இந்தியாக்களின் பொதுக் காப்பகம் (எசுப்பானியா)

இந்தியாக்களின் பொதுக் காப்பகம் (Archivo General de Indias, எசுப்பானிய ஒலிப்பு: [arˈtʃiβo xeneˈɾal de ˈindias], "ஆர்க்கைவோ ஜெனரல் டெ இந்தியாசு"), எசுப்பானியாவின் செவீயாவில் தொன்மையான வணிகர் சந்தைக்கூடத்தில் (Casa Lonja de Mercaderes) அமைக்கப்பட்டுள்ள, அமெரிக்காக்களிலும் பிலிப்பீன்சிலும் எசுப்பானியப் பேரரசின் வரலாற்றை விவரிக்கும் மதிப்புமிக்க பழமையான ஆவணங்களின் காப்பகமாகும். இது வைக்கப்பட்டுள்ள அமைதியான எசுப்பானிய மறுமலர்ச்சிக் கால கட்டிடம் கட்டிட வடிவமைப்பாளர் யுவான் டெ ஹெராராவால் வடிவமைக்கப்பட்டது. இந்தக் கட்டிடமும் உள்ளடங்கிய காப்பகமும் 1987இல் யுனெசுக்கோவால் உலகப் பாரம்பரியக் களமாக பதியப்பட்டது.

இந்தியாக்களின் பொதுக் காப்பகம்
உள்ளூர் பெயர்
எசுப்பானியம்: Archivo General de Indias
ஆர்க்கைவோ டெ இந்தியாசு, செவீயா
அமைவிடம்செவீயா, அன்டாலுசியா, எசுப்பானியா
கட்டப்பட்டது16வது நூற்றாண்டு
கட்டிடக்கலைஞர்யுவான் டெ ஹெராரா
யுவான் டெ மியாரெசு
கட்டிட முறைமறுமலர்ச்சி
அலுவல் பெயர்பேராலயம், செவீயா அல்காசர், செவீயா இந்தியாக்களின் காப்பகம்
வகைபண்பாடு
வரன்முறைi, ii, iii, vi
தெரியப்பட்டது1987 (118வது அமர்வு)
உசாவு எண்383
வலயம்ஐரோப்பா
இந்தியாக்களின் பொதுக் காப்பகம் (எசுப்பானியா) is located in எசுப்பானியா
இந்தியாக்களின் பொதுக் காப்பகம் (எசுப்பானியா)
எசுப்பானியாவில் அமைவிடம்

உசாத்துணைகள்

தொகு