இந்தியப் படைக்கலத் தொழிற்சாலைகள் பணி

இந்தியப் படைக்கலத் தொழிற்சாலைகள் பணி (Indian Ordnance Factories Service (IOFS), இந்திய அரசின் குடியியல் பணிகளில் ஒன்றாகும். IOFS அதிகாரிகள் ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் தொகுதி ஏ பிரிவின் கீழ் வரும் குடிமைப் பணியியல் அதிகாரிகள் ஆவார்.[1][2][3][4][5] இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செய்லபடும் இந்தியப் பாதுகாப்பு படைக்கலன்கள் உற்பத்தித் தொழிற்சாலைகளில் அதிகாரிகளாக செயல்படுவர். இந்த அதிகாரிகளுக்கு நாக்பூரில் உள்ள தேசிய பாதுகாப்பு உற்பத்தி அகாதமியில் பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்தியப் படைக்கலத் தொழிற்சாலைகள் சேவை
Indian Ordnance Factories Service
Service Overview
சுருக்கமாக I.O.F.S.
நிறுவப்பட்ட ஆண்டு 1935; 89 ஆண்டுகளுக்கு முன்னர் (1935)
நாடு  இந்தியா
பயிற்சி தளம் தேசிய பாதுகாப்பு உற்பத்தி அகாதமி
நிர்வகிக்கும் அமைச்சகம் இந்திய பாதுகாப்பு அமைச்சகம்
பாதுகாப்பு உற்பத்தித் துறை
சட்டபூர்வ அமைப்பு இந்திய அரசு
இந்தியக் குடியியல் பணிகள்
பொதுவான தன்மை
  • ஆய்வு & மேம்பாடு
  • பொது மேலாண்மை
  • பொது நிர்வாகம்
  • பாதுகாப்பு உற்பத்தி
பணியாளர்கள் 1760
சேவையின் நிறம் சிவப்பு, கடல் நீலம் மற்றும் வான நீலம்
    
    
    
பணித் தலைவர்
தலைமை இயக்குநர், பொது பாதுகாப்பு படைக்கலன்கள் உற்பத்தி
இந்தியக் குடியியல் பணிகள் தலைவர்
இந்திய அமைச்சரவைச் செயலாளர்

IOFS அதிகாரிகள் தொழில்நுட்ப-பொறியியாளர்கள் (சிவில், மின் & மின்ணுவியல், இயந்திரவியல், வான்வெளி பொறியியல், வாகனங்கள், கடல்சார் பொறியியல், தொழில்சார் வடிவமைப்பு & உற்பத்திப் பொறியியல், கணினிப் பொறியியல், அணுசக்தி பொறியியல், கண்ணாடி இழை, ஜவுளி, வேதி பொறியியல், உலோகப் பொறியியல், தோல் தொழில்நுட்பம்) மற்றும் தொழில்நுட்ப அல்லாத சட்டம், வணிக மேலாண்மை, மேலாண்மைக் கல்விப் படிப்புகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இதன் 1760 பணியிடங்களில் 87% இடங்கள் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.[6]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Indian Ordnance Factories: Recruitment Rules". Ofb.gov.in. பார்க்கப்பட்ட நாள் 17 July 2012.
  2. "Archived copy". Archived from the original on 26 June 2015. பார்க்கப்பட்ட நாள் 2 July 2015.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  3. "UPSC announces CMSE 2010 results". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3 September 2010. http://articles.economictimes.indiatimes.com/2010-09-03/news/27602774_1_upsc-website-ordnance-factories-health-service-final-results. 
  4. "Archived copy". Archived from the original on 15 April 2014. பார்க்கப்பட்ட நாள் 28 April 2014.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. "Archived copy". Archived from the original on 4 October 2013. பார்க்கப்பட்ட நாள் 2 July 2015.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  6. http://www.persmin.nic.in/DOPT/CSWing/CRDivision/Mail%20List%20of%20Secretaries.htm வார்ப்புரு:Bare URL inline

வெளி இணைப்புகள் தொகு