இந்தியாவில் வாழும் உரிமை

உயிர் வாழும் உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 21-வது பிரிவு இந்தியக் குடிமக்களுக்குத் தருகிறது. இதன்படி சட்டம் வகுத்துள்ள வழிமுறை அல்லாமல் வேறேந்த வழியிலும், எவர் தம் உயிரையும், சுதந்திரத்தையும் பறித்திடல் கூடாது. எது ஒரு மனிதனின் வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் அனுபவிப்பதில்லை சட்டத்தினால் உருவாக்கப்பட்ட வழிமுறைப்படி தலையிட அரசுக்கு அதிகரம் வழங்குவதாகவும், கொள்ளலாம். எனினும் நீதிமன்றங்கள் இப்பிரிவின் மூலமாக உயிர் வாழும் உரிமையை நாட்டுகின்றன.

தொடர்புடைய வழக்குகள்

தொகு

மேனகா காந்தி எதிர் இந்திய அரசு (ஏ.ஐ.ஆர் 1978, எஸ். சி. 597) வழக்கில் தனி நபர் வாழ்க்கையை அனுபவிக்கத் தேவையான உரிமைகளை அரசு வழங்கிட வேண்டுமென்பது கடமையாக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக உடல் நலத்துக்கும், மருத்துவ சிகிச்சை பெறுவதற்குமான உரிமை 21-வது பிரிவின் வரையறைக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

பரமானந்த கட்டாரா எதிர் இந்திய அரசு (ஏ.ஐ.ஆர் 1989, எஸ்.இ.2039) வழக்கில் விபத்துக்குள்ளான நோயாளிக்கு விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கான வழிமுறை நெறிகளைக் கடைபிடிக்கவில்லை என்ற காரணத்துக்காக ஒரு தனியார் மருத்துவர் சிகிச்சை அளிக்க மறுத்ததைக் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது. செய்முறை நெறிகள் பின்பற்றப்பட்டதா இல்லையா என்பதைக் கருத்தில் கொள்ளாமல் உடனடியாக மருத்துவ உதவியும், சிகிச்சையும் அளிக்க உச்ச நீதிமன்றம் மருத்துவ நிலையங்களுக்கு உத்தரவிட்டது.

இதுபோன்ற ஹக்கிம் ஷேக் என்பவர் விபத்துக்குள்ளாகி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையை அணுகிய போது படுக்கைகள் இல்லை என்ற காரணத்துக்காக அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. வேறு வழியின்றி தனியார் மருத்துவமனையில் அனுமதித்துக்கொண்டு சிகிச்சைக்காக அவர் பெரும் தொகை செலவழித்தார். மருத்துவமனையின் மனப்பான்மையால் துன்பத்துக்குள்ளான அவருக்கு அரசினால் சிகிச்சை தரவேண்டிய ஆரோக்கியத்தின் முக்கிய தேவையான சிகிச்சை பெறும் உரிமை மறுக்கப்பட்டது. உயிர் வாழும் உரிமை மறுக்கப்பட்டட்தென்று உச்ச நீதிமன்றம் இவ்வழக்கை ஏற்று ரூ.25,000/- இழப்பீடு வழங்கியது (ஏ.ஐ.ஆர் 1966, எஸ்.இ.1426)

மனித உறுப்பு மாற்றுச் சட்டம் 1994

தொகு

மனித உறுப்புகளின் தானம் வியாபார ரீதியில் நடப்பதைத் தடுப்பதற்காக மனித உறுப்பு மாற்றுச் சட்டம் 1994-ல் அமலாக்கப்பட்டது. இச்சட்டத்தின்படி நெருங்கிய உறவினர்கள், (பெற்றோர்கள், தம்பிகள், சகோதர சகோதரிகள்) உறுப்பு தானம் செய்யலாம். இச்சட்டத்தின் பிரிவு 9(3)-ன் படி நெருங்கிய உறவினர் அல்லாதவர்களும் நோயாளிடம் கொண்டுள்ள அன்பு, பாசப்பிணைப்பு மற்றும் இதர சிறப்பு தானத்தை அங்கிகரிக்கும் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. தானம் செய்பவர் உரிய அங்கிகாரத்தை மாநிலம் அங்கிகரிக்கும் குழுவிடம் பெற வேண்டும். இக்குழு திறமையான செயல்பட்டால் மனித உறுப்பு வியாபாரம் குறித்து காவல்துறை சரியான நடவடுக்கை எடுக்க இயலாது. இது தொடர்பாக அதிகாரம் கொண்ட குழுவோ அல்லது பாதிக்கப்பட்ட நபரோ நீதிமன்றத்தில் புகார் செய்தால் அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்படும்.

மன நோயாளிகளின் உரிமைகள்

தொகு

மாநிலச் சட்டம் 1987 மன நோயாளிகளின் உரிமைகளை கூறுகிறது. இச்சட்டம் 22.05.87-ல் அமலுக்கு வந்ததது. இச்சட்டத்தின் படி மன நோயாளிகளை சிறையில் வைக்க அனுமதி இல்லை. இந்தியாவில் மே 22-ம் தேதி மனநல நாளாக அனுசரிக்கப்படுகிறது. 1996-ல் பீகார் மாநிலத்தில் பாட்னா உயர்நீதிமன்றம் பீகார் மாநில சிறையில் வாடிய பல நோயாளிகளை ராஞ்சி மனநல காப்பகத்திற்கு அனுப்பும்படி உத்தரவிட்டது. மனநோயாளிகளின் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டால் அந்த மனநோயாளிகளுக்கோ அல்லது அவரது குடும்பத்தினருக்கோ மாநில அரசு நஷ்டஈடு தர வேண்டுமென்று அவ்வாறு வழங்கப்பட்ட தொகை தவறு இழைத்த அதிகாரியின் சம்பள்த்தில் பிடித்தம் செய்ய வேண்டும் எனவும் தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.

சில ஆண்டுகளுக்கு முன்பு இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மனநோயாளிகள் பலர் விலங்கிடப்பட்டு இருந்த சூழ்நிலையில் திடிரென்று நெறுப்பு பற்றிக்கொண்டதால் அனேகர் தீயில் கருகீ உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகள் உரிய அங்கீகாரத்துடன் இயங்கவேண்டுமெனவும் மனநோயாளிகளுக்கு வைத்தியம் செய்பவர்களை தீவிரமாக கண்காணிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டது.