இந்திய அம்பேத்கரிய கட்சி

இந்திய அம்பேத்கரிய கட்சி (Ambedkarite Party of India) என்பது பி. ஆர். அம்பேத்கர் கொள்கையினை மையமாகக் கொண்ட இந்திய அரசியல்கட்சி ஆகும். இக்கட்சி ஏப்ரல் 14, 2013இல் நிறுவப்பட்டது, இதன் தலைமையகம் நாக்பூரில் உள்ளது.[1] இந்திய அம்பேத்கரியக் கட்சியின் தேசியத் தலைவர் விஜய் மான்கர்.[1]

2014 இந்திய பொதுத் தேர்தலில் இஅக 34 வேட்பாளர்களை நிறுத்தியது. இவர்கள் மொத்தமாக 185,095 வாக்குகளைப் பெற்றனர் (நாடு தழுவிய வாக்குகளில் 0.03%).[2] இக்கட்சி 2016 கேரளச் சட்டமன்றத் தேர்தலில் 5 இடங்களிலும்[3] 2017 கோவா சட்டமன்றத் தேர்தலில் ஓர் இடத்திலும் போட்டியிட்டது.[4] 2017 நாசிக் நகராட்சித் தேர்தலில் புரோகாமி லோக்ஷாஹி அகாடி கூட்டணியில் பங்கேற்றது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Ambedkarite Party of India. Press Release பரணிடப்பட்டது 3 மார்ச்சு 2016 at the வந்தவழி இயந்திரம், July 2, 2014.
  2. Partywise performance and List of Party participated, Election Commission of India.
  3. Kerala Assembly Elections - Results Summary—2016.
  4. Srividhya Iyer, "Goa Election Results 2017 on Aaj Tak", India.com, March 12, 2017.
  5. Tushar Pawar, TNN, "Alliance led by ex-cop to contest 77 seats", Times of India, February 3, 2017.