இந்தியாவின் நிறுவனமயமாக்கம்


இந்தியாவில் 1991ல் பொருளாதார சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட பின தொழில்களை நிறுவனப்படுத்துதல் தொடங்கியது. வேளாண்மை, சில்லறை வியாபாரம், மீன்பிடிப்பு, நெசவு உட்பட நீண்ட காலமாக தனிமனித அல்லது சிறுதொழில்களாக இருந்த துறைகளில் பெரு நிறுவனங்கள் ஈடுபடத் துவங்கின. இம்மாற்றமே இந்தியாவின் நிறுவனமயமாக்கம் (Corporatisation of India) என்று அழைக்கப்படுகிறது. இது குறித்து இருவேறு கருத்துகள் நிலவுகின்றன - வெளி நாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி பெறவும் இது இன்றியமையாதது என்று ஒரு சாரரும், இது பாரம்பரிய தொழில் முறைகளை அழித்து, தொழிலாளர்களின் சுரண்டலுக்கு வழிவகுக்கின்றது என இன்னொரு சாரரும் கருதுகின்றனர்.

வெளி இணைப்புகள்

தொகு