இந்தியாவின் இலங்கைத் தமிழர்

இந்தியாவின் இலங்கைத் தமிழர் பொதுவாக இலங்கையில் பிறந்த, அல்லது பூர்வீகமாகக் கொண்ட இலங்கையில் வசிக்காத இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழரைக் குறிக்கும். இவர்கள் இலங்கையில் குடியுரிமை பறிக்கப்பட்டதனாலும், மற்றவர்கள் இலங்கை உள்நாட்டுப் போரினால் இடம்பெயர்ந்தவர்களாகவும், பிற காரணங்களுக்காக இந்தியாவிற்குக் குடியேறியோராயும் உள்ளனர். 1970-களின் முன் தாயகம் திரும்பியோர் பலரும் தமிழக மக்களோடு ஒன்றிணைந்துவிட்டனர். 1972-களின் பின் வந்தோர் பலர் இன்னமும் அகதி முகாம்களில் வசிக்கின்றனர். சமூக பொருளாதார அடிபப்டையில் பொதுவாக இவர்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்வோராய் உள்ளனர். ஆயினும், ஆரம்ப காலங்களில் குடியேறியோர் செல்வந்தராயும் தொழிலில் முன்னேறியோராயும் உள்ளனர். தமிழ்நாட்டில் இவர்கள் சிலோன் தமிழர் அல்லது யாழ்ப்பாணத் தமிழர் என அறியப்பட்டும், கேரளாவில் இவர்கள் தங்களை கேரள சாதியான ஈழவர் என்பதன் திரிபாக ஈழவர் என அழைக்கின்றனர்.[5]

இந்தியாவின் இலங்கைத் தமிழர்
இந்தியாவில் குறிப்பிடத்தக்க இலங்கைத் தமிழர்
வி. கனகசபை, ஆறுமுக நாவலர், பாலுமகேந்திரா
மொத்த மக்கள்தொகை
நூறு ஆயிரங்கள்
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
தமிழ்நாடு~123,000[1][2][3]
கேரளம்[5]~7000[4]
புதுச்சேரி~500[6]
கருநாடகம்~35,000[4]
மொழி(கள்)
தமிழ், சிங்களம், ஆங்கிலம்
சமயங்கள்
இந்து (சைவம்), கிறித்தவம், உரோமன் கத்தோலிக்கம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
இலங்கையர், இந்தியத் தமிழர், மலையாளிகள், திராவிடர்

வரலாறு

தொகு

உசாத்துணை

தொகு