மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை

15 ஆம் நூற்றாண்டில் தோன்றி ஐரோப்பாவில் பரவிய மறுமலர்ச்சிப் பண்பாடு சார்ந்த கட்டிடக்கலையே மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை (Renaissance architecture) எனப்படுகின்றது. ரோமப் பேரரசுக் காலத்தில் நிலவிய பண்பாட்டு அம்சங்கள் மீண்டும் புழக்கத்துக்கு வந்தமையையே இது குறிக்கின்றது.

இக் கட்டுரை
மேலைநாட்டுக்
கட்டிடக்கலை வரலாற்றுத்

தொடரின்
ஒரு பகுதியாகும்.

புதியகற்காலக் கட்டிடக்கலை
பண்டை எகிப்தியக் கட்டிடக்கலை
சுமேரியக் கட்டிடக்கலை
செந்நெறிக்காலக் கட்டிடக்கலை
பண்டைக் கிரேக்கக் கட்டிடக்கலை
பண்டை உரோமன் கட்டிடக்கலை
மத்தியகாலக் கட்டிடக்கலை
பைசண்டைன் கட்டிடக்கலை
ரோமனெஸ்க் கட்டிடக்கலை
கோதிக் கட்டிடக்கலை
மறுமலர்ச்சிக் கட்டிடக்கலை
பரோக் கட்டிடக்கலை
புதியசெந்நெறிக்காலக் கட்டிடக்கலை
நவீன கட்டிடக்கலை
Postmodern architecture
Critical Regionalism
தொடர்பான கட்டுரைகள்
கட்டத்தைத் தொகுக்கவும்

சிறப்பியல்புகள் தொகு

இப்பாணியில் பகுத்தறிவுக்கு ஒத்த தெளிவும், ஒழுங்கமைவும் கொண்ட உறுப்புக்கள் எளிமையான கணித அளவுவிகிதப்படி (proportions) அமைந்திருந்ததோடு, ரோமக் கட்டிடக்கலையின் உணர்வுபூர்வமான மீள் உருவாக்கமாகவும் இது அமைந்தது. இதற்கு முந்திய, கல் வேலைப்பாடுகளும், ஒழுங்கற்ற முக்கோணக் கூரை முகப்புகளும் அமைந்த பாணிகளுடன் ஒப்பிடுகையில், தூண்களையும், சமச்சீரான (symmetry) வடிவத்தையும் கொண்ட எளிமையான கட்டிடங்களை இப்பாணி வழங்கியது. செந்நெறிக்காலப் பாணித் தூண்களும், வடிவவியல் ரீதியில் சிறப்பாக அமைந்த வடிவமைப்புகளும், அரைக் கோள வடிவக் குவிமாடங்களும் மறுமலர்ச்சிக் கட்டிடக்கலையின் சிறப்பியல்புகளாகும்.

இத்தாலிய மறுமலர்ச்சிப் பாணி தொகு

 
குவிமாடத்துடனும், மணிக் கோபுரத்துடனும் கூடிய டுவோமோவின் (Duomo) பக்கத் தோற்றம்.

இந்த இயக்கம் 15 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் புளோரன்ஸிலும், மத்திய இத்தாலியிலும், மனிதத்துவத்தின் (Humanism) ஒரு வெளிப்பாடாக ஆரம்பமாகியது. இத்தாலியில் நான்கு விதமான மறுமலர்ச்சிப் பாணிகளை அடையாளம் காணக்கூடியதாக உள்ளது:

  1. லியோன் பட்டிஸ்டா அல்பர்ட்டி (Leone Battista Alberti) மற்றும் பிலிப்போ புரூணலெஸ்கி (Filippo Brunelleschi) ஆகியோரின் ஆரம்பகால மறுமலர்ச்சி,
  2. டொனாட்டோ பிரமண்டே (Donato Bramante) மற்றும் ராபேல் (Raphael) என்போரின் உயர் மறுமலர்ச்சி,
  3. மைக்கலாஞ்சலோ, கியூலியோ ரொமானோ, அண்ட்ரியா பல்லாடியோ போன்றோரின் ஆக்கங்களில் காணப்பட்ட பல்வேறுபட்ட செயற்பாங்குகள் சார்ந்த (Mannerist) போக்குகள், மற்றும்
  4. கியான் லொரென்சோ பெர்னினி என்பவரின் ஒருவித பரோக் பாணி.

மறுமலர்ச்சிப் பாணியானது இத்தாலியிலிருந்து பிரான்ஸ், ஸ்பெயின், போர்த்துக்கல், இங்கிலாந்து, ஜெர்மனி, போலந்து, சுவீடன் ஆகிய நாடுகளுக்கும் பரவிய போது, இப்பாணி அதன் முழு வடிவத்தில் வெளிப்பட்டது. எனினும் அந்தந்த நாடுகளின், உள்ளூர் மரபுகளையும், காலநிலைகளையும் கவனத்திற்கு எடுத்தே கட்டிடங்களைக் கட்டவேண்டி இருந்தது. காலப்போக்கில் இப்பாணியின் பல்வேறு கட்டங்களைத் தனிக் கட்டிடங்களில் தெளிவாக அடையாளம் கண்டுகொள்ள முடியாதபடி ஆகிவிட்டது. வெளிநாடுகளில் கூடிய அளவுக்கு இத்தாலிய மறுமலர்ச்சியைத் தழுவியது போலந்து நாட்டில் வளர்ச்சியடைந்த மறுமலர்ச்சிப் பாணியாகும்.

குறிப்பிடத்தக்க மறுமலர்ச்சிக் கட்டிடங்கள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு