இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமை

இந்தியக் குடியரசின் குடிமக்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு 25(1) இன்படி மதச் சுதந்திரத்தை அனுபவிக்கவும், கடைப்பிடிக்கவும், பரப்பவும் எல்லாரும் சம அளவில் உரிமை உண்டு. சிறுபான்மையினருக்கு தங்கள் கலாச்சாரத்தைக் காத்துக் கொள்ளவும், கல்வி நிறுவனங்களை அமைத்து நிர்வாகம் செய்யவும் உரிமை தரப்பட்டிருக்கிற்து. கட்டாய மதமாற்றத் தடைச் சட்டங்களும் ஆறு மாநிலங்களில் -அருணாசல பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாசல பிரதேசம், சத்தீசுக்கர் அமலில் உள்ளன.

தமிழ்நாட்டில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம்தொகு

தமிழ்நாட்டில் 2002ம் ஆண்டு கட்டாய மதமாற்ற விரைவுச் சட்டம் (ordnance) கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் ஒரு நபர் மற்றொரு நபரை ஆசை காட்டியோ, அன்பளிப்பு தந்தோ, மிரட்டியோ, அல்லது பயமுறுத்தியோ மத மாற்றம் செய்தால் அந்த நபருக்கு மூன்றாண்டு காலம் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூபாய் ஐம்பதாயிரம் வரை அபராதம் விதிக்கலாம். அவ்வாறு மதம் மாற்றப்பட்ட நபர் மைனராகவோ அல்லது பெண்ணாகவோ அல்லது தாழ்த்தப்பட்டவராகவோ இருந்தால் மதம் மாற்றியவருக்கு நான்காண்டு சிறைத்தண்டனை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கலாம். மதம் மாற்றும் சடங்கைச் செய்தாலோ அல்லது அச்சடங்கு பற்றி மாவட்ட ஆட்சித் தலைவருக்குத் தெரிவிக்கவில்லை என்றாலோ ஓராண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். இவை அனைத்தும் பிணைத்தொகை செலுத்தி வெளிவர முடியாத குற்றங்கள். மதமாற்றம் என்பது ஆன்மீக அடிப்படையில் மனித உள்ளத்தின் மாற்றமாக இருக்க வேண்டும் என்றும் சில சலுகைகளுக்காக மதமாற்றம் நீடிக்கக் கூடாது என்று நோக்குடன் கொண்டுவருவதாக ஜெ. ஜெயலலிதாவின் அதிமுக அரசு அறிவித்தது. 2004 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந்த பின்னர் ஜெயலலிதா இச்சட்டம் அமல்படுத்தப்படாது என்று அறிவித்து விட்டார்.

இச்சட்டம் தமிழகத்தின் தாழ்த்தப்பட்ட மக்களைக் குறிவைக்கும் சட்டமாக இருந்தது என்ற கருத்தும் உள்ளது.[1]

தமிழகத்தில் பல இடங்களில் பல்வேறு கிறித்துவ அமைப்புகள் மனச்சலவை மூலம் மக்களை மதம் மாற்றுவதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.[2]

இந்தியாவின் தொன்மங்களைப் படித்து அதன் மூலம் கிறித்துவத்தில் நம்பிக்கையற்றோரை கிறித்துவ மதத்திற்கு மாற்றும் குறிக்கோள்களுடன் இயங்கும் கிறித்துவ சபைகளும் உள்ளன.[3]

சிறுபான்மையினர் அந்தஸ்துதொகு

இந்தியாவில் முஸ்லீம்கள், கிறித்துவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், பார்ஸிகள் ஆகிய ஐந்து மதத்தினருக்கு சிறுபான்மையினர் அந்தஸ்து இருந்து வருகின்றது. 2014 ஜனவரியில் சமண மதத்தினருக்கும் (ஜைன மதம்) தேசிய அளவில் சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்க திட்டமிடப்பட்டது.[4]


மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு