இந்தியாவும் கூட்டுசேரா இயக்கமும்

நவீன இந்தியாவின் வரலாறு
குறித்த தொடரின் அங்கம்
விடுதலைக்கு முன்பு
பிரித்தானிய இந்தியப் பேரரசு (1858–1947)
இந்திய விடுதலை இயக்கம் (1857–1947)
இந்தியப் பிரிவினை (1947)
விடுதலைக்குப் பின்பு
இந்தியாவின் அரசியல் ஒருங்கிணைப்பு (1947–49)
மாநில மறுசீரமைப்புச் சட்டம் (1956)
கூட்டுசேரா இயக்கம் (1956– )
பசுமைப் புரட்சி (1970கள்)
இந்தியப் பாக்கித்தான் போர்
நெருக்கடி நிலை (1975–77)
இந்தியாவின் பொருளியல் தாராளமயமாக்கல்
2020களில் இந்தியா
இவற்றையும் காண்க
இந்திய வரலாறு
தெற்காசிய வரலாறு

புதியதாக விடுதலை பெற்ற மற்றும் குடிமைப்பட்ட நாடுகள் பன்னாட்டு பன்முகப்பட்டகூட்டுசேரா இயக்கத்தை உருவாக்கிட இந்தியா முதன்மை பங்களித்தது.

கூட்டுசேரா இயக்கத்தின் துவக்கங்கள் தொகு

அணி சேராமை இந்தியாவின் குடிமைப்பட்ட கால பட்டறிவினாலும் வன்முறையற்ற விடுதலை இயக்கத்தின் தொடர்ச்சியாகவும் அமைந்தது; பன்னாட்டளவில் பனிப்போரால் பாதிக்கப்பட்டிருந்த உலக சூழலில் தனது எதிர்காலத்தை தானே முடிவெடுக்கும் திண்மை உடையதாக இருந்தது. மேற்கத்திய முதலாளித்துவத்திற்கும் கிழக்கத்திய பொதுவுடமைக்கும் இடைப்பட்ட நிலையை விரும்பியது. ஜவஹர்லால் நேருவும் அவருக்குப் பின் வந்தோரும் பன்னாட்டளவில் எந்தவொரு அதிகார மையத்துடனும் அணி சேராது, முக்கியமாக ஐக்கிய அமெரிக்காவுடனும் சோவியத் உருசியாவுடனும், சுதந்தரமாக செயல்பட கூட்டுசேராக் கொள்கையை பரிந்துரைத்தனர். பன்னாட்டுப் பிணக்குகளைத் தீர்க்க வன்முறை தவிர்த்தலையும் பன்னாட்டு கூட்டுறவையும் பரிந்தனர். 1940களிலிருந்தே இந்திய வெளியுறவுக் கொள்கைகளின் சிறப்பியல்பாக அணி சேராமை இருந்து வந்துள்ளது.


"அணி சேராமை " (Non-Alignment) என்ற சொல்லாடல் 1953ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அவையில் வி. கே. கிருஷ்ண மேனன் உரையாற்றியபோது பயன்படுத்தினார். இதனையே பின்னர் இந்தியப் பிரதமர் நேரு 1954ஆம் ஆண்டில் இலங்கையில் கொழும்பில் நிகழ்த்திய உரையொன்றில் குறிப்பிட்டார். இந்த உரையின்போது இந்திய-சீன உறவுகளுக்கு வழிகாட்டுதலாக சீனப் பிரதமர் சூ என்லாய் பரிந்துரைத்த பஞ்சஷீல் எனப்பட்ட ஐந்து தடுப்புக்காப்புகளைக் குறிப்பிட்டார். இந்த ஐந்து கூறுகளே பின்னர் கூட்டுசேரா இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளாகவும் அமைந்தது. அவை:

  1. ஒவ்வொருவரின் நிலப்பகுதி எல்லைகளையும் ஆளுமையையும் ஒருவரொருக்கொருவர் மதிப்பது
  2. தங்களுக்குள் ஆக்கிரமிக்காதிருத்தல்
  3. உள்நாட்டு விவகாரங்களில் ஒருவருக்கொருவர் தலையிடாதிருத்தல்
  4. சமநிலை பேணல் மற்றும் ஒருவருக்கொருவர் உதவி
  5. அமைதியாக கூடிவாழ்தல்

ஜவஹர்லால் நேருவின் கருத்துக்கள் புதியதாக விடுதலை பெற்ற நாடுகளிடையே பன்னாட்டளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்த்தது. கூட்டுசேரா இயக்கத்தின் மூலம் மூன்றாம் உலகின் புதிய தலைமையாக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு