இந்தியத் தொழிலாளர் சட்டம்

இந்தியாவின் தொழிலாளர் முறைப்படுத்துதல் சட்டம்

இந்தியத் தொழிலாளர் சட்டம் என்பது இந்தியாவில் உள்ள தொழிலாளர் ஒழுங்குமுறைச் சட்டங்களைக் குறிக்கிறது. பாரம்பரியமாக, கூட்டாட்சி மற்றும் மாநில அளவிலான இந்திய அரசாங்கங்கள் தொழிலாளர்களுக்கு உயர்ந்த பாதுகாப்பை உறுதிப்படுத்த முற்பட்டுள்ளன, ஆனால் நடைமுறையில் இது அரசாங்க வடிவத்தின் காரணமாக வேறுபடுகிறது மற்றும் இந்திய அரசியலமைப்பின் உன்னதப் பட்டியலில் உழைப்பு என்பது ஒரு பொருளாகும்.

வரலாறு தொகு

இந்திய தொழிலாளர் சட்டம் இந்திய சுதந்திர இயக்கத்தை வழிநடத்துவதற்கும், செயலற்ற எதிர்ப்பின் பிரச்சாரங்களுக்கும் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்தியா பிரித்தானியஆட்சியின் கீழ் காலனித்துவ ஆட்சியில் இருந்தபோதே, தொழிலாளர் உரிமைகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சுதந்திரச்சங்கம் ஆகியவை அனைத்தும் ஒடுக்கப்பட்டன. நல்ல நிலைமைகளை அடைய விரும்பிய தொழிலாளர்கள், வேலைநிறுத்த நடவடிக்கை மூலம் பிரச்சாரம் செய்த தொழிற்சங்கங்கள் அடிக்கடி வன்முறை அடக்குமுறைக்கு உட்பட்டன. 1947ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1950 ல் இந்திய அரசியலமைப்பின் அடிப்படையில் தொழிலாளர் உரிமைகள் தொடர்ந்தது. குறிப்பாக தொழிற்சங்கத்தில் புதிதாகச் சேரவும் மற்றும் சங்கத்தில் நடவடிக்கை எடுப்பதற்கான உரிமையும், வேலையை சரிசமமாகப் பகிர்ந்தளிப்பதற்கும் மற்றும் கௌரவத்துடன் வாழ்வதற்கு நிலையான ஊதியத்தை உருவாக்கம் செய்தது.

அரசியலமைப்பு உரிமைகள் தொகு

1950 முதல் இந்தியாவின் அரசியலமைப்பில், 14-16, 19 (1) (C), 23-24, 38 மற்றும் 41-43A ஆகியவை நேரடியாக தொழிலாளர் உரிமைகள் சம்பந்தப்பட்ட பிரிவுகள். எல்லோரும் சட்டத்திற்கு முன் சமமானவர்களாக இருக்க வேண்டும் என்பதை 14 வது சட்டப்பிரிவு குறிப்பிட்டுள்ளது. 15 வது சட்டப்பிரிவில், அரசு குடிமக்களுக்கு எதிராக பாகுபாடு காட்டக்கூடாது எனக் கூறுகிறது, மேலும் 16 வது சட்டப்பிரிவில் உரிமையை நீட்டிக்கின்றது "வேலையை சமமாக பகிர்ந்தளித்தல்" மாநிலத்தின் கீழ் வேலைவாய்ப்பு அல்லது பணிநியமனம் செய்தல்.

பிரிவு 19ன் கீழ்(1) அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட உரிமையை "தொழிற்சங்கங்களை உருவாக்கம்" செய்யவேண்டும்.

பிரிவு 23 ல் தொழிற்சாலைகளிள் நடக்கும் அனைத்து கடத்தல் மற்றும் தொழிலாளர்களுக்கு அதிக வேலைப்பளு அளிப்பதை தடைசெய்கிறது. பிரிவு 24 ல் பதினான்கு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள் "தொழிற்சாலையிலோ அல்லது வேறு எந்தவிதமான அபாயகரமான வேலைவாய்ப்பிலும்" ஈடுபடுத்தப்படும் குழந்தைத் தொழிலாளர்களைச் தடைசெய்கிறது. பிரிவு 42 ல் மனிதனின் பாதுகாப்பிற்காக மற்றும் மகப்பேற்று நிவாரணம் ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காகவும் ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

