இந்தியாவில் காணப்படும் பட்டாம்பூச்சிகளின் பட்டியல்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

இந்தியாவில் மிகவும் மாறுபட்ட நிலப்பரப்பு, காலநிலை மற்றும் தாவரங்கள் உள்ளன. இவை வெப்ப குளிர், பாலைவனம் மற்றும் காடு, தாழ்வான சமவெளி மற்றும் மிக உயர்ந்த மலைகள், வறட்சி மற்றும் ஈரப்பதம், தீவுகள் மற்றும் கண்ட பகுதிகள், பரவலாக மாறுபடும் தாவரங்கள் மற்றும் வரையறுக்கப்பட்ட பருவங்களை உள்ளடக்கியது.[1] இந்தோமலயன் உயிர் புவியியல் மண்டலத்தின் பெரும்பகுதியை இந்தியாவினை உள்ளடக்கியது. பல மலர் மற்றும் விலங்குகள் மலாயன் உறவுகளைக் காட்டுகின்றன. சில உயிரலகு இந்தியப் பகுதிகளுக்கே உரித்தானவை மற்றும் தனித்துவமானவை. மேலும் உலகின் பல்லுயிர் செறிவு இடங்கள் மூன்று இந்தியாவில் காணப்படுகிறது. இவை: மேற்குத் தொடர்ச்சி மலை, இமயமலையின் கிழக்குப் பகுதிகள், மற்றும் இந்தியா மற்றும் மியான்மரின் எல்லையில் உள்ள மலைப்பாங்கான பகுதிகள். இவை ஒவ்வொன்றிலும் இப்பகுதிக்கே உரித்தான ஏராளமான அகணிய உயிரிகளைக் கொண்டுள்ளன. இதன்படி, இந்தியாவின் மாறுபட்ட விலங்கினங்களில் ஏராளமான பட்டாம்பூச்சி மற்றும் அந்துப்பூச்சிகளும் அடங்கும். பிரிகேடியர் வில்லியம் ஹாரி எவன்ஸ் இலங்கை மற்றும் மியான்மர் உள்ளிட்ட பிரித்தானிய இந்தியாவிலிருந்து சுமார் 1439 வகையான பட்டாம்பூச்சிகளைப் பதிவு செய்தார்.[2] இந்தியாவில் காணப்படும் பட்டாம்பூச்சிகளின் பட்டியல் (List of butterflies of India) கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதில் 1318 சிற்றினங்கள் 6 குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன.[3]

குடும்ப பட்டியல்கள்

தொகு
 
பட்டாம்பூச்சி பன்முகத்தன்மை

பட்டாம்பூச்சிகளின் ஆறு குடும்பங்கள் இந்தியாவில் இருப்பதாகலக் குறிப்பிடப்படுகின்றன. வகைப்பாட்டியலில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் மற்றும் நிகழ்வு மற்றும் பரவல் தொடர்பான தரவு சேகரிப்பின் விளைவாக ஒரு குடும்பத்திற்கு மேற்கோள் காட்டப்பட்ட எண்ணிக்கைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

  • பாபிலியோனிடே - அழகிகள் (84 சிற்றினங்கள்)
  • ஹெசுபெரிடே - தாவிகள் (துள்ளிகள்) (277 சிற்றினங்கள்)
    • கோலியாடினே (22 சிற்றினங்கள்)
    • பைர்கினே (69 சிற்றினங்கள்)
    • ஹெஸ்பெரினே (133 சிற்றினங்கள்)
    • ஹெட்டோரோப்டெரினா (1 சிற்றினம்)
  • பியரிடே - வெள்ளையன்கள், புல்வெளியான்கள், நுனிச் சிறகன்கள் (81 சிற்றினங்கள்)
  • ரியோடினிடே - குத்துக்கள் & நீதிபதிகள் (16 சிற்றினங்கள்)
  • லைகேனிடே - நீலன்கள் (318 சிற்றினங்கள்)
  • நிம்பலிடே - வரியன்கள்-சிறகன்கள்-வசீகரன்கள் (439 சிற்றினங்கள்)
    • டானைனே (26 சிற்றினங்கள்)
    • மார்பினே (20 சிற்றினங்கள்)
    • சத்திரினே (176 சிற்றினங்கள்)
    • லிமெனிடிடினே (99 சிற்றினங்கள்)
    • லிபிதீனே (3 சிற்றினங்கள்)
    • சரக்ஸினே (16 சிற்றினங்கள்)
    • கலினஜினே (3 சிற்றினங்கள்)
    • ஹெலிகோனினே (27 சிற்றினங்கள்)
    • சிரெஸ்டினே (10 சிற்றினங்கள்)
    • சூடர்கோலினா (1 சிற்றினம்)
    • பிபிலிடினே (4 சிற்றினங்கள்)
    • அபாதுரினே (17 சிற்றினங்கள்)
    • நிம்பலினே (37 சிற்றினங்கள்)

மாநில பட்டியல்

தொகு

இந்தியாவில் 29 மாநிலங்களும் 7 ஒன்றிய பிரதேசங்களும் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்துக்கும் பட்டாம்பூச்சிகளின் பட்டியலைக் கீழே உள்ள குறியீட்டைப் பயன்படுத்திக் காணலாம்:

மாநிலங்கள்

சத்தீஸ்கர் கோவா குஜராத் ஹரியானா

யூனியன் பிரதேசங்கள் :

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Evans, W.H. (1932). The Identification of Indian Butterflies (2nd ed.). Mumbai, India: Bombay Natural History Society. p. 1.
  2. Evans, W.H. (1932). The Identification of Indian Butterflies (2nd ed.). Mumbai, India: Bombay Natural History Society. p. 23.
  3. Cotton, Adam & Fric, Zdenek & Jit Gupta, Inder & Van Gasse, Paul & Inayoshi, Yutaka & Sin Khoon, Khew & G Kirton, Laurence & Larsen, Torben & Markhasiov, Maxim & Majumdar, Mridula & Pequin, Olivier & Rieger, Jiri & Motoki, Saito & P Smith, Colin & K Varshney, Rajendra & Smetacek, Peter. (2015). A Synoptic Catalogue of the Butterflies of India. 10.13140/RG.2.1.3966.2164.

பிற ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு