்தியாவின் பாரம்பரிய தொழில்களில் ஒன்றாகும். இது தென்னை விவசாயிகளின் பொருளாதார ரீதியாக முக்கியமானது ஆகும்.  தென்னை நார் வாரியமானது இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், குறிப்பிடத்தக்க அளவில் தென்னைப் பயிரிடப்படும் இடங்களில் பிராந்திய அலுவலகங்களைக் கொண்டுள்ளது. தென்னை தும்பு தொழில்துறையின் மேம்பாடு, ஆராய்ச்சி, கல்வி மற்றும் பயிற்சி ஆகியவற்றிற்காக இந்த வாரியம் செயல்படுகிறது. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இந்த வாரியம் செயல்படுகிறது.[1]

தென்னை நார் தொழிலில் சுமார் 7 இலட்சத்திற்கும் அதிகமான (700,000) தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் சமூகத்தின் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவைச் சேர்ந்த கிராமப்புற மக்களாவார்கள்.

தென்னை தும்பு வாரியம் அனைத்துலக் இயற்கை இழைகள் ஆண்டான 2009ஐ சிறப்பாகக் கொண்டாடியது.

திட்டம்[2]

தொகு
  • தென்னை நார் வளர்ச்சித் திட்டம்
  • பாரம்பரிய தொழில்களின் மறுசீரமைப்புக்கான நிதித் திட்டம்
  • பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்
  • புதுமை, கிராமப்புற தொழில்கள் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஒரு திட்டம்

தலைவர்

தொகு

இந்தியத் தும்பு வாரியத்தின் தற்போதைய தலைவராக டி. குப்புராமு உள்ளார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Admin பரணிடப்பட்டது 2010-03-05 at the வந்தவழி இயந்திரம் Ministry of Micro, Small and Medium Enterprises website.
  2. "Coirboard" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-04-04.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்தியத்_தும்பு_வாரியம்&oldid=3602986" இலிருந்து மீள்விக்கப்பட்டது