இந்தியாவின் தேசியப் பூங்காக்களும், சரணாலயங்களும்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
இந்தியா பல்வேறுபட்ட இயற்கைச் சூழல்களையும், பெருமளவிலான உயிரின வளங்களையும் கொண்டது. பனிபடர்ந்த மலைப்பகுதிகளும், பசுமையான காடுகளும், சுட்டெரிக்கும் பாலைவனப் பகுதிகளும் இந்தியாவின் பகுதிகளாக இருக்கின்றன. காட்டு வகைகளில், பதினாறு பெருவகைகள் இந்தியாவில் உள்ளன. இப்பெரு வகைகளுள் 200க்கு மேற்பட்ட வகையான காடுகள் அடங்கியுள்ளன. இக்காடுகளும் ஏனைய இயற்கைச் சூழல்களும் பல்லாயிரக்கணக்கான உயிரினங்களுக்கு வாழிடங்கள். இவ்வளங்களைப் பாதுகாத்துப் பராமரிப்பதற்காக அமைக்கப்பட்டனவே இந்தியாவின் தேசியப் பூங்காக்களும், சரணாலயங்களும் ஆகும்.
இந்தியாவில் ஏறத்தாழ 65,000 உயிரின வகைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றுள்,
- பாலூட்டிகள் 350 வகைகள்
- ஊர்வன 408 வகைகள்
- ஈரூடகவாழ்விகள் 197 வகைகள்
- பறவைகள் 1244 வகைகள்
- மீன்கள் 2546 வகைகள்
என்பன அடங்குகின்றன. சுமார் பதினைந்தாயிரத்துக்கு மேற்பட்ட பூக்கும் தாவர வகைகளும் இங்கே காணப்படுகின்றன.
இந்தியாவில் 450 தேசியப் பூங்காக்களும், சரணாலயங்களும் உள்ளது. இவற்றுள் சிலவற்றின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.
- டாச்சிகம் தேசியப் பூங்கா (Dachigam)
- ஜிம் கார்பெட் தேசியப் பூங்கா (Corbett)
- ராஜாஜி தேசியப் பூங்கா (Rajaji)
- துத்வா தேசியப் பூங்கா (Dudhwa)
- பரத்பூர் தேசியப் பூங்கா (Bharatpur)
- ரந்தம்பூர் தேசியப் பூங்கா
- சாரிஸ்கா புலிகள் ஒதுக்ககம்
- கிர் தேசியப் பூங்காவும், சரணாலயமும்
- சஞ்சய் காந்தி தேசியப் பூங்கா
- பந்தாவ்கர் தேசியப் பூங்கா
- கன்ஹா தேசியப் பூங்கா