பிரிவு 43 ல் தொழிலாளர்கள் வாழ்க்கை ஊதியம், நிலையான வேலைவாய்ப்பு மற்றும் ஒரு கெளரவமான வாழ்க்கைத் தரத்தை உறுதிப்படுத்தும் உரிமை. 1976 ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பின் நாற்பத்தி-இரண்டாம் திருத்தத்தின் மூலம் சேர்க்கப்பட்டிருக்கும் பிரிவு 43(A), ஒரு அரசியலமைப்பு உரிமையை உருவாக்குகிறது. நிர்வாகத்தின் தொழிலாளர்கள் பங்கு பெறுவதை பாதுகாக்க சட்டபூர்வமான மாநிலத்தின் கோட்பாட்டிற்கான ஒரு அரசியலமைப்பு உரிமையை உருவாக்குகிறது.[1] பிரிவு 38-39 மற்றும் 41-43(A) அரசியலமைப்பின் பகுதி 4 இல் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து உரிமைகளும் அரசியலமைப்பு சட்டங்கள் நீதிமன்றங்களால் அமல்படுத்த முடியாது, மாறாக சட்டங்களை இயற்றுவதில் இந்த கோட்பாடுகளை மாநில அரசு பின்பற்ற வேண்டிய கடமை உள்ளது.[2]

ஒப்பந்தம் மற்றும் உரிமைகள் தொகு

"ஒழுங்கமைக்கப்பட்ட" துறைகளில் பணிபுரியும் மக்களுக்கும், "ஒழுங்கமைக்கப்படாத துறைகளில்" பணியாற்றும் மக்களுக்கும் இந்திய தொழிலாளர் சட்டம் வேறுபடுகிறது. இந்த பிரிவுகளுக்குள் வராதவர்களுக்கு, ஒப்பந்தத்தின் சாதாரணச் சட்டம் பொருந்தும். இந்தியாவின் தொழிலாளர் சட்டங்கள் 1947 ஆம் ஆண்டின் தொழிற்துறை முரண்பாடு சட்டத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தின மேலும் 200 மாநிலச் சட்டங்கள் தொழிலாளி மற்றும் நிறுவனத்திற்கும் இடையேயான உறவுகளைக் கட்டுப்படுத்துகின்றன.[3]

வேலை ஒப்பந்தங்கள் தொகு

இந்தியாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட வேலை வாய்ப்புகளில் அரசு நேரடியாக ஒப்பந்தங்களில் ஈடுபடுகிறது, இதை வளர்ந்த நாடுகளில் காண்பது கடினம். தொழில்துறை வேலைவாய்ப்பு (நிலையான ஆணை) 1946ஆம் ஆண்டின் சட்டப்படி தொழிலாளிகள் வேலை நேரம், விடுப்பு, உற்பத்தி திறன், பணிநீக்கம் செய்தல் போன்றவை அரசாங்கத்தின் ஒப்புதல் பெற்றிருக்கவேண்டும்.[4] லத்தின் வாக்கியமான 'டைஸ் நன்' என்பதன் பொருள் அனுமதி பெறாமல் விடுப்பு எடுப்பது.[5] இந்திய இரயில்வேயில் பணிபுரியும் முதன்மை பொறியாளர் ஆர். பி. சக்சேனா 'டைஸ் நன்' கீழ்கண்டவாறு விவரிக்கிறார்

  • சரியான அனுமதியின்றி விடுப்பு எடுப்பது
  • சரியான அனுமதியின்றி கடமையை விட்டுவிட்டால்
  • அலுவலகத்தில் இருந்தபோது கடமைகளை செய்யாமல் இருப்பது.

ஆதாரங்கள் தொகு

  1. See Constitution (Forty-second Amendment) Act 1976 s 9
  2. Constitution of India, article 37
  3. "Industrial Disputes Act, 1947". nyaaya.in. Archived from the original on 16 மார்ச் 2017. பார்க்கப்பட்ட நாள் 16 March 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "The Industrial Employment (Standing Orders) Act, 1946". 11 September 2015. Archived from the original on 22 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 21 January 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2010-04-09. பார்க்கப்பட்ட நாள் 2019-03-25.