இந்தியப் பொருளாதாரப் பணி

இந்திய ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் பல்வேறு தேர்வுகளில் இந்தியப் பொருளாதாரப் பணிக்கான தேர்வுகளும் அடங்கும். இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி போன்று இந்தியப் பொருளாதாரப் பணித் (IES - Indian Economic Service) தேர்வு எழுதித் தேர்வு பெறுபவர்கள், அரசுடைமை வங்கி மேலாளரில் தொடங்கி, இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் வரையான பதவிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